கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.முதல்-அமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது என அவர் கூறினார்.
மேலும் அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:-
வரியே வசூலிக்காவிட்டால் எப்படி ஆட்சி நடத்த முடியும். சரியான வரியை வசூலித்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1 சதவீதம் ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
10 ஆண்டுகளில் வரி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி வருவாயும் 33 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 5 ஆண்டுகளில் மறைமுக கடன் சுமார் ரூ.39 ஆயிரம் கோடி வாங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசால் வாங்கப்பட்ட மறைமுகக் கடன் ரூ.39,074 கோடி குறித்து சரியான விளக்கங்கள் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிந்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது. 4 வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் வருகிறது. மாநில வரி, வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரி பங்கீடு, திட்ட மானியம் ஆகிவையே வருவாயாகும். இதில், மாநில வரி வருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. மதுபான வருவாயை கலால் வரியாக எடுக்காமல் வாட் வரியாக எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் வரி வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வாகனளுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மின் கட்டணமும் உயர்த்தப்படாம்ல் உள்ளது.பொதுவாக ஒரு துறையில் அல்லது ஒரு நிறுவனத்தில் கடன் அதிகரித்துள்ளது என்றால், அந்த கடனை அடைக்க மேற்கொண்டு கடன் வாங்கி கட்டும். அதாவது நிறுவனங்கள் பங்கு விற்பனை, கடன் பத்திரங்கள் மூலம் திரட்டுவார்கள். தங்களது பொருட்களின் மீதான விலையை அதிகாரிப்பார்கள். இது மூலம் தங்களது வருவாயினை அதிகரிக்க திட்டமிடுவார்கள்.
அந்த வகையில் தற்போது தமிழக அரசு மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறையில் கடன் அதிகரித்திருப்பதாக கூறியிருப்பது, பல தரப்பிலும் அடுத்தடுத்து அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இது மின்சார கட்டணங்களை உயர்த்துமா? போக்குவரத்து கட்டணகளை உயர்த்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.தமிழகத்தில் அரசு பேருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடினால் போக்குவரத்து துறைக்கு 59.15 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக நிதித்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தார். அது மட்டுமே அல்ல 26 அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளன. குறிப்பாக மின்சாரம், போக்குவரத்து துறை உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளன. தமிழகத்தில் மொத்த கடனில் 10%, மின்சாரம் மற்றும் போக்குவரத்து செலவிடப்படுகிறது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழகத்தில் வாகன வரி விகிதமும் கடந்த 15 ஆண்டுகளாகவே மாற்றப்படாமல் உள்ளது. இது மற்ற மாநில அரசுகளோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் மிக குறைவு. மின் சார துறையிலும் குறைவு தான் என்றும் பிடிஆர் கூறியுள்ளார்.
* ஜீரோ வரியில் ஏழை மக்கள் பயனடைவது இல்லை, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மட்டுமே பயனடைகின்றனர்; வரியில்லா பட்ஜெட் என்பது வளர்ந்த நாடுகளில் மட்டுமே சாத்தியம்
* உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* அரசிற்கு வர வேண்டிய பணம் யார் கைக்கு சென்றது? அரசாங்கத்தின் கைக்கு வராத பணம் பணக்காரர்களின் கையில் சேர்கிறது
* சரியான வரியை சரியான நபர்களிடம் எடுத்து மருத்துவம், தொழிற்சாலை என வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
* வாழ்வதற்கு சிறந்த இடமாக சொல்லப்படும் சுவீடன், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகள் 30 சதவீத வரியை விதிக்கிறது.
* 2019 – 20-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1.89 சதவீதமாகவே இருந்தது.
* பண மதிப்பிழப்பு, கொரோனா காலத்தில் தமிழகத்தில் குறைவான பாதிப்பே ஏற்பட்டது.
* பொறுப்பான அரசு என்பது வளர்ச்சி, சமூக நீதிக்கு உதவ வேண்டும்.
* உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தமிழகம் அதிகம் பாதிக்கப்படும்.
* பணமதிப்பிழப்பு, முறையற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவையே பொருளாதார சுணக்கத்திற்கு காரணம்
* பேரிடர்களால் பல மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிகம் பாதிக்கப்படுகிறது.
* கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப தலைக்கு ரூ.50,000 முறைகேடு என உள்ளது.
* வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.
* மின்சார வாரியத்தின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது.
* குடிநீர் வடிகால் வாரியத்தின் கடன் ரூ.2,890.26 கோடியாக உள்ளது.
* ஒன்றிய அரசின் உதய் மின்திட்டத்தை அமல்படுத்தியதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.48,500 கோடி இழப்பு.
* இந்த மோசமான நிதி நிலைமையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் தாண்டி வரும்.அரசியலில் சக்தி, மேலாண்மையில் திறமை ஆகிய இரண்டும் சரியான அரசாங்கத்தை வழிநடத்தும். நிதி நிலைமையை 5 வருட ஆட்சிக்குள் சீரமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது; எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடமாட்டோம்.
*வாக்களித்த மக்களின் தேவையை அறிந்து அரசு செயல்படும். தி.மு.க. அரசு மக்களுடன் இணைந்து செயல்படும்.
* குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள், ஆனால் அதில் நன்மை தான் உள்ளது.
* தமிழ்நாடு பணக்கார மாநிலம்; இந்தியாவுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அதிகமான சொத்துக்கள் உள்ளன என கூறினார். வெளிநாடுகளில் வரி அதிகமாக விதிக்கப்படுவதால் மக்கள் நல திட்டங்கள் வெகுவாக செயல்படுத்தப்படுகிறது . கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் மட்டும் அதிகரிச்சிருக்கு . மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதி 30 % குறைந்துள்ளது . 2014 – க்கு பிறகு மின்சார கட்டணமும் இதுவரை உயர்த்தப்படாமல் இருக்குது . அதேபோல் , சொத்து வரியையும் பல ஆண்டுகளாக உயர்த்தலை . கடந்த ஆட்சியில் சரியான நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அரசுக்கு ரூ .2577 கோடி இழப்பு ஏற்பட்டுருக்கு. .
கடன் சுமையை குறைக்க என்ன வழி? பொதுவாக கடன் சுமையை குறைக்க செலவினங்களை குறைக்க வேண்டும். வருவாயை அதிகரிக்க வேண்டும். அப்படியிருக்கையில் வருவாயை அதிகரிக்க இத்துறைகளில் கட்டண அதிகரிப்புகள் செய்யப்படலாம் என்ற கருத்துகளும் நிலவி வருகின்றன. அனைத்துக்கும் தயார்? இதற்கிடையில் பொருளாதாரத்தினை மீட்க அதிரடியான மாற்றங்களால் மட்டுமே சாத்தியம். தமிழக அரசு அனைத்து விதமான அதிரடியான மாற்றங்களுக்கும் தயார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட போகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆக மொத்தத்தில் வரவிருக்கும் பட்ஜெட்டில் அதிரடியான பல அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.