சவுந்தர்யா எடுத்த இந்த முடிவுதான் இப்போது வரை திமுகவுக்கு சாதகமாகி கொண்டிருக்கிறது..!

ரஜினி சம்பந்தப்பட்ட 2 விஷயங்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.. அதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரப்போவதால்தான்..! அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, தனது மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார் . ஆலோசனைக்கு பிறகு , எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்து மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், மீண்டும் ரசிகர் நற்பணி மன்றமாகவே செயல்படும் என்றும் அறிவித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு ஏதோ ஒரு வகையில் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. தனது அரசியல் வருகைக்காகத்தான் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினி. அரசியலுக்காக சௌந்தர்யாவின் தலைமையில் ஐ.டி.விங்கும் தொடங்கப்பட்டது. அப்பா ரஜினி 150-க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்புகளுடன் பல்வேறு சோசியல் நெட் வொர்க் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ரஜினி ரசிகர்கள், சோசியல் மீடியாக்களில் தூள்150-க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்புகளுடன் பல்வேறு சோசியல் நெட் வொர்க் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ரஜினி ரசிகர்கள், சோசியல் மீடியாக்களில் தூள் படுத்தினர். இந்த நெட் வொர்க் சௌந்தர்யாவின் தலைமையில் இயங்கியது. இதனின் தினசரி நடவடிக்கைகளை அப்பா ரஜினியுடன் பகிர்ந்துகொண்டே இருப்பார் சௌந்தர்யா. இந்த நெட் வொர்க் சௌந்தர்யாவின் தலைமையில் இயங்கியது. இதனின் தினசரி நடவடிக்கைகளை அப்பா ரஜினியுடன் பகிர்ந்துகொண்டே இருப்பார் சௌந்தர்யா.  தற்போது, மக்கள் மன்றத்தை ரஜினி கலைத்து விட்டதால், தனது பொறுப்பில் இயங்கிய சோசியல் நெட் வொர்க் பணிகளையும் முடக்கிவிட்டாராம் சௌந்தர்யா. மேலும், மக்கள் மன்றத்தின் மூலம் ரஜினியின் அரசியலுக்காக துவக்கப்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்புகளையும் கலைக்கச் சொல்லி விட்டார் சௌந்தர்யா என்கிறார்கள் ரஜினி தரப்பினர். மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதற்கு முன்பு, அரசியல் குறித்து எதிர்காலத்தில் என்ன முடிவு எடுப்பேன்னு தெரியாது என்கிற ரீதியில் மீண்டும் பொடி வைத்து பேசி விட்டுத்தான் ஆலோசனை கூட்டத்துக்கு சென்றார் ரஜினி. கூட்டம் முடிந்த பிறகே அவரிடமிருந்து அந்த பரபரப்பு அறிக்கையும் வந்தது… மக்கள் மன்றத்தினருடன் நடந்த ஆலோசனையில் பேசிய பெரும்பாலானோர், அவரது உடல் நலம் குறித்த அக்கறையை முன்னிறுத்தியே பல விஷயங்களை பேசினர். முடிவு “நமக்கு காலங்கள் இருக்கிறது தலைவா.. தேர்தல்களும் நிறைய இருக்கிறது. பெருந்தொற்று காலங்கள் முழுமையாக மாறட்டும். அப்போது தேர்தலை பற்றி யோசிக்கலாம். இப்போது தள்ளி வைப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். சிலர் மட்டும், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் , நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து வரப்போகிறது. இதில் மக்கள் மன்றத்தின் நிலைப்பாடு என்ன?” என்று மன்றத்தின் பூத் கமிட்டி ஆட்களெல்லாம் இப்போதே கேட்கத் துவங்கி விட்டனர்.  நீங்கள் அரசியலுக்கு வருவதில்லை என சொல்லிய பிறகு, மிகவும் சோர்வாகி விட்ட ரசிகர்கள், இனி அவர் வர மாட்டார் ; வரவே மாட்டார் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர். அதனால், அரசியல் ஆர்வம் உள்ள பலரும் திமுகவில் இணைய துவங்கி விட்டனர். இனி இந்த இணைப்பு அதிகமாக நடக்கும். அதுவும் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் நிறைய நடக்கும். அப்போது, “ரஜினியின் மக்கள் மன்றத்தினர் விலகி திமுகவில் இணைந்தனர்” என செய்திகள் பரபரப்பாகும். இது, உங்களின் இமேஜை பாதிக்கலாம். ரஜினி இது மட்டுமல்ல, மக்கள் மன்றத்தின் பெயரிலேயே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பல பகுதிகளிலும் ரசிகர்கள் இப்போதே திட்டமிடுகிறார்கள். அவர்கள் தோற்றுப் போனால், “ரஜினியின் மக்கள் மன்றம் தோல்வி” என்று தான் பரபரப்பாக்குவார்கள். இதெல்லாம் உங்களுக்கு ஏற்புடையதா என தெளிவுப்படுத்தி விடுங்கள்” என்று சொன்னது ரஜினிக்கு பிடித்து போய் விட்டது. இதனையடுத்து, தன்னை நம்பி அரசியலுக்கு வந்த ஒரு சிந்தனையாளர், தனது குடும்ப டாக்டர் ஒருவர் உள்பட சிலரிடம் பேசியுள்ளார் ரஜினி. திமுக அவர்களின் ஆலோசனையும் இதுவாகத்தான் இருந்துள்ளது. இதனையடுத்தே, மக்கள் மன்றத்தை மாற்று கட்சிகள் பயன்படுத்திட கூடாது.. மாற்று கட்சிகளிடம் மக்கள் மன்றத்தினர் விலை போகவும் கூடாது என்கிற யோசனையில்தான் மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினி என்கிறார்கள் ரஜினியின் குடும்பத்துக்கு நெருக்கமான தொடர்பாளர்கள். எப்படியோ, அன்று சவுந்தர்யா எடுத்த இந்த முடிவுதான் இப்போது வரை திமுகவுக்கு சாதகமாகி கொண்டிருக்கிறது..!

Related posts:

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு விரைவில் அனுமதி ! இனி பைக் வச்சிருந்தாலே சம்பாதிக்கலாம்..!!
மாஸ் நாயகன் என்டிஆரின் 'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர் சாங்' (fear song) தற்போது வெளியாகியுள்ளது!
"லவ்" திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
நிர்மலாவுக்கு எண்டு கார்டு.. ராஜ்ய சபா வழியாக.. நிதி அமைச்சர் ஆகும் "இன்னொரு" தமிழர்?
"மியூசிக் ஸ்கூல்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ! 144 கிமீ பயணிக்கும் !!
சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் - எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா?
சொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!