அரசியல்

எப்பல்லாம் தேர்தல் வருதோ  கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது !

எப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது !

எப்பல்லாம் தேர்தல் வருதோ ஊடகங்கள், பத்திரிகைகள், தனியார் நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது . உண்மையில் , கருத் துக் கணிப்பு என்பது புள்ளியியல் சார்ந்த அறிவியல் பூர்வமான ஆய்வு முறையாகும் , தேர்தலில் கருத்துக் கணிப்பு வெளியிடுவதுங்கிற வழக்கம் , 1824 - இல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத் தேர்தலில் துவங்கியது . அத்தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்புகள் தேர்தலில் முழுமையாக எதிரொலித்ததன் விளைவு , தேர்தல் முறையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக மக்களின் கருத்தை அறிவது வர்த்தகம் , அரசியல் , அரசு நிர்வாகத்தில் பெரும் பயன்களை அளிக்கும் , புள்ளியியல் முறையில் மாதிரி ( சாம்பிள் ) அளவுகள் முக்கியமானவை . கருத்துக் கணிப்பும் அந்த மாதிரிகள் பெறப்படும் இடங்களும் பரந்து இருக்க வேண்டும் . மக்களிடம் நேரடி சந்திப்பு , படிவம் மூலமாகக் கருத்தறிதல் , இணையம்…
Read More
கருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..

கருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..

மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் நேற்றிரவு வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் மினி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கருப்பண்ணன், வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் கலந்துகொண்டுள்ளனர். நள்ளிரவையும் தாண்டி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மிக உற்சாகமாகவும், தெளிவான குரலிலும் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திமுக.தான் ஆட்சி அமைக்கும். அதிமுக 50 தொகுதிகளுக்கு குறைவாகதான் வெற்றிப் பெறும் என்று வெளியான அனைத்துக் கருத்துக்கணிப்புகளையும் தூக்கி குப்பையில் போடுங்கள்.கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் சேலம் ஆகிய மாவட்டங்களிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக தான் வெற்றிப் பெறும். இந்த 9 மாவட்டங்களிலும் திமுக இரட்டை இலக்கத்திற்குள்ளாகதான் வெற்றிப் பெறும். பல்வேறு தரப்பினரிடம் இருந்து மகிழ்ச்சியான தகவல் எனக்கு வந்திருக்கிறது.தமிழகம்…
Read More
யாருடைய குற்றம் ?

யாருடைய குற்றம் ?

1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல் செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்.. ஒண்ணரை லட்சம் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் கற்பழித்து ஈவு இரக்கம் இன்றி நிற்கவைத்து சுட்டுக் கொன்று அதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸும் திமுகவும் தமிழகத்தில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்... ஒருவன் பெரும்பான்மையான மக்கள் வணங்கும் கடவுளை “தாஸி” என்றும் அவர்கள் வணங்கும் புத்தகங்களைக் “காம புத்தகம்” என்றும் அவர்களுடைய வேத மந்திரங்களை கேவலமான சொற்கள் என்றும் கூறிய பிறகும்.. தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்... ஒருவன் ஒரு மதத்தின் அனைத்து பெண்களையும் வேஸி என்று பச்சையாக பேசிய பிறகும் பெண்களிடம் கொந்தளிப்பு ஏற்படவில்லை என்றால் அது யாருடைய குற்றம் ஒரு மாநில முதல்வரின் தாயை ஒருவன் வேஸி என்று பகிரங்கமாக…
Read More
சபாஷ் சபரீசன் வந்த கதை, வளர்ந்த கதை?

சபாஷ் சபரீசன் வந்த கதை, வளர்ந்த கதை?

ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசனின் சென்னை நீலாங்கரை வீட்டில் வருமானவரி துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். யார் இந்த சபரீசன்? திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் அரியநாயகிபுரத்தில் ஒரு ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர்தான் சபரீசன். சபரீசன் தந்தை தினமும் சைக்கிளில் மதிய உணவை கட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்று வரும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். எப்படியோ, ஸ்டாலின் மகளின் பின்னால் சுற்றி காதலித்து விரும்பி திருமணம் செய்துகொண்டார். சபரீசனும், ரஜினி கட்சியிலிருந்த அர்ஜுனமூர்த்தி மருமகனும் குடும்ப சொந்தங்கள். ஸ்டாலின் மகள் செந்தாமரையும், அர்ஜுனமூர்த்தி மகளும் தோழிகள் மட்டுமல்ல அவர்களுக்கு இடையே குடும்ப உறவும் உண்டு. இந்த நிலையில் சபரீசனும் அர்ஜுனமூர்த்தி மருமகனாக இருந்த இருவரும் சொந்தக்காரர்கள் எப்படியோ இந்த இருவரும் திட்டமிட்டு ஸ்டாலின் மகளையும், அர்ஜுனமூர்த்தி மகளையும் முறையே தனித்தனியாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் அர்ஜுனமூர்த்தி மகள் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது. சரி, விசயதிற்கு வருவோம், ரோடு, மர நிழலில்…
Read More
தமிழ்நாட்டை பாஜக மறந்தவிட வேண்டியது தான் ! அமித்ஷா கோபம்?

தமிழ்நாட்டை பாஜக மறந்தவிட வேண்டியது தான் ! அமித்ஷா கோபம்?

தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து விட்டு தன் ஹோட்டல் அறைக்கு வந்த அமித்ஷா பாஜகவின் நிர்வாகிகளோடு கலந்தாலோசனை செய்துள்ளார். கள நிலவரம் பற்றி மத்திய உள்துறை கொடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வீசியுள்ளார் அமித்ஷா. என்ன தான் நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தன் நிர்வாகிகளை பார்த்து கோவப்பட்டாராம். இதுவரை அமித்ஷா இவ்வளவு கோவப்பட்டு நாங்கள் யாரும் பார்த்ததில்லை என்றார் அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக நிர்வாகி. அமித்ஷா வின் கோவத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் பாஜக உட்கட்சி பூசலும் அவர்கள் தமிழகத்திற்கு வகுத்த திட்டம் ஒன்று கூட பலனளிக்கவில்லை என்றும் 20 தொகுதிகளில் பல இடங்களில் பாஜக டெப்பாசிட் இழக்கும் என்று உள்துறை கொடுத்த ரிப்போர்ட்டும் தான் அதற்கு காரணம் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். எடப்பாடி தாயை குறித்து ஆ. ராசா பேசியதாக பாஜக ஐடி செல்கள் பரப்பிய வீடியோவிற்கு மக்களிடையே அனுதாபம் ஏற்படாமல் தன் தாயையே தேர்தலுக்காக…
Read More
ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு, சீறிய எடப்பாடி!

ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு, சீறிய எடப்பாடி!

தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் இன்று காலை ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் மத்திய வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று பாஜக நம்பிய நிலையில் திமுக நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. திருச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ரெய்டு நடத்தும்படி அழைப்பு விடுக்க, திமுக வேட்பாளர்கள் அனைவரும் பிரதமர் தங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும், அது தாங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபபெற உதவும் என்றும் டூவிட்டரில் பதிவிட, இது பாஜகவை திகைக்க செய்திருக்கிறது. இதுவரை தாங்கள் நடத்திய ரெய்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு பணிவதையே பார்த்து பழகியவர்கள் இம்முறை இந்த வித்தியாசமான அழைப்பை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர். இது ஒரு பக்கம் என்றால், பாஜக அடுத்தடுத்து செய்யும் முட்டாள்தனங்களால் பாதிக்கப்படப் போவது அதிமுக தான் என்று கட்சிக்குள் எழும் குரல்கள் பழனிச்சாமியை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வெற்றிப்…
Read More
பா.ஜ.,வுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வாருங்கள் ! மம்தா பானர்ஜி கடிதம் !!

பா.ஜ.,வுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வாருங்கள் ! மம்தா பானர்ஜி கடிதம் !!

நாட்டில் தற்போது வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் இருக்கிறது. இதனால் வரும் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மீண்டும் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமையும் சூழல் இருந்துவருகிறது. காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதோடு அந்தக் கட்சியில் இருக்கும் முக்கியத் தலைவர்களை பா.ஜ.க ஆசைவார்த்தைகளைக் கூறி இழுத்துக்கொண்டது. எனவே, அந்தக் கட்சியால் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மிகவும் பலத்துடன் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில பா.ஜ.,வுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வாருங்கள்' என, காங்., தலைவர் சோனியா உட்பட, 10 கட்சித் தலைவர்களுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார். தமிழகம், மேற்கு வங்கம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்.,குக்கு எதிராக பா.ஜ., வலுவான போட்டியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், 10 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு,…
Read More
புதிய முதல்வர் யார்?

புதிய முதல்வர் யார்?

புதிய முதல்வர் யார்? என்பதை தமிழக மக்கள் முடிவு செய்ய ஒரு வாரம் கூட அவகாசம் இல்லாத சூழலில் இப்போதைய பரப்புரையில் தகிக்கும் அனலையும் தாண்டி அன்லிமிட்டெட் டாக்- அதாவது எல்லை மீறிய பேச்சு சகல தரப்பிலும் இருந்து வருகிறது. அப்படித்தான் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சொர்ணாம்பிகை லே-அவுட் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக நிர்வாகியான வானதி சீனிவாசன் கமல்ஹாசனப் பத்தி என்ன சொன்னாங்கன்னா “என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதின்னு மக்கள் நீதி மையம் கட்சியினர் சொல்றாங்க.அந்த நடிகரை பார்த்து கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர். லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதின்னு எப்படி சொல்லலாம்? மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் கமலஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டும்”…
Read More
‘ஒருவர் அம்மாவாம்; இன்னொருத்தர் அப்பாவாம்… இது என்ன உறவு?’ என, தயாநிதி கேட்டார். !

‘ஒருவர் அம்மாவாம்; இன்னொருத்தர் அப்பாவாம்… இது என்ன உறவு?’ என, தயாநிதி கேட்டார். !

பட்ட காலில் படும்; கெட்ட குடியே கெடும் என்பார்கள். முதல்வரின் தாய் குறித்து ஆ.ராசா பேசிய ஆபாச பேச்சின் சூடு தணிவதற்குள், அடுத்த ஆபாச பேச்சை அரங்கேற்றி இருக்கிரார் இன்னொரு, தி.மு.க., தலைவர். கிணத்துக்கடவு தொகுதியில் நேற்று முன்தினம், தி.மு.க., வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி. அப்போது அவர் ஆ.ராசாவின் ஆபாச பேச்சை, 'ஓவர்டேக்' செய்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் குறிப்பிட்டு, 'ஒருவர் அம்மாவாம்; இன்னொருத்தர் அப்பாவாம்... இது என்ன உறவு?' என, தயாநிதி கேட்டார். இந்த பேச்சு, அ.தி.மு.க., மட்டுமின்றி பாரதிய ஜனதா வட்டாரத்திலும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பிரசார வேகத்தில் ஒரு, 'ப்ளோவில்' பேசி விட்டார் என இதை கடந்து போகவும் வழி இல்லை. ஏனென்றால், 'இந்த கருத்தை நான் சொன்னால் குய்யோ முறையோ என கூச்சல் போடுவார்கள். ஆனால் இதை சொன்னவர் அமைச்சர் ராஜேந்திர…
Read More
பாஜக வேட்பாளர் வெற்றிபெற வழி வகுத்துக் கொடுத்த டி.டி.வி.தினகரன்..? ஆத்திரத்தில் அதிமுக..!

பாஜக வேட்பாளர் வெற்றிபெற வழி வகுத்துக் கொடுத்த டி.டி.வி.தினகரன்..? ஆத்திரத்தில் அதிமுக..!

பாஜக வேட்பாளர் வெற்றிபெற வழி வகுத்துக் கொடுத்த டி.டி.வி.தினகரன்..? ஆத்திரத்தில் அதிமுக..! அதிமுகவின் முக்கியமான அமைச்சர்களை தோற்கடிக்க வேண்டும் என வியூகம் அமைத்து ஸ்ட்ராங்கான வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறார் டி.டி.வி.தினகரன். அதனால் தன்னை கடுமையாக விமர்சித்த கடம்பூர் ராஜுவை எதிர்த்து டி.டி.வி.தினகரனே களமிறங்கி விட்டார். மற்றொருவர் டி.டி.வி.தினகரன் பெரிதும் நம்பிய இசக்கி சுப்பையா. நட்டநடு ரோட்டில் விட்டுவிட்டு போய்விட்டாரே... யார் போனாலும் பரவாயில்லை. ஆனால் இசக்கி சுப்பையா போயிருக்கக்கூடாது என பல நாட்கள் புலம்பி இருக்கிறார் டி.டி.வி. ஆகவே நம்பிக்கை துரோகத்தை வேரறுக்க அம்பாசமுத்திரத்தில் அமமுக சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்தியுள்ளார். ஆனால், பாஜக போட்டியிடும் திருநெல்வேலியில் மட்டும் ஜகா வாங்கி வருகிறார் டி.டி.வி.. இங்கே பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். தேவர் சமூகத்தை சேர்ந்த இவர் விஷயத்தில், தினகரன் மென்மையான போக்கை கையாள்வதாக, அவரது கட்சியினரே சொல்கின்றனர். கடந்த முறை, 601 ஓட்டுக்களில் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தார்.…
Read More