சினிமா

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘இசை மன்னன்’ ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது. Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிசெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். திறமை மிகு இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரனின் அற்புதமான திரைக்கதை, மற்றும் சிறப்பான இயக்கம் ஆகியவற்றால் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில் திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பு வெறும் 35 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. ‘டியர்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னை, இடுக்கி, குன்னூர் ஆகிய பகுதிகளில்…
Read More
93 வயதில்ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் Ageing SuperStar சாருஹாசன்

93 வயதில்ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் Ageing SuperStar சாருஹாசன்

93 வயதில் இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் அதிரடியாக விஜய் ஶ்ரீ ஜி இயக்கத்தில் ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் Ageing SuperStar சாருஹாசன் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஹரா' படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாருஹாசன் நாயகனாக நடித்த ‘தாதா 87’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது. 'ஹரா' படத்தில் சாருஹாசனின் பங்களிப்பு குறித்து பேசிய இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, "93 வயதில்…
Read More
ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல், 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது!!

ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல், 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது!!

ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல், 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது!! 2023 ஆம் ஆண்டின் YouTube தளத்தின் மிகப்பெரிய சாதனை பாடலாக 'ஜிந்தா பந்தா,' 'வந்த எடம்,' மற்றும் 'தும்மே துளிபெலா' பாடல்கள் சாதனை படைத்துள்ளது !! ஒரே படத்தின் மூன்று மொழி வீடியோக்களும் YouTube ல் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்தி உலகளவில் சாதனை படைத்துள்ளது, உண்மையில் இது இந்திய அளவில் மிகப்பெரும் சாதனையாகும். ஜவான், முதல் பாடல் ஹிந்தியில் 'ஜிந்தா பந்தா', தமிழில் 'வந்த எடம்' மற்றும் தெலுங்கில் 'தும்மே துலிபேலா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் டிஜிட்டல் உலகத்தை புயல் போல் தாக்கியது, YouTube ல் 46 மில்லியன் பார்வைகளை குவித்து, 2023 இல் மேடையில் மிகப்பெரிய சாதனைப்…
Read More
செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்,ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்க ரெங்கநாதன் இயக்குகிறார் !

செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்,ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்க ரெங்கநாதன் இயக்குகிறார் !

செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம், தென் தமிழக அரசியலை மையமாகக் கொண்ட படத்தை ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்க ரெங்கநாதன் இயக்குகிறார் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன், மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், "தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை…
Read More
பீட்சா 3 தி மம்மி” என்பது 2023 ஆம் ஆண்டு தமிழ் ஹாரர் த்ரில்லர் திரைப்படம், இந்தியா முழுவதும் வெள்ளிக்கிழமை ஜூலை 28, 2023 அன்று வெளியாகிறது. மோகன் கோவிந்த் இயக்கத்தில், அஸ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து, கௌரவ் நாராயணன், அபிஷேக் சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் (அஷ்வின் காக்குமானு) என்ற பீட்சா டெலிவரி பையனை, கைவிடப்பட்ட வீட்டிற்கு பீட்சா டெலிவரி செய்த பிறகு பிசாவை வாங்கியவர் மர்மமான மம்மியால் வேட்டையாடப்படும் நிலையில் இப்படம் பின்தொடர்கிறது. அர்ஜுன் பவித்ரா (பவித்ரா மாரிமுத்து) என்ற அமானுஷ்ய புலனாய்வாளருடன் இணைந்து மம்மியையும் அதன் தோற்றத்தையும் விசாரிக்கிறார். இயக்குனர் மோகன் கோவிந்தின் பீட்சா 3, இது கார்த்திக் சுப்பராஜின் பீட்சாவின் (2012) மகத்தான வெற்றியைத் தொடர்ந்து உருவான பிரபலமான பிசாவின் மூன்றாவது பாகமாகும். பிஸ்ஸா 3 இன் கதைக்களம் உண்மையில் முந்தைய கதைகளுடன் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு உணவகத்தில் நடப்பதாக…
Read More
நடிகர் சந்தானம் நம்பர் ஒன் காமெடியனாக இருந்து வந்த நிலையில், ஹீரோவாக மாறி சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை, எப்போதும் போலவே ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்தே தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வருகிறார். ஆனால், ஹீரோவாக சந்தானத்துக்கு சில படங்கள் மட்டுமே கைகொடுத்தன. மீண்டும் காமெடி நடிகராகவே சந்தானம் ஆகிவிடலாமே என பலரும் கோரிக்கை வைத்த நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் படம் ஹீரோவாகவும் காமெடியனாகவும் சந்தானத்துக்கு அருமையான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்த படம் என்று தான் சொல்ல வேண்டும்.ஹீரோவாகவும் காமெடியனாகவும் திரையில் காட்சிக்கு காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்து ஸ்கோர் செய்கிறார் சந்தானம். வெறுமனே படம் முழுவதும் சந்தானம் மட்டுமே நிறைந்திருக்காமல் மொட்டை ராஜேந்தர், முனிஷ்காந்த், லொள்ளு சபா சேது, பிபின் என பலருக்கும் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருப்பது தான் இந்த படத்தை இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறது. பிரேம் ஆனந்த்…
Read More
ஐ.எம்.டி.பியில் அதிக-தரமதிப்பீடு பெற்ற நடிகர் தனுஷ்11 திரைப்படங்களின் பட்டியல் !

ஐ.எம்.டி.பியில் அதிக-தரமதிப்பீடு பெற்ற நடிகர் தனுஷ்11 திரைப்படங்களின் பட்டியல் !

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தனுஷ்: ஐ.எம்.டி.பியில் அதிக-தரமதிப்பீடு பெற்ற இந்நடிகரின் 11 திரைப்படங்களின் பட்டியல் இதோ சென்னை-26.07.2023-தனுஷ் என்று பிரபலமாக அறியப்படும் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா அவர்கள் விரைவில் 40 வயதை அடைகிறார். தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையில் அவரது பலதுறை பணிகளுக்காக பிரபலமான இவர், ஒரு நடிகராக மட்டும் பணியாற்றவில்லை, ஆனால் ஒரு தயாரிப்பாளராக, பாடலாசிரியராக மற்றும் பின்னணிப் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, 2002 ஆம் ஆண்டு ஒரு வளரிளம் பருவ நபராக துள்ளுவதோ இளமை, திரைப்படத்தில் தனுஷ் அவர்கள் முதலில் திரையில் தோன்றினார். இது அவரது சகோதரர் கே. செல்வராகவன் அவர்களால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படமாகும். அப்போது முதல், அவர் புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், காதல் கொண்டேன், அசுரன், மற்றும் ஆடுகளம் போன்ற பல்வேறு பிரபலமான திரைப்படங்களில் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களில் அவரது சிறந்த…
Read More
காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’!

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’!

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா', ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது. சிங்கமுத்து மகன், நாகேஷ் பேரன் மற்றும் மயில்சாமி மகன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்திற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி…
Read More
நடிகர் சூர்யா நடிப்பில்  ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!*

நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!*

*ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து வம்சி-பிரமோத் வழங்கும், இயக்குநர் சிவா இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா நடிப்பில் 'கங்குவா' படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!* சென்னை (ஜூலை 23, 2023): நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ’கங்குவா’ படத்தின் பிரம்மாண்டமான புரோமோ டீசரை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும் சமீபத்தில் ‘பத்து தல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் ’கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம்…
Read More
தயாரிப்பாளர்,விநியோகஸ்தரான ஜே எஸ் கே சதீஷ்குமார் நடிகராக அவதாரம் எடுக்கிறார் !

தயாரிப்பாளர்,விநியோகஸ்தரான ஜே எஸ் கே சதீஷ்குமார் நடிகராக அவதாரம் எடுக்கிறார் !

பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரும், தேசிய விருதுகள் வென்ற 'தங்க மீன்கள்', 'குற்றம் கடிதல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'மதயானைக் கூட்டம்', 'தரமணி', 'புரியாத புதிர்' மற்றும் விரைவில் வெளியாக உள்ள 'அண்டாவ காணோம்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான ஜே எஸ் கே சதீஷ்குமார், நடிகராக தற்போது புதிய பரிமாணம் காட்டி வருகிறார். வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அநீதி' திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்த ஜே எஸ் கே சதீஷ்குமார், தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறார். 2017-ம் ஆண்டு ராம் இயக்கத்தில் உருவான 'தரமணி' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தொடங்கிய ஜே எஸ் கே சதீஷ்குமாரின் நடிப்பு பயணம், ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த 'பேரன்பு', சிபிராஜ் நடித்த 'கபடதாரி', பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான…
Read More