19
Jul
இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இரத்ததான வங்கியுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது சென்னை, நம்ம வீடு வசந்த பவன். வசந்த பவன் ஊழியர்களோடு நடக்கும் இந்த ப்ளட் டொனேஷன் கேம்ப்பில் கடந்த இரண்டு வருடங்கள் 50-60 பேர் மட்டுமே இரத்த தானம் செய்திருக்கின்றனர். ஆனால், இந்த வருடம் 200 பேர் இரத்த தானம் செய்திருக்கின்றனர் என்ற விஷயம் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை தலைமை தாங்கி தொடங்கி வைத்தது வசந்த பவன் உரிமையாளர் ரவி அவர்களின் மனைவி சொர்ணலதா. இதுபற்றி சொர்ணலதா பேசுகையில், “இரத்த தானம் நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்றாவது வருடம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து செய்து வருவது மகிழ்ச்சி. அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்வை நடத்தும்போது அதிக மக்களிடம் இது சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதே நோக்கமாகும். சென்னையில் உள்ள எங்கள் ஊழியர்கள் விருப்பப்பட்டு இரத்த தானம் செய்து வருகிறார்கள். இந்த வருடம்…