அதிரடி கிளப்பும் சசிகலா.. எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் சிக்கல்?
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு நாளை அதாவது அக்டோபர் 27ம் தேதி வரஉள்ள நிலையில், கட்சிக்குள் பூசல்களும், குழப்பங்களும் ஆங்காங்கே வெடித்து கிளம்பி வருகின்றன. இந்த 2 நாட்களாகவே சசிகலாவின் பெயர் பலமாக அடிபட்டு வருகிறது.. அதிலும் அதிமுகவுக்குள்ளேயே அடிபட்டு வருகிறது.. சசிகலாவை கட்சிக்குள் சேர்த்து கொள்ள ஆதரவுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருகி கொண்டிருக்கின்றன.
ஒருபக்கம் ஓபிஎஸ்ஸின் பேட்டி, மறுபக்கம் சசிகலாவின் எழுச்சி என கிளம்பி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கான நிலைப்பாடு என்னவாக இருக்கிறது, அவரது அடுத்தக்கட்ட காய் நகர்த்தல் எப்படி இருக்க போகிறது? என்பன போன்ற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன. அதிமுக இதுகுறித்து நாம் ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசியபோது, அவர்கள் சொன்னதாவது: “தேவர் ஜெயந்திக்கு அனுமதி தர வேண்டும் என்று அதிமுகவினர் மனு அளிக்கும் அளவுக்கு அவருக்கான ஆதரவுகள் பெருகி வருகிறது. இத்தனைக்கும் சசிகலா அரசியல் ரீதியிலான அறிவிப்புகள் எதையும் இன்னும் வெளியிடவில்லை.. ஒருவேளை அதிமுகவின் தலைமையை ஓபனாக விமர்சித்து பேசினால் அது மேலும் தாக்கத்தை தரக்கூடும்.. இரு பிரிவுகள்? இந்த 2 நாட்களில் ஒன்றை கவனித்தால் புரியும்.. அன்று எடப்பாடி பழனிசாமி பேட்டி தரும்போது, கேபி முனுசாமி, வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் போன்றோர் அவரை சுற்றி நின்றிருந்தனர்.. அதேபோல ஓபிஎஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி தரும்போது கவனித்தால், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக மாஜி அமைச்சர் மணிகண்டன், ராஜன்செல்லப்பா, உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்களாகவே நின்றிருந்தனர். அதாவது கொங்கு மண்டலம், முக்குலத்தோர் என இரண்டாக காட்சி அளித்தது.. அப்படியானால் இரு பிளவாக அதிமுக உடைபடுகிறதா? சாதி ரீதியாக அணி சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறதா? அதற்கான அறிகுறியா இது என்ற சந்தேகம் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.
இதில் சசிகலா, ஓபிஎஸ், எடப்பாடி இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைதான் நாம் யோசிக்க வேண்டி உள்ளது.. சசிகலா சுற்றுப்பயணத்தை துவங்கினாலும், அது கட்சியை பலப்படுத்தவும், தன்மீதான நம்பிக்கையை பெருக்கி கொள்ளவும்தான் இருக்கும்.. அதாவது மறுபடியும் அதிமுக இரண்டாக பிளந்து, இரட்டை இலை சின்னம் முடங்கிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.. அதனால்தான் கட்சி ரீதியாகவே இதை அணுகி அதை சரி செய்ய நினைக்கிறார்.
ஒருவேளை முக்குலத்தோர் சமூகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தந்தால், தென்மண்டலத்தில் இருக்கும் தேவேந்திரர், நாடார், முத்தரையர் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு கிடைப்பதில் சிக்கல் எழும் என்பதையும் சசிகலா யோசிக்காமல் இல்லை.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி மீது தென்மண்டலங்களில் அதிருப்தி உள்ளது.. கொங்குவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து, தென்மண்டலத்தை புறக்கணிப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.. இந்த அதிருப்தியை சசிகலா அறுவடை செய்து கொள்ள பார்க்கிறார். எடப்பாடி மீதான இந்த மைனஸை, தனக்கு பிளஸ் ஆக மாற்றி கொள்ளவே, சுற்றுப்பயண பிளான்கள் திட்டமிட்டு போடப்பட்டுள்ளன. போட்டி எடப்பாடியை பொறுத்தவரை, சசிகலாவுக்கு போட்டியாக சுற்றுப்பயணத்தை தொடங்க யோசித்து வந்தாலும், எந்த காலத்திலும் தன்னுடைய ஆதரவாளர்கள் அவர் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதேசமயம், ஓபிஎஸ்ஸின் சமீபகால நடவடிக்கைகள் அவருக்கு வருத்தத்தை தந்து வருகின்றன.. முன்பெல்லாம், அந்த குடும்பத்துடன் தொடர்பில்லாத யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் என்று ஓபனாக சொல்லி கொண்டிருந்த ஓபிஎஸ், இப்போது சசிகலா பெயரை சொல்வதை தவிர்த்து வருவதையும் எடப்பாடி கவனிக்காமல் இல்லை. திமுக ஓபிஎஸ்ஸூக்கு திமுகவின் சப்போர்ட் மறைமுகமாக இருப்பது ஏற்கனவே எரிச்சலை உண்டுபண்ணிய நிலையில், சசிகலாவுடனான ஆதரவையும் விரைவில் ஓபிஎஸ் பெற்றுவிடக்கூடுமோ என்ற கலக்கம் எடப்பாடியை சூழ்ந்துள்ளது.. மற்றொரு பக்கம் கொடநாடு விவகாரம் பெரும் நெருக்கடியை உருவாக்கி கொண்டிருக்கிறது.. எஸ்பி வேலுமணியிடம் ரெய்டு நடந்தபோதே எடப்பாடிக்கான எச்சரிக்கை துவங்கிவிட்டது.. இளங்கோவன் வரை ரெய்டு விவகாரத்தில் திமுக வந்துவிட்டது.. இனி அடுத்தது நாம் தான் என்ற கிலியும் அவருக்கு உள்ளது.. இளங்கோவன் வாய் திறந்தால் மேலும் பிரச்சனை என்பதையும் உணராமல் இல்லை.. எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்தான் கூடி கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம் ஓபிஎஸ் பேட்டி தரும்போது, “தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்” என்று ஓபிஎஸ் சொல்கிறார்.. அப்படியானால் இவர் யார்? இவரும்தானே கட்சியில் பொறுப்பில் உள்ளார்? எனவே, ஓபிஎஸ் எந்த நேரம் வேண்டுமானாலும் சசிகலா பக்கம் சாய்வாரோ? ஒருவேளை அவர் நிலைப்பாட்டை மாற்றி கொண்டாலும், அவரது ஆதரவாளர்களும் ஓபிஎஸ் வழியையே பின்தொடர்வார்களா? இப்படி பலவித குழப்பத்துடன் அதிமுக நீண்ட தூரம் பயணிக்குமா? என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், சசிகலாவின் எழுச்சி, எடப்பாடியின் வீழ்ச்சியாகத்தான் இருக்க முடியும்” என்றனர்.