ஊரக உள்ளாட்சித் தேர்தல்ல அமமுக போட்டியிடுமா ? இல்லையா ? என்ன சொல்றார் டிடிவி?
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவது கஷ்டம்தான்னு அடிச்சி சொல்றாங்க.. அப்படியே போட்டியிட்டாலும் கூட பிரச்சாரத்திற்கு டிடிவி வருவது சாத்தியமேயில்லைன்னு சொல்றாங்க..
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 9 மாவட்டங்களிலும் விறுவிறுப்பா நடந்து வருது. திமுக முதல் நேற்று வந்த மக்கள் நீதி மய்யம் வரை வேட்பு மனு தாக்கலில் தீவிரமா இருக்கிறாங்க.
திருவண்ணாமலையில் வைத்து தனது மகளின் திருமணத்தை முடித்த கையோடு டிடிவி தினகரன் தேர்தல் களத்திற்கு வருவார்ன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. இதனை அடுத்து திருமணத்தை முடித்து சென்னை திரும்பிய டிடிவியை பார்க்க ஒன்பது மாவட்டங்களின் நிர்வாகிகள் சிலர் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனா அவங்க யாரையும் டிடிவி பார்க்கலை. நேராக கட்சி அலுவலகம் போங்கன்னு மட்டும் அவங்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களாக சென்னையில் தங்கியிருந்தும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தினகரனிடம் இருந்து எந்த தகவலும் வரலைங்கிறாங்க கட்சி நிர்வாகிகள்.
இதனை அடுத்து நிர்வாகிகள் அனைவரும் மறுபடியும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிப் போய்ட்டாங்க.. வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்குது. கூட்டணியில் இருந்த தேமுதிக கூட தனித்து போட்டின்னு அறிவிச்சிட்டு பணிகளை தொடங்கிடுச்சி. ஆனா அமமுக நிர்வாகிகள் என்ன செய்றதுன்னு தெரியாம குழப்பத்தில் இருக்கிறாங்களாம். இது சம்பந்தமா அமமுக வட்டாரத்தில் விசாரிச்சப்போ, ஊரக உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் தினகரன் பெரிய அளவில் ஆர்வம் காட்டலைங்கிறாங்க. தேர்தல் நடக்கப்போற 9 மாவட்டங்கள்ல் எந்த ஒரு மாவட்டத்திலும் கட்சிக்குன்னு பலமான கட்டமைப்பு இல்லை என்பதை தினகரன் உணர்ந்தே வைத்துள்ளாராம்.
ஏற்கனவே அந்த மாவட்டத்தில் இருந்த நிர்வாகிகள் பலபேரும் அதிமுகவிற்கு மறுபடியும் போய்ட்டாங்க. இப்போ காலியா இருக்கிற இடங்களை கூட நிர்வாகிகளை போட்டு நிரப்பும் பணிகள் இன்னமும் முடிவடையலை. இந்த சூழலில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கினா வெற்றி கிடைக்காதுன்னு தினகரன் நம்புறதாக சொல்றாங்க. அத்தோடு அவர் மகள் திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் பிசியாக இருக்கிறதால ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவது கஷ்டம் தான்னு பேசிக்கிறாங்க. அப்படியே போட்டியிட்டாலும் கூட பிரச்சாரத்திற்கு டிடிவி வருவது சாத்தியம் இல்லைன்னும் சொல்றாங்க.. அதனால அந்தந்த மாவட்டங்களில் அமமுக சார்பில் விருப்பம் உள்ளவர்கள் போட்டியிட்டுக் கொள்ளுங்கள் என்கிற அறிவிப்பை ரகசியமாக டிடிவி வெளியிட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வார் என்றே பேச்சு அடிபடுகிறது.
அத நிரூபிக்கிற மாதிரி ஒரு அறிவிப்பு வந்திருக்குது.அதாவதுஇந்தத்தேர்தலில் அமமுகவின் சார்பில் பல்வேறு பதவி இடங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கோரும் அமமுக உடன்பிறப்புகள் மேற்கண்ட வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட அமமுக மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து திரும்ப அளித்திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் .அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட அமமுக செயலாளர் உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான முழு விவரங்களையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.அதாவது நீங்களே முடிவு எடுத்துக்கோங்க.தலைமைக்கு தகவல் மட்டும் சொன்னா போதும்னு சொல்லிட்டாங்க.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாரான நிலையில் அமமுகவின் நிலை என்ன என்பது பற்றி பல கேள்விகள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது.கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளதால் அமமுகவினர் ஏக குஷியில் உள்ளனர். முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலிலும் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.