06
Jan
உலகிலேயே நிலத்தடி நீரை 70% பயன்படுத்தும் நாடு இந்தியா. கிராமப்புறக் குடிநீர்த் தேவையில் 90%, நகர்ப்புற குடிநீர்த் தேவையில் 50%, சாகுபடிக்குத் தேவைப்படும் நீரில் 70% நிலத்தடி நீரைக்கொண்டே பூர்த்திசெய்யப்படுகிறது. அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவில் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகம். ஆனால், ஆண்டுதோறும் பெய்யும் மழையில் வெறும் 8% மட்டுமே சேமிக்கப்படுகிறது. மக்கள்தொகை அதிகரிப்பும் நகர்மயமாதலும் தண்ணீர்த் தேவையை அதிகப்படுத்திவருகிறது. நகரங்களில் பெருமளவிலான தரைப்பரப்பு தார்-சிமெண்ட் சாலைகளாலும் நடைபாதைகளாலும் கட்டிடங்களாலும் மூடப்பட்டு மழை நீர் தேங்க முடியாமல் தடுக்கப்படுகிறது. வெள்ள நீரும் நகரக் கழிவு நீரும் கலந்து ஓடி கடலிலோ, பயன்படுத்த முடியாத அசுத்த சாக்கடையிலோ கலந்து வீணாகிறது. கிராமங்களில் மனிதர்கள் குளிக்கவும் குடிநீர் எடுக்கவும் குளங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆண்டுதோறும் குளங்களையும் குட்டைகளையும் சீரமைத்து, ஆற்று வெள்ளம் கொண்டோ, மழை நீராலோ புதுப்பித்துப் பயன்படுத்தினர். நாளடைவில் அவை வீட்டுக் கழிவுநீரைச் சேமிக்கும் தொட்டியாக மாறின. குட்டைகளில் கொசு உள்ளிட்ட நோய் பரப்பும்…