14
May
1948 ஆம் ஆண்டு வருட குறைந்தப் பட்ச ஊதியச் சட்டம் ஒரு திருப்பு முனைச் சட்டமாகும். இச்சட்டம், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் வழங்குவதை உறுதி செய்கிறது. இந்திய பொருளாதாரம் கொரோனா பொது முடக்க நிலையோடு போராடி வருவதால், ஆயிரக்கணக்கான நிறுவனங்களும், தொழிலாளர்களும் எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையில் உள்ளன. இதனை சமாளிக்கும் வகையில், சில மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொடங்கியுள்ளன. உத்திர பிரேதேசம்,மத்திய பிரேதேசம் குஜராத் ஆகிய மூன்று பாஜக ஆளும் மாநிலங்கள் தொழிலாளர் நலச்சட்டங்களில் சில முக்கிய திருத்தங்களை அறிவித்தது. அதிலும், குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட உத்திரபிரேதேசம், அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களும் அடுத்த மூன்று வருடங்களுக்கு தற்காலிகமாக அமல்படுத்தப்படாது என்று வெளிப்படையாக அறிவித்தது. இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் (ராஜஸ்தான்/பஞ்சாப்) மற்றும் பிஜேடி (ஒரிசா) ஆட்சி செய்யும் மாநிலங்களும் தொழிலாளர் சட்டங்களில் சிறு திருத்தங்களை அறிவித்தன. அந்தந்த மாநிலங்களில் பொருளாதார…