20
Dec
விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல் ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கேயாரின் கே.ஆர்.இன்போடெயின்மெண்ட் சார்பில் வெளியாகி இருக்கிறது ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம். ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கிறது. அது யாருக்கு கிடைக்கிறது..? எப்படி கிடைக்கிறது…? அதை அந்த கதாபாத்திரத்தால் அனுபவிக்க முடிந்ததா…? அந்தப் பொற்காசுகளை பயன்படுத்துவதில், சொந்தம் கொண்டாடுவதில் எத்தனை சவால்கள் வந்தன…? என்பதே இந்த ஆயிரம் பொற்காசுகளின் கதை. பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் “ஆயிரம் பொற்காசுகள்”. அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார். விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவர்களோடு ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில்…