நிதி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

ஐஓபியின் சில்லறை கடன்களும், ஆன்லைன் வங்கி மற்றும் மொபைல் வங்கி போன்ற பயன்பாடுகளில் கிடைக்கின்றன !

ஐஓபியின் சில்லறை கடன்களும், ஆன்லைன் வங்கி மற்றும் மொபைல் வங்கி போன்ற பயன்பாடுகளில் கிடைக்கின்றன !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) தனது சில்லறை கடன்களை, அதாவது க்ளீன் கடன், நுகர்வு கடன்கள்-சஹாயிகா, கல்வி கடன்கள்-வித்யஜோதி, வித்யா ஜோதி, புஷ்பாகா - வாகன கடன்கள் , நகைகள் மற்றும் ஐஓபி பேஷனுக்கு எதிரான வணிக ரொக்க கடன் ஆகியவற்றை கடந்த வியாழக்கிழமையன்று அறிமுகப்படுத்தியது. ஐஓபியின் சில்லறை கடன்களும், ஆன்லைன் வங்கி மற்றும் மொபைல் வங்கி போன்ற பயன்பாடுகளில் கிடைக்கின்றன என்று அதன் வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் வங்கியின் வலைத்தளம் வழியாக மட்டுமே இந்த கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதேசமயம் ஐஓபி வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளில் ஏதேனும் ஒன்றன் வழியாக விண்ணப்பிக்க முடியும். வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டுக் கடன்களுக்கு PMAY திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க முடியும், அத்துடன் தங்கள் வீட்டுக் கடன்களை மற்ற வங்கிகளிலிருந்து IOB க்கு மாற்ற முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், கடனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஒப்புதலைத் தொடர்ந்தும், குறிப்பு…
Read More
ஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு ?

ஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு ?

ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவைகள் வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது. குறிப்பாக, வரி விகிதங்கள் குறித்த அடுக்குகளை குறைக்கவும் முயற்சிகள் எடுக்குமாறு, இத்துறையினரை, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, 12 சதவீத பிரிவையும், 18 சதவீத பிரிவையும் ஒன்றிணைக்கும் முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பே, இப்படி ஒரு முயற்சி குறித்த பேச்சுகள் வெளிவந்தன. ஆனால், அது நடைபெற வில்லை. இந்நிலையில், இப்போது மீண்டும், இது குறித்த ஆலோசனையில் இறங்கி இருக்கிறது அரசு. இது சம்பந்தமாக மாநிலங்களின் கருத்துக்களும் கேட்கப்படும். இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அடுத்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அப்போது இந்த வரி அடுக்குகளின் ஒன்றிணைப்பு குறித்து, கவுன்சில் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். தற்போது, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் மற்றும் கூடுதல் வரிகள் என பல அடுக்குகளில்,…
Read More
வராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் ?

வராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் ?

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று , சுய வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களாகும் . சுய தொழில் தொடங்குவதற்கு முக்கியத் தேவைகள் , ஆர்வம் , தன்னம்பிக்கை மற்றும் திறமை . ஆனால் , திறமையும் , ஆர்வமும் உள்ளவர்களில் பலரிடம் , தொழில் தொடங்கத் தேவையான நிதி ஆதாரம் இருக்காது . சுய தொழிலில் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் , 2015 - ஆம் ஆண்டு ' பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது . இந்தத் திட்டத்தின் கீழ் , குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொடங்கி நடத்துவதற்குத் தேவையான கடன் உதவிகள் , வங்கிகள் , வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் 💯 குறுங்கடன் நிறுவனங்கள் ஆகியவை மூலமாக மூன்று வகையாக வழங்கப்பட்டு வருகின்றன . சிசு திட்டத்தில் ரூ…
Read More
வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?

வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?

வராக்கடன் வங்கி என்ற நடைமுறை மேலை நாடுகளில் ஏற்கெனவே இருந்து வருகிறது . ஆனால் , இந்தியாவிற்கு இது புதிது . இந்த வராக்கடன் வங்கிக்கு மேலை நாடுகளில் ஆங்கிலத்தில் ' பேட் பேங்க ' என்று பெயர் . தமிழில் எல்லாமே' பேட் பேங்க்' தான்.அதனால வராக்கடன் வங்கின்னே சொல்லலாம். அதென்ன வராக்கடன் வங்கி? அது எப்படி செயல்படும்ன்னு நீங்க கேக்கிறது எனக்கு புரியுது. அதாவது இந்த வராக்கடன் வங்கி மற்ற வங்கிகளின் வராக்கடன்களை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளும் . இதனோட வேலை என்னன்னா அத்தகைய வராக்கடன்களை வசூலிப்பது , சொத்துக்களை விற்று , செலவழித்த பணத்தை திரும்ப பெறுவது மட்டுமே . உதாரணமாக , இந்த வராக்கடன் வங்கி இந்தியன் வங்கியிலிருந்து ரூ 1000 கோடி வராக்கடன்களை அதற்குரிய சொத்துக்களுடன் , 30 சதவிகிதம் தள்ளுபடி செய்து ரூ 700 கோடிக்கு வாங்கும் . இந்தியன் வங்கிக்கு…
Read More
ஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் !

ஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் !

ஆன்லைன் மூலமாகவே உடனடியாக வாகனக் கடன் பெறும் வசதியை ஹெச்டிஎஃப்சி வங்கி ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை வாங்குவதற்கு வங்கி தோறும் வாடிக்கையாளர்கள் நாள் கணக்கில் அலைய வேண்டியிருக்கும். கடன் பெற ஆகும் காலத்தைப் பார்த்தால் கடனே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு அதிலுள்ள விதிமுறைகளும் சரிபார்ப்புகளும் இருக்கும். இதுபோன்ற சூழலில் வாடிக்கையாளர்கள் அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே சுலபமாகக் கடன் பெறும் வசதியை இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி கொண்டுவந்துள்ளது. நெட் பேங்கிங் மூலமாகவே எளிதில் கடன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது நெட்பேங்கிங் வசதியின் மூலமாகவே இக்கடனை வாங்க முடியும். நெட் பேங்கிங் கணக்கை ஓப்பன் செய்து அதில் ‘offers' என்பதை தேர்வு செய்து 'Zip Drive' வசதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் கடன் பெறும் தொகை உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்தவுடன்…
Read More
ஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது?

ஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது?

கொரோனா வைரஸ் பாரபட்சம் இல்லாமல் பலரையும் பாதித்து இருக்கிறது.இதில் பாதிக்கப்படாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வங்கியில் நிம்மதியாக ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) போட்டு வைத்துக் கொண்டு, அதில் இருந்து வரும் வட்டி வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தவர்கள் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சொல்லலாம். இப்போது அவர்கள் எங்கு எந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி பெறலாம் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம். கை கொடுக்கும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்! பங்குச் சந்தை சொதப்பினாலும் பரவாயில்லை! ஒப்பீடுகள் எஸ்பிஐ வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழ் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (Fixed Deposit) கொடுத்திருக்கும் வட்டி விகிதங்களை, அதே 2 கோடி ரூபாய்க்கு ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் என்ன வட்டி விகிதங்கள் கொடுக்கிறார்கள் என ஒப்பிடப் போகிறோம்.இந்த வட்டி விகிதங்கள்…
Read More
பேடிஎம் வாடிக்கையாளரா நீங்க ? அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..?

பேடிஎம் வாடிக்கையாளரா நீங்க ? அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..?

பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிறுவனர் விஜயசேகர் ஷர்மா, சமூக வலைத்தள பக்கங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.தயவுசெய்து எந்த ஒரு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மெசேஜாவது உங்களது வாடிக்கையாளர் தகவல்களை கேட்டு வந்திருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். இவையெல்லாம் மோசடி மெசேஜ்கள், பேடிஎம் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும் என்று கூறிக்கொண்டு உங்களது முழு விபரங்களையும் கேட்டு மெசேஜ் வரலாம். இதை நம்ப வேண்டாம். இது தவிர குலுக்கல் முறையில் உங்களுக்கு பரிசு கிடைக்கிறது என்றும் மோசடியாளர்கள் எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் மூலமாக தகவல் அனுப்புகிறார்கள். இதையும் நம்பவேண்டாம். பேடிஎம் எப்போதுமே இதுபோன்ற தகவல்களை கேட்பதில்லை. எந்த ஒரு அப்ளிகேசனையும் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பேடிஎம் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு காரணம் சமீபத்தில் அதிகரித்துள்ள மோசடிகள்தான் என்று கூறப்படுகிறது. மோசடியாளர்கள்…
Read More
“பேங்க் ஆஃப் பரோடாவின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்யலாம்” ?

“பேங்க் ஆஃப் பரோடாவின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்யலாம்” ?

தலைப்பைப் படித்த உடன் குண்டு தூக்கி போட்டது போல இருந்ததா..? அப்படி என்ன பிரச்சனை வந்து விட்டது..? ஏன் கொல்கத்தா உயர் நீதிமன்றம், பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் உரிமத்தை, தேவைப்பட்டால், மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்யலாம் எனச் சொன்னது..? எந்த வழக்குக்கு, இப்படி ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்? இப்படி அதிரடி காட்டிய நீதிபதிகளின் பெயர் என்ன..? வாருங்கள் எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன் பேங்க் கேரண்டியில் இருந்து தொடங்குவோம். பேங்க் கேரண்டி உதாரணமாக: ராஜா என்பவர் ஒரு உணவகம் நடத்துகிறார். இவர் 1 கோடி ரூபாய்க்கு சமையலறைக்குத் தேவையான புதிய சாதனங்கள் மற்றும் பாத்திர பண்டங்களை, குமார் & கோ கம்பெனியில் இருந்து வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். நம்பிக்கை இல்லை இப்போது ராஜாவின் உணவகத்தை நம்பி, குமார் & கோ சரக்கைக் கொடுக்க முன் வரவில்லை. ஏன் என்று கேட்டால் "உங்களை எனக்கு…
Read More
கடன்களுக்கான தவணை தொகை மூன்று மாதங்களுக்கு மட்டுமே தள்ளிப் போடப்பட்டுள்ளது.?

கடன்களுக்கான தவணை தொகை மூன்று மாதங்களுக்கு மட்டுமே தள்ளிப் போடப்பட்டுள்ளது.?

வீட்டுக் கடன், வாகனக் கடன் ,பர்சனல் லோன் கடன்களுக்கான EMI கட்டும் தொகையானது மூன்று மாதங்களுக்கு தள்ளி மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனை கட்டவே வேண்டாம் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. மூன்று மாதம் தள்ளி கட்ட சொல்லி உள்ளது. வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள் !அது எப்படி ? விரிவாக காண்போம் !! நாம் சுமாராக 120 மாதங்கள் கடன் கட்டுகிறோம் என்றால் அதனை மூன்று மாதங்கள் தள்ளி கொடுத்துள்ளது .123 மாதங்கள் கட்டிக்கொள்ளலாம். ஏப்ரல், மே, ஜூன் - 3 மாதங்களுக்கும் உள்ள தொகையை கடன் தொகை முடியும் மாத கடைசிக்கு பிறகு உள்ள மூன்று மாதங்களில் கட்டிக்கொள்ளலாம். உதாரணமாக 120 மாதங்கள் கட்ட வேண்டுமென்றால் 120 மாதங்கள் கட்டி முடித்துவிட்டு 121, 122, 123 ஆவது மாதங்களாக ஏப்ரல், மே ,ஜூன் 2020ம் ஆண்டுக்கான தொகைகளை கட்டிக்கொள்ளலாம். 2020 ஜூலையில் ஜூலை மாதத்திற்கு உரிய தொகையை கட்டினாலே போதும்.சேர்த்து கட்ட…
Read More
3 மாத தவணை அவகாசம்.? யார் யார் இதற்கு தகுதியானவர்கள்.?எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.?

3 மாத தவணை அவகாசம்.? யார் யார் இதற்கு தகுதியானவர்கள்.?எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.?

கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்தும், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினையும் மேம்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ஆர்பிஐ 3 மாதம் இஎம்ஐ அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. கடந்த மார்ச் 27 அன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, வங்கிகள் மக்கள் செலுத்த வேண்டிய 3 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியது. இதனையடுத்து ஒவ்வொரு வங்கிகளாக தற்போது இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து கொண்டு இருக்கின்றன. இதில் தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியும் இதனை அமல்படுத்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி மார்ச் 1,2020 முதல் மே 31,2020 வரையிலான காலத்திற்கு உண்டான இஎம்ஐ தொகையினை செலுத்த ஹெச்டிஎஃப்சி அவகாசம் கொடுத்துள்ளது. மேலும் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் சில்லறை தவணை கடன் அல்லது வேறு ஏதேனும்…
Read More