நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு கோர்ட்டில் வழக்கு கொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. நடிகர்கள் உண்மையான வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்கள். ரீல் வாழ்க்கையில் மட்டும் ஹீரோவாக இருக்காதீர்கள். இந்த வழக்கை தொடர்ந்ததால் அவருக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும்உத்தரவிட்டது.
நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு கோர்ட்டில் வழக்கு கொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. நடிகர்கள் உண்மையான வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்கள். ரீல் வாழ்க்கையில் மட்டும் ஹீரோவாக இருக்காதீர்கள். இந்த வழக்கை தொடர்ந்ததால் அவருக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும்உத்தரவிட்டது.
இந்நிலையில் பலருக்கு இது என்ன வரி, எதற்காக இந்த வரி என பல சந்தேகங்கள் இருக்கும். அதை பற்றிய தெளிவா பாக்கலாம்.
விஜய் தனக்கு விலக்கு கேட்டது வெளிநாட்டில் வாங்கிய காரை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கான வரியை, இந்த வரி எதற்காக விதிக்கப்படுகிறது என பார்க்கலாம்!
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தை இந்தியாவில் செலவு செய்யாமல் வெளிநாட்டில் உள்ள பொருளை வாங்கி இந்தியாவிற்குள் பயன்படுத்தினால் அதனால் இந்தியாவிற்கு வரிநஷ்டம் ஏற்படும். அப்படியாக வரி நஷ்டத்தை ஈடுசெய்ய இந்திய அரசு வெளிநாடுகளில் பொருட்களை வாங்கி அதை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்தால் அதற்கு வரி விதிக்கிறது. பொருளுக்கு ஏற்ப இந்த வரி விதிப்பு மாறுபடுகிறது.
உதாரணமாக இந்தியாவில் கிடைக்காத பொருளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தால் அதற்கு குறைந்த வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் கிடைக்கும் பொருள் வகைகளை வெளிநாட்டு நிறுவனத்தின் ஆடம்பரம் மற்றும் சொகுசை கருதி அதை வாங்கி இறக்குமதி செய்தால் வரி அதிகம், அதே வெளிநாடுகளிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவிற்குள் வைத்து அதை ஒன்று செய்து பொருளாக தயாரித்தால் அதற்கு வரி குறைவு இப்படியான கொள்கையை இந்தியா வைத்திருக்கிறது.
இதன் படி நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு வரி விதிக்கப்படுகிறது. அந்த வரியிலிருந்து தனக்கு விலக்கு வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு தான் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் வாங்கியது முழுவதுமாக வெளிநாட்டில் வடிவமைக்கப்பட்ட கார். அந்த வகை கார்களுக்கு இந்தியாவில் மிக அதிகமாக வரி விதிக்கப்படுகிறது.
வாகங்கனங்களை இங்கே இறக்குமதி செய்ய ரூ30 லட்சம் வரை உள்ள பொருட்களுக்கு 100 சதவீத வரியும், ரூ30 லட்சத்திற்கு மேல் உள்ள பொருட்களுக்கு125 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. விஜய் வாங்கிய காரின் விலை கோடி கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் அதன் காருக்கு அவர் வாங்கிய விலையிலிருந்து அதிகமான விலை யை வரியாக கட்டவேண்டும். உதாரணமாக அவர் வாங்கிய கார் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை சுமார் ரூ7 கோடி இதற்கான இன்சூரன்ஸ், போக்குவரத்து என மொத்தம் ரூ8 கோடி செலவு என வைத்துக்கொண்டால் அதற்கு வரி மட்டும் ரூ10 கோடி கட்ட வேண்டும். அதாவது ரூ8 கோடி கொடுத்து வாங்கிய காருக்கு ரூ10 கோடி கட்டி தான் அதை இந்தியாவிற்குள் அவர் கொண்டு வர முடியும். ஆக மொத்தம் அந்த காருக்காக அவர் ரூ18 கோடி செலவு செய்ய வேண்டியது உள்ளது. இதில் அந்த ரூ10 கோடிக்கு விலக்கு கேட்டு தான் அவர் கோர்ட்டை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் தலைமையிலான கோர்ட் இதை மறுத்துவிட்டது.
இந்த வழக்கை அவர் 2012ம் ஆண்டு தொடர்ந்தார். அப்பொழுது கோர்ட் அவருக்கு தற்காலிகமாக 20% வரியை கட்டி காரை பயன்படுத்திக் கொள்ளலாம் வழக்கு முடிவுக்கு வரும் போது அதன் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்டநடவிடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி நடிகர் விஜய் 20 சதவீத வரியை கட்டி காரை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அந்த வழக்கிற்கு தீர்ப்பாகியுள்ளது. இனி மீதம் உள்ள 105 சதவீத வரியை நடிகர் விஜய் கட்ட வேண்டும்.
இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.
இதனையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தான் வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், காரை பதிவு செய்யாததால் அதனைப் பயன்படுத்த முடியவில்லை என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்குதான் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என மனுதாரர் தரப்பு வழக்குரைஞரிடம் கேட்டார் அதுக்கு என்ன காரணம் மனுதாரரின் பெயர் ஜோசஃப் விஜய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.நடிகர் விஜயின் வழக்கறிஞர் நடிகர் எனக் குறிப்பிட்டார்.
புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும்.
வரி வருமானம் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.
வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை.
மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவுக்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான நாயகர்களாக இருக்க வேண்டுமே தவிர, போலி நாயகர்களாக இருக்கக் கூடாது.
சமூகநீதிக்குப் பாடுபடுவதாகப் பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது.
வரிஏய்ப்பு என்பது தேசத்துரோகம். எனவே இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
நடிகர் விஜயின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதனை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்சமூக வலைதளங்களில் #வரிகட்டுங்க_விஜய் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. கேஸ் போட்டால் வரி விலக்கு கிடைக்கும் என்று ஐடியா கொடுத்த நபரைத் தான் விஜய் தேடிக் கொண்டிருக்கிறார் என்று சமூக வலைதளவாசிகள் கலாய்க்கிறார்கள்.
ஒரு படத்திற்கு ரூ. 50 கோடி, ரூ. 60 கோடி சம்பளம் வாங்கும் விஜய்யால் காருக்கு வரி கட்ட முடியாதா என்று கேட்கிறார்கள்.
நாங்க ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் வச்சிருக்கோம். எங்க கிட்ட சொகுசு கார் எதுவும் இல்ல. அதனால் தான் வரி விலக்கு வேண்டும் என்றும் கிண்டல் செய்துள்ளனர்.
ரூ. 80 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு கொரோனா நிவாரண நிதிக்கு பணம் அளிக்க முடியாது, வரி செலுத்த முடியாது. அடிச்சாம் பாரு ஃபைன் ஆர்டர் என்று விளாசுகிறார்கள்.
வரி கட்ட முடியாது போடா என்கிற வாசகம் அணிந்த டிசர்டை விஜய் அணிந்திருப்பது போன்றபுகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.இதுக்கிடையில் ஒரு ரசிகர் இதே காருக்கு கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சாங்க. விஜய்க்கு ஏன் வரிவிலக்கு அளிக்கக்லைன்னு கேட்டிருக்காரு.எதையுமே திட்டமிட்டு யோசித்து நிதானமாக செயல்படும் விஜய் இந்த விஷயத்தில கவனமா செயல்பட்டிருக்கலாம்னு அவருடைய நண்பர்கள் வருத்தப்பட்டதா சொல்றாங்க.