16
Sep
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடத்த எந்தத் தடையுமில்லை’ன்னு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 12 மணி நேரத்தில், வருமான வரித்துறை தரப்பிலிருந்து சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை கையகப்படுத்தப் போகிறதுங்கிற பரபரப்பு தகவல் லீக் ஆனது. தகவலை மெய்ப்பிக்கும்விதமாக, அடுத்த நாள் பையனூர் பங்களாவை முடக்கியது வருமான வரித்துறை. “கொடநாடு வழக்கு மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க ‘செக்’ வைக்கும் நிலையில், சசிகலாவுக்கு வருமான வரித்துறை மூலமாக ‘செக்’ வைத்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார்கள் இந்த விவகாரங்களை முழுவதுமாக அறிந்தவர்கள். ‘பையனூர் பங்களா முடக்கம் ஏன் நடந்தது... எடப்பாடிக்கு இருக்கும் சிக்கல் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம். எடப்பாடிக்கு என்ன சிக்கல்? “கொடநாடு விவகாரத்தைத் தேவையில்லாமல் எடப்பாடி ஊதிப் பெரிதாக்குகிறார்” என்றபடியே நம்மிடம் பேசினார்கள் அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர். “கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை கேட்டு அ.தி.மு.க பிரமுகர்…
