*திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!*

இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில், சிறப்பான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்தியவர்களில் பாலாஜி சக்திவேலும் ஒருவர். உணர்ச்சி ஆழமும் யதார்த்தமும் கொண்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து வரும் அவர், தனது திறமையான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். ‘டிஎன்ஏ’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம், ‘காந்தி கண்ணாடி’ படத்தில் மனதைத் தொடும் நடிப்பு, அதனைத் தொடர்ந்து ‘வாரண்ட்’ இணையத் தொடரில் முக்கியமான தோற்றம் ஆகியவற்றின் மூலம், தரமான நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் பாலாஜி சக்திவேல். இந்த கலைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தற்போது அவர் 12 நிமிட பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் இரட்டை பரிமாணங்கள் கொண்ட கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர். முத்துராமன் எழுதி இயக்கியுள்ள ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதர் இடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான மோதல், பதட்டம் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை மையமாகக் கொண்டுள்ளது. 12 நிமிடங்களைக் கொண்ட இந்த பைலட் திரைப்படம் யதார்த்தமும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தையும் பார்வையாளர்களுக்கு தர இருக்கிறது.

பல ஆண்டுகளாக குறும்படங்கள் மற்றும் காட்சிப்படுத்தல் முயற்சிகள் மூலம் தனது கலைத்திறனை மேம்படுத்தி வந்த முத்துராமன், தனது தீவிரமான சினிமா ஆர்வத்தை இந்த பைலட் படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் ஃபிக்‌ஷன் ஸ்டுடியோ வாயிலாக கதை சொல்லும் கனவுகளை தொடர்ந்து வளர்த்து வரும் அவர், ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தை தனது சினிமா பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக உருவாக்கியுள்ளார்.

‘ஆஃப் தி ரெக்கார்ட்’ குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.*நடிகர்கள்:* பாலாஜி சக்திவேல் மற்றும் ருக்மணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க, கொட்டாச்சி, ஆறு பாலா, பிரதீப் மற்றும் மீசை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related posts:

‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட‌ திரைப்படம் ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் நிறைவு!

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!

சென்னை எடிஷன் கேமிங் திருவிழாவை கிட்டத்தட்ட 17,000 ரசிகர்களுடன் ஸ்கைஸ்போர்ட்ஸ் நிறைவு செய்துள்ளது!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!

'சூது கவ்வும் 2'-- விமர்சனம்.!

*வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தும் சீட்ஸ்டார் - மரங்களை நடும் உலகின் முதல் பட்டாசு!*

வேல்ஸ் பல்கலைக்கழகம் தனது சட்டபள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியது.*1

4th edition of “Timeless Legacy” of Rotary Club of Madras launched CSR Donors honoured and thanked !