*நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!*

பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்தியுள்ளதை சொல்லலாம். இது வெறுமனே கிரியேட்டிவ் தேர்வாக மட்டுமல்லாமல், இன்று அல்லு அர்ஜுன் பெற்றிருக்கும் பிரபலத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

‘AA23’ திரைப்படம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே அதன் தீம் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் வெளியாகாத ஒரு படத்தின் இசையும் களமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகச் சில நடிகர்களுக்கே நடக்கும். அல்லு அர்ஜுன் ஒரு வெற்றிகரமான நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளில் இந்திய சினிமாவின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். அவரது திரைப்படங்கள் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

’AA23’ திரைப்படம் பற்றி எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தருணங்கள்தான் அல்லு அர்ஜுன் அசல் பான் இந்தியா நட்சத்திரம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றன.

Related posts:

*தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்'' திரைப்படத்தின் முன்னோட்டம்!

”‘மையல்’ என் வாழ்வை மாற்றிய படம்”- நடிகர் சேது!

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் !

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

வஸந்த் ரவி - வாங்க சாப்பிடலாம்-முன்னு அழைச்சிருக்கார்!

விஜய் ஆண்டனி நடிக்கும் 'நூறு சாமி' திரைப்பட வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு!

நடிகர் வசந்த் ரவி ரசிகப் பெரு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.!

*நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!*