சினிமா

அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து

திமுக அமைச்சர்கள் சிலரின் பேச்சுக்கள் அத்துமீறல் என்பதைத் தாண்டிப் பல ஆபத்துகளைக் கொண்டவை.   ஹைலைட்ஸ்: துரைமுருகன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் பேச்சுக்கள் சர்ச்சைகளையும் ஆட்சிக்குக் கெட்ட பெயரையும் கொண்டுவருகின்றன. அமைச்சர் நாசரின் பேச்சு பகுத்தறிவுக்கும் மதச்சார்பின்மைக்கும் முரணாக உள்ளது. பிகார் மாநிலத்தவர்களைப் பற்றி அமைச்சர் நேரு இழிவாகப் பேசினார். திமுக அரசின் செயல்பாடுகள் பல முனைகளிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில் அதன் அமைச்சர்கள் சிலர் பேசும் பேச்சுக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன் ஆட்சிக்குக் கெட்ட பெயரையும் கொண்டுவருகின்றன. சர்ச்சைகள், கெட்ட பெயர்களையெல்லாம் தாண்டி, இந்தப் பேச்சுக்கள் சிலரை ஆழமாகக் காயப்படுத்துவதும் இந்தப் பேச்சுக்களுக்குப் பின்னால் இருக்கும் மனப்போக்கும்தான் இதிலுள்ள முக்கியமான பிரச்சினைகள்.மிக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் பேச்சு வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் திமுகவின் தற்போதைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று. பரவலான பாராட்டைப் பெற்ற திட்டம் இது. எனினும், சென்னையில் இலவசப் பயணம் மேற்கொள்ளும்…
Read More
துரத்தும் தோல்விகள்: பரிகார பூஜைக்குத் தயாராகும் சசிகலா? முக்கியமான அரசியல் சக்தியாக விளங்கிவந்த சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இறங்குமுகம்தான்.   ஹைலைட்ஸ்: சசிகலாவின் கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. குடும்பத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்று சசிகலா தன் உறவினர்களிடம் கூறியிருக்கிறார் என்று தெரிகிறது. தை மாதத்திற்குப் பிறகு பரிகார பூஜைகள் நடத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. ‘ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’ என்பார்களே! கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவின் நிழலாக இருந்து தமிழக அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இவர் செயல்பட்டுவந்ததை நாடு நன்கறியும். சசிகலாவின் ஒரு நிமிடப் பார்வைக்காக அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் எனப் பலரும் நாள் கணக்கில் காத்திருந்த காலங்கள் உண்டு. ஆனால் என்றைக்கு ஜெயலலிதா இறந்தாரோ அன்றுமுதல் இவருக்கு இறங்குமுகம்தான்.சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைவாசம், எடப்பாடியின் துரோகம், குடும்பத்தினரின் குத்து வெட்டு, தினகரனின் தனி…
Read More
  அண்ணாமலைக்கு எதிராகப் புயல்: கொதிக்கும் கமலாலய சீனியர்கள் அதிரடி அரசியல் செய்துவரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்குக் கட்சிக்குள் எதிர்ப்பு நிலவுகிறது.   ஹைலைட்ஸ்: அண்ணாமலையின் அசுர வேக வளர்ச்சியை மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்கள் அண்ணாமலையுடன் இணைந்து செயல்படுவதில்லை. கட்சிக்காகப் பாடுபட்ட மூத்தவர்களை அண்ணாமலை போன்றவர்கள் கொஞ்சமும் மதிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ‘பொது வெளியில் புலி ; கமலாலயத்தில் எலி’. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள் அந்த கட்சியின் மூத்த புள்ளிகள். கூடவே இந்த மாஜி ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக டெல்லிக்கு புகார் கடிதங்களையும் சீனியர்கள் அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக் கட்டங்களில் பத்தோடு பதினொன்றாவது கட்சியாகத்தான் பாஜகவும் இருந்தது. தமிழிசை தலைவரான பிறகே அந்தக் கட்சி ஜனரஞ்சக வடிவம் எடுத்தது. நாள் தவறாமல் அவர் எதையாவது மீடியாக்களில் கொளுத்திப்போட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து வந்த முருகனும்…
Read More
கோவையை கைப்பற்றும் திமுக.. பயத்தில் எஸ்.பி வேலுமணி.. ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி.. எம்ஜிஆர் காலம்தொட்டே அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. பின்னர் செல்வி ஜெயலலிதாவின் காலத்தில் கோவை அதிமுகவின் எங்கு கோட்டையாகவே மாறியது. பின்னர் அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவிற்கு வலுவான தலைமை இல்லாததால் இனி பெரிய அளவில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் தமிழகத்தின் தனக்கான தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பாஜகவும் கொங்கு மண்டலத்திலேயே தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் கொங்குவில் பாஜகவின் அரசியல் கணக்கு வேலை செய்ய தொடங்கியுள்ளது. இதே நேரத்தில் அதிமுக-பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் கொங்கு மண்டலத்தில் இக்கூட்டணி வெற்றியை அறுவடை செய்துள்ளது. திமுக ஆட்சியை…
Read More
தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி.! அல்லு அர்ஜூன்பேட்டி!

தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி.! அல்லு அர்ஜூன்பேட்டி!

டிசம்பர் 17- ஆம் தேதி வெளியாகவுள்ள புஷ்பா: தி ரைஸ் படத்தின் முன் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்பதிப்பின் முன்வெளியீட்டுக்காக தமிழ் சினிமா பிரபலங்களுடன், நடிகர் அல்லு அர்ஜீன், உட்பட படக்குழுவினர் சென்னையில்  பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் பேசியதாவது… அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், இயக்குநர் சுகுமார் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அல்லு அர்ஜூன் இங்கு சென்னையில் தி நகரில் தான் வளர்ந்தார். சின்னக்குழந்தையிலேயே ஒழுக்கத்தில் சிறந்தவராக இருந்தார். இந்தப்படம் காட்டுக்குள் அதிகம் படமாக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பா வெற்றிப்படமாக இப்படம் இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும். எல்லோருக்கும் வாழ்த்துகள். லைகா புரடக்சன்ஸ் சார்பாக தமிழ்க்குமரன் பேசும்போது,.… பிரமாண்ட படங்களை வழங்குவதில் லைகா புரடக்சன்ஸ் பெருமை கொள்கிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான புஷ்பா படத்தை நாங்கள் வெளியிடுவது பெருமை. இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. படக்குழுவினருக்கு லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன்…
Read More
ரஜினி சாரை வைத்து படமெடுக்க எனக்கும் ஆசை இருக்கிறது.

ரஜினி சாரை வைத்து படமெடுக்க எனக்கும் ஆசை இருக்கிறது.

இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்). இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா ஆகியோர் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்கள். இந்திய திரைத்துறையில் மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் “RRR” திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள்…
Read More
அமைச்சரவை மாற்றம் ? ஸ்டாலின் மனமாற்றம் ! என்ன காரணம் !! முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் ஒரு ரிப்போர்ட் வந்ததாகவும், அதை அடிப்படையாக வைத்து 2 வித முடிவுகளை அவர் எடுக்க போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிஞ்சு வருது திமுக ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த சில நாட்களில் இருந்தே, அமைச்சரவை மாற்றம்ங்கிற செய்தி கசிஞ்சிகிட்டே வருது.. அமைச்சர்களில் சிலர் மாற்றப்பட உள்ளதாகவும், அதனால் சீனியர்கள் பலர் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருது. இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்பட்டது.. ஒன்று, சீனியர்களுக்கு இலாகாவை குறைத்து தந்ததால் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தங்கள் பணிகளை சரியாக செய்வதில்லை என்றும் கூறப்பட்டது.. மற்றொன்று சீனியர் அமைச்சர்களே சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டி கொண்டதால், அமைச்சரவை மாற்றப்படலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அப்படி எதுவுமே நடக்கலை.. ஏன்னா, மிகக்குறுகிய காலத்தில் அமைச்சர்களை மாற்றுவது கட்சிக்கு நல்லதல்ல என்பது மட்டுமல்ல, அமைச்சர்கள் நியமனத்தில்…
Read More
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம்… 4 வருடத்தில் 4 ஆலோசகர்களுக்கு 4 கோடி சம்பளம்… ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்!! கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சி ஏராளமான ஊழல்களும் முறைகேடுகளும் நடந்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களையும் முறைகேடுகளையும் களைய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,142 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் 73 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 322.62 கோடி ரூபாய் மதிப்பிலான 56…
Read More
விஜய் சேதுபதி கதை சொல்லும் ‘கடைசீல பிரியாணி’…

விஜய் சேதுபதி கதை சொல்லும் ‘கடைசீல பிரியாணி’…

நிஷாந்த் கலிதிண்டியின் கடசீல பிரியாணி முழுக்க முழுக்க சினிமா விறுவிறுப்பும், ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை கவர்ந்து இழுத்துச் செல்லும். இருண்ட காமிக் அதிர்வுடன் கூடிய த்ரில்லர் போல இந்த படம் விரிவடைகிறது மற்றும் வண்ணமயமான கதாபாத்திரங்களால் நிரம்பியுள்ளது. பெரிய பாண்டியின் கொதித்தெழுந்த ஆத்திரம் இருந்தபோதிலும், பாண்டி சகோதரர்கள் தங்கள் லீக்கிலிருந்து வெளியேறும் ஏதோவொன்றில் இறங்கிய புத்திசாலித்தனமான மனிதர்களாக வருகிறார்கள். எதிரி மிகவும் வன்முறையான ஒரு மனிதன், அவர் ஒரே நேரத்தில் பயங்கரமாகவும் கேலிச்சித்திரமாகவும் உணர்கிறார். ஒளிப்பதிவு இயக்கவியல் (கதாப்பாத்திரங்களுடன் கேமரா நகரும் போது, ​​நாம் அவர்களுடன் சேர்ந்து நகர்வதைப் போல உணர்கிறோம்) மற்றும் மிகவும் கச்சிதமாக (ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப் மற்றும் ஆசீம் முகமது உருவாக்கும் காட்சி தொனி பளபளப்பாகவோ அல்லது மோசமான புதுப்பாணியானதாகவோ இல்லை, ஆனால் உணர்கிறது. ஃபிலிம் ஸ்டாக் மீது யாரோ மணல துகள்கள் கொண்ட காகிதத்தை தேய்த்தது போல). கதாபாத்திரங்கள் அனைத்தும் கரடுமுரடான விளிம்புகள்…
Read More

ஜாக்கிரதை, நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது மட்டும் நிச்சயம். நம்மில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.   அண்மையில் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள ஒரு முடிவு நமது நாட்டின் ஜனநாயக உணர்வுகளின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கிறது. மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசு என்பது ஆபிரஹாம் லிங்கன் ஜனநாயக அரசுக்குக் கொடுத்த அற்புதமான விளக்கம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை விட்டுச் சென்ற பிறகு நமக்கு அமையும் அரசு இத்தகைய ஜனநாயக உணர்வு கொண்ட அரசாக இருக்கும் என்று நாம் நம்பினோம். கடந்த 70 ஆண்டுகளில் இந்த நம்பிக்கை பல முறை ஆட்டம் கண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது.இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. 40 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்கிறது. பெரும்பான்மை பெறும்…
Read More