‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆக்ஷன் நாயகன் வித்யுத் ஜமால், புகழ்பெற்ற யோகா குரு தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளோடு இந்த டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், பிரிந்துபோன போர்வீரர்களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் போர்க்களத்தில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மர்மம் நிறைந்த சுன்-லி (கலினா லியாங்), அடுத்த வேர்ல்ட் வாரியர் டோர்னமென்ட்டில் பங்கேற்க அவர்களை அழைக்கிறார். விதி மற்றும் கோபத்துடன் மோதும் இந்த கொடூரமான போட்டியின் பின்னால் உயிருக்கு ஆபத்தான ஒரு சதித்திட்டம் மறைந்துள்ளது. அது ரியூ மற்றும் கெனை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்கவும், தங்களின் கடந்தகால இருண்ட நினைவுகளை எதிர்கொள்ளவும் கட்டாயப்படுத்துகிறது. அவர்கள் தோல்வியடைந்தால் ஆட்டம் முடிந்தது.

இயக்குநர் கிடாவோ சகுராய் இயக்கியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’, ஆர்கேட் விளையாட்டின் பரபரப்பை ஹடூகன், ரவுண்ட்ஹவுஸ் கிக்குகள் மற்றும் ரசிகர்களின் விருப்பமான கதாபாத்திரங்களுடன் வெள்ளித்திரைக்கு கொண்டு வருகிறது.

Related posts:

அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப் !

தமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களில் பொருந்திப் போவார்கள்?

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான 'மின்மினி'யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்!

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் " சிறகன் " ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது !

விதார்த் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு !

சென்னையின் முதல் ஞாபக சிகிச்சை மையம் ! காவேரி மருத்துவமனை துவங்கியுள்ளது !!

நேசிப்பாயா--விமர்சனம் !

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி வெளியிட்டார்: பிரபல பாடகி சாருலதா மணி இசை அமைத்து எழுதிய புதிய பாடல் "தென்றலில்"