பிளாஸ்ட் விமர்சனம்..!

AGS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுபாஷ் கே ராஜா இயக்கத்தில் உருவாகி வெளியாகி உள்ள படம் பிளாஸ்ட். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, பவன், ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். அருண் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு பீனிக்ஸ் பிரபு ஸ்டண்ட் அமைத்துள்ளார். டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது. படத்தின் கதையை பொறுத்தவரையில் தொழிலதிபர் கொக்கென் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய அமைச்சருக்கு ரூபாய் 1000 கோடி லஞ்சமாக தர முயற்சிக்கிறார். அதற்கு சிலரிடம் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கிறார். ரூபாய் 1000 கோடியை ஒப்படைக்க நிழல் உலகில் நடைபெறும் சம்பவங்கள் கராத்தே மாஸ்டரான அர்ஜுனின் மகள் ப்ரீத்தி முகுந்தனை கொலை செய்ய வேண்டிய நிலைக்கு கதை நகர்கிறது. இதனால் ஒரு குடும்பமாக இணைந்து அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் கதையை பொறுத்தவரையில் மிகவும் சாதாரண கதை போலத்தான் உள்ளது. ஆனால், திரைக்கதையில் இயக்குநர் சுபாஷ் கே. ராஜா திறம்பட செயல்பட்டுள்ளார். படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை ஒரு காட்சியைக் கூட, இது எதற்கு என்று யாரும் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு பார்த்து பார்த்து உருவாக்கி உள்ளார் என்று தான் கூற வேண்டும். இந்த படம் தான் இவரது முதல் படம் என்று நம்ப முடியவில்லை? ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு படத்தின் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் பார்த்து பார்த்து உருவாக்கி உள்ளார். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் அதிரடியாக சண்டைக் காட்சிகளில் நடிப்பது என்பது வியக்கத்தக்க விஷயம் அல்ல. இந்த வயதிலும் அதே எனர்ஜியில் சண்டைக் காட்சிகளில் நடித்தது பாராட்டுக்குரியது. ஆனால் ரசிகர்களை மொத்தமாக சர்ப்ரைஸ் ஆக்கியது என்றால் அது அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் ஆக்‌ஷன் காட்சிகள் தான். அதிலும் ப்ரீத்தி முகுந்தன், காருக்குள் வைத்து செய்யும் சம்பவத்திற்கு எல்லாம் தியேட்டரே பிளாஸ்ட் என்றுதான் கூற வேண்டும். படத்தின் முதல் பாதியிலேயே, ஒரு குடும்பமாக இணைந்து மூவரும் ரசிகர்களுக்கு வைக்கும் ஆக்‌ஷன் விருந்துக்கே படத்தின் டிக்கெட் விலை சரியாகிவிட்டது என கூறும் அளவுக்கு உள்ளது.

முதல் பாதியில் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே படம் மெதுவாக நகர்கிறது., அதன் பின்னர் வேகமெடுத்து நகர்ந்து செல்கிறது. அதே விறுவிறுப்பில் இரண்டாவது பாதியும் நகர, மொத்த படமும் பிளாஸ்ட் என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. அதேபோல் அபிராமிக்கு கொடுக்கப்பட்ட ஒரு பில்டப் காட்சிக்கும் தியேட்டரில் ஒரே கைதட்டல். படத்திற்கு மிகவும் பிளஸ் என்றால் அது, ரவி பஸ்ரூர் இசை தான். ப்ரீத்தி முகுந்தன் பறந்து பறந்து ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாக காட்ட காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு இசையமைத்துள்ளார். அவரது இசை மொத்த படத்திற்கும் மிகப்பெரிய பலம். ப்ரீத்தி முகுந்தனும் தனது கதாபாத்திரத்திற்கு ரொம்பவுமே மெனக்கெட்டு நடித்து உள்ளார்.

படத்தின் முந்தைய கிளைமாக்ஸில் விவேக் பிரசன்னாவுக்கு கொடுக்கப்பட்ட எலிவேஷன் காட்சிகள் எல்லாம் கூடுதல் ஆச்சரியமாக உள்ளது. ,. ஜான் கொக்கேன் தான் வில்லன் என்று காட்டப்பட்டாலும், அவரது கதாபாத்திரம் வலுவானதாக இல்லை. ஆனால், அர்ஜுன் சிதம்பரம், பவன் மற்றும் அவரது அடியாட்கள் டீம் என இவர்கள் தான் படம் முழுக்க வலுவான வில்லன் கதாபாத்திரங்களாக வலம் வருகிறார்கள். முதல் பாதியில் ஸ்கோர் செய்த திலீபனின் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம், இரண்டாம் பாதியில், தனது குடும்பத்தை வில்லன்கள் கடத்திவிட்டார்கள் என்ற போதும் பெஞ்ச் தேய்த்துக் கொண்டு இருக்கிறார்.அதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை?

கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது தான் என்றாலும், அதற்கு முன்னர் ஓடிய இரண்டு மணி நேர படத்திற்கான சரியான ஃபினிஷிங்காக இல்லாதது குறைதான். மொத்ததில், ஆக்‌ஷனை மட்டுமே மைய்யமாக கொண்டு, தரமான திரைக்கதையுடன் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ள பக்கா ஆக்‌ஷன் படம்.

Related posts:

லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' !

‘மார்கோ’வின் வெற்றிக்குப் பின், Cubes Entertainment புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !!

பல் மருத்துவத்தில் ஆசியா அளவில் ராஜன் பல் மருத்துவமனை சாதனை !

57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன...

ஜிகர்தண்டா-- விமர்சனம் !

திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் ஏ ஆர் ரகுமான்

4th edition of “Timeless Legacy” of Rotary Club of Madras launched CSR Donors honoured and thanked !

மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது!