19
Apr
உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) கொண்டாடும் உலக அறிவுசார் சொத்து தினம் 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு, முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட சேவைகளை வழங்கி வரும் கிரியா லா நிறுவனம், ‘ஐபி அண்ட் ஸ்போர்ட்ஸ்: ரெடி, செட், இன்னோவேட்' தலைப்பின் கீழ் அரை நாள் நிகழ்வை சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்தியது.இந்த நிகழ்வில் நிறுவனங்கள், சட்ட நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் முனைவோர் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டு துறையில் அறிவுசார் சொத்து உரிமையின் (IP) அதிகரித்து வரும் முக்கியத்துவம் குறித்து நிகழ்வில் முக்கியமாக கலந்துரையாடினர். குறிப்பாக வீரர்களின் உரிமைகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் வருமானமயமாக்கல் முறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஜி. ராஜாராமன், சோமதேவ் தேவவர்மன், சுதா ஷா, டாக்டர் சுப்ரஜித் சந்தா, சித்தார்த் ராமன், வசந்த் பரத்வாஜ் மற்றும் விஷால் ஜெய்சன் ஆகியோர்…
