யாருடைய குற்றம் ?

1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல் செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்..
ஒண்ணரை லட்சம் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் கற்பழித்து ஈவு இரக்கம் இன்றி நிற்கவைத்து சுட்டுக் கொன்று அதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸும் திமுகவும் தமிழகத்தில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்…

ஒருவன் பெரும்பான்மையான மக்கள் வணங்கும் கடவுளை “தாஸி” என்றும் அவர்கள் வணங்கும் புத்தகங்களைக் “காம புத்தகம்” என்றும் அவர்களுடைய வேத மந்திரங்களை கேவலமான சொற்கள் என்றும் கூறிய பிறகும்.. தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்…

ஒருவன் ஒரு மதத்தின் அனைத்து பெண்களையும் வேஸி என்று பச்சையாக பேசிய பிறகும் பெண்களிடம் கொந்தளிப்பு ஏற்படவில்லை என்றால் அது யாருடைய குற்றம்

ஒரு மாநில முதல்வரின் தாயை ஒருவன் வேஸி என்று பகிரங்கமாக சர்வ சாதாரணமாக பேசி ஆற அமர மூன்று நாட்கள் கழித்து பெயருக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று கூறிவிட்டு போகிறார் என்றால் அது யாருடைய குற்றம்.

ஒருவன் தன்னுடைய ஆட்சி காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஸ்டெர்லைட், மீத்தேன், நெடுவாசல் என இன்னும் பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்தை போட்டுவிட்டு.. இப்போது ஒன்றும் தெரியாத அப்பாவி போல் அதற்கு எதிராக மக்களையும் தூண்டிவிட்டு பல உயிர்களையும் பலி வாங்கி, அதன்மீது அமர்ந்துகொண்டு சர்வசாதாரணமாக மக்களை ஏமாற்றி அரசியல் லாபம் அடைய முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்…ஒருவன் அவன் ஆட்சி காலத்தில் மக்களுக்கு நாளொன்றுக்கு 20 மணி நேரம் மின்சாரத்தை தடை செய்து நரக வேதனையை கொடுத்த பின்பும்… மீண்டும் அவனால் வெற்றி பெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்…

ஒருவன் இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை சீரழித்து விட்டு தன்னுடைய குடும்பத்தையே மன்னராட்சி போல் நடத்த முயல்கிறான். அனைத்து உயர் பதவிகளிலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களை அமரவைத்து அழகு பார்க்கிறான். கட்சிக்காக உழைப்பவர்கள் நடுத்தெருவில் நிற்க வைத்து வெற்றி பெறுகிறான் எனில் அது யாருடைய குற்றம்… ஒருவன் தான் முதல்வர் ஆவதற்காக ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழிக்கிறான். அதற்கு ஆலோசனை கூற 380 கோடி ரூபாய் கூலியாக மட்டுமே கொடுத்து மக்களிடம் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து ஏமாற்றி வெற்றி பெறுகிறான் எனில் அது யாருடைய குற்றம்..

கடைசியாக மக்களே உங்களின் அனைத்து சிந்திக்கும் திறனையும் ஒருவன் அழித்து முண்டமாக்கி வைத்திருக்கிறான் என்றால் அது யாருடைய குற்றம் ?

அப்பாவி மக்களாகிய நாம் இவர்கள் கூறும் அனைத்தையும் உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற நாம்தான் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றவாளியாகி மக்களிடம் இந்த உண்மைகள் சரியான முறையில் எடுத்து செல்லி புரியவைக்க படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.