கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கிய ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!

1973 முதல் 2026 வரை திரைத்துறையில் பங்களித்த 125 நடன இயக்குநர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். முன்னணி நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தனது மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், கலைத் துறையில் பங்களித்து வரும் கலைஞர்களைக் கௌரவிக்கும் நோக்கிலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, அகாடமியின் பிரம்மாண்டமான ‘டான்ஸ் டான் 2’ நிகழ்ச்சி ஜூலை 25 அன்று சென்னை வேல்ஸ் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக இதுவரை இல்லாத வகையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பை ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மேற்கொண்டது.

இந்த நிகழ்வில், 1973 முதல் 2026 வரை தமிழ்த் திரைத்துறையில் பங்களித்த 125 நடன இயக்குநர்கள்* மற்றும் *தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் ஒரே மேடையில் கௌரவிக்கப்பட்டனர். மேலும், ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மாணவர்களின் விறுவிறுப்பான மற்றும் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நிகழ்ச்சியில் பேசிய நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் கூறுகையில், “பல ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் நான், நமக்கு முன்னர், நம்முடன் மற்றும் நமக்குப் பின்னர் பணியாற்றிய நடன இயக்குநர்கள் குறித்த ஒரு விரிவான தேடலை மேற்கொண்டேன். பல்வேறு ஆதாரங்களை சேகரித்தபோது, 1973 முதல் 2026 வரை திரைத்துறையில் நடன இயக்குநர்களாக பங்களித்த 125 பேர் இருப்பது தெரியவந்தது.

அவர்களில் சிலர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திரைப்படங்களிலும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நடனப் பள்ளிகளை நடத்தி வரும் 38 ஆசிரியர்களையும் ஒரே மேடையில் கௌரவிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்த 125 நடன இயக்குநர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தற்போது போதிய வாய்ப்புகள் இல்லை. அதேபோல், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நடனப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த நிகழ்வின் மூலம் நடன இயக்குநர்களுக்கு புதிய வாய்ப்புகளும், நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரமும், ஊக்கமும் கிடைத்தால் அதுவே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

Related posts:

அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ படங்கள் பார்த்து தீபாவளியை கொண்டாடுங்கள்” என்கிறார் நடிகர் கவின்.!

செல்போன் டவர் வைக்க 80 லட்சம் அட்வான்ஸ்! மாசம் 50,000 வாடகை! உஷார்!!

தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரள...

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ!

மாமல்லபுரம் மாசிமக திருவிழா..குவிந்த இருளர் பழங்குடியின மக்கள்..!

காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!