பா.ஜ.,வுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வாருங்கள் ! மம்தா பானர்ஜி கடிதம் !!

நாட்டில் தற்போது வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் இருக்கிறது. இதனால் வரும் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மீண்டும் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமையும் சூழல் இருந்துவருகிறது. காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதோடு அந்தக் கட்சியில் இருக்கும் முக்கியத் தலைவர்களை பா.ஜ.க ஆசைவார்த்தைகளைக் கூறி இழுத்துக்கொண்டது. எனவே, அந்தக் கட்சியால் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மிகவும் பலத்துடன் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில பா.ஜ.,வுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வாருங்கள்’ என, காங்., தலைவர் சோனியா உட்பட, 10 கட்சித் தலைவர்களுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்.,குக்கு எதிராக பா.ஜ., வலுவான போட்டியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், 10 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, மம்தா பானர்ஜி, கடிதம் எழுதிஉள்ளார்.

அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார்னா: நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்புகளை, பா.ஜ., அழித்து வருது. இப்போ, டில்லியில், மத்திய அரசின் பிரதிநிதியான, துணை நிலை ஆளுனருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது.
இது, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகும். மற்ற கட்சிகளின் சுதந்திரத்தை, அரசியல் சாசன உரிமைகளை, பா.ஜ., பறித்து வருகிறது.ஒரு நாடு, ஒரு கட்சி அதிகாரம் என்ற நிலைக்கு நாட்டை மாற்ற முயற்சி நடக்கிறது.பா.ஜ.,வின் இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த, நாம் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. திரிணமுல் காங்., தலைவர் என்ற முறையில் முழு ஒத்துழைப்பை தருவேன். இவ்வாறு, அந்த கடிதத்தில் மம்தா கூறியுள்ளார்.

காங்., தலைவர் சோனியா; தேசியவாத காங். தலைவர் சரத் பவார்; தி.மு.க., தலைவர், ஸ்டாலின்; சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே.ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி; பிஜு ஜனதா தளத் தலைவர், நவீன் பட்நாயக்; தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர், கே. சந்திரசேகர ராவ்; சமாஜ்வாதி கட்சித் தலைவர், அகிலேஷ் யாதவ்; ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், தேஜஸ்வி யாதவ்; ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால்.இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தலைவர் தீபாங்கர் பட்டாசார்யா ஆகியோருக்கு இந்தக் கடிதத்தை அவர் ள்ளார்.மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோருக்கு அவர் கடிதம் அனுப்பலை.கடந்த, 2019 லோக்சபா தேர்தலின்போது, இதேபோல், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க, மம்தா முயன்றார். ஆனால், பல மாநிலங்களில் கூட்டணி அமைக்கும் பிரச்னையில், அது சாத்தியமாகலை. அதன் பிறகும், எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவதற்காக நடந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த சூழ்நிலையில இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளார்.  மம்தா பானர்ஜியை விட்டு கடிதம் எழுதச் சொன்னதும் பிரசாந்த் கிஷோர் தான்.இது ஒவ்வொரு தலைவர்களின் ரியாக்ஷனைப்  பற்றி தெரிந்து கொள்வதற்காக அனுப்பப்பட்ட கடிதமாம். வரப் போற மக்களவைத் தேர்தலிலும் இதுபோன்ற மெகா கூட்டணியை அமைக்க அவரால் முடியும் என்கிறார்கள்.
பிரஷாந்த் கிஷோரால் மட்டுமே இந்த தலைவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும். இதுபோன்ற கூட்டணியை அமைப்பதில் பல்வேறு சிக்கல்களும் இருக்குது. ஏராளமான பிரதமர் முகங்கள் PRIME MINISTERIAL CANDIDATES இருக்கும் இந்திய அரசியல் களத்தில் முக்கியமான நபராக திகழ்பவர் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோர். அதேபோல், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களுக்காகவும் பணியாற்றி முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.

அண்மையில் பாஜகவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அவர் அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். பாஜக மீதான கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்கம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மம்தா, ஸ்டாலினுக்காக அவரது ஐபேக் டீம் பணியாற்றியது. குறிப்பாக, மேற்குவங்க மாநிலத்தில் பாஜக அவருக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. இருந்தாலும், தனது உத்தியின் மூலம் பாஜகவை அங்கு அவர் தோற்கடித்துள்ளார்

பிஜேபிக்கு எதிராக சவால் விட்டிருந்தார்.அதாவது மே வங்கத்தில் பிஜேபி 100 சீட்டுக்கு மேல் ஜெயிச்சிடுச்சுன்னா நான் இந்த தொழிலையே விட்டுர்றேன்னு சொல்லியிருந்தாரு. அவர் சொன்ன மாதிரி 100 சீட்டைப் பிடிக்கலை.77 இடங்களில் தான் ஜெயிச்சுது. இதையடுத்து, அடுத்த தேர்தல் வரை மம்தா பானர்ஜி ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளார்.

>இதனிடையே, “நான் அரசியல் வியூகப் பணி எனும் இந்த தளத்தில் இருந்து விலகப் போகிறேன். ஐபேக் நிறுவனத்தை அதில் இருக்கும் தலைவர்கள் இனிமேல் நடத்துவார்கள். எனது குடும்பத்தினருடன் நான் நேரத்தை செலவிட விடும்புகிறேன்” என்று பிரஷாந்த் கிஷோர் அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா வரை பலருக்கும் அரசியல் ஆலோசகராக இருந்து, அவர்களை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றவர் பிரசாந்த் கிஷோர். சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸையும், தமிழ்நாட்டில் தி.மு.க-வையும் அமோக வெற்றிபெறச் செய்ததில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.

இந்த இரு கட்சிகளின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பேசிய பிரசாந்த் கிஷோர், “இரு கட்சிகளின் வெற்றியும் மகிழ்ச்சி தருகிறது. நான் சொன்னபடியே மேற்கு வங்கத்தில் பா.ஜ.க இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லை. இருந்தும் பா.ஜ.க-வுக்கு தேர்தல் கமிஷன் உதவி செய்திருக்கிறது. அதனால்தான் இத்தனை தொகுதிகள் கிடைத்திருக்கின்றன” என்று குற்றம் சுமத்தினார் மேலும், “ ஒன்பது ஆண்டுக்காலம் அரசியல் வியூக ஆலோசகராகப் பணியாற்றிவிட்டேன். தற்போது இந்தப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, குடும்பத்தோடு நேரத்தை செலவிடப் போகிறேன். ஐபேக் நிறுவனத்தை என்னுடைய நண்பர்கள் தொடர்ந்து நடத்துவார்கள்” என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பினார்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 11) அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சரத் பவாரின் மும்பையில் உள்ள `சில்வர் ஓக்’ இல்லத்தில் காலை 11 மணியளவில் தொடங்கிய இவர்களின் சந்திப்பு, மதியம் 2 மணி வரை நீடித்திருக்கிறது. இந்தச் சந்திப்பில், மகாராஷ்டிர மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீலும் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின்போது சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள், “இந்தச் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்கள் பற்றியும், `மகா விகாஸ் அகாதி’ கூட்டணி ஆட்சி பற்றியும் பேசப்பட்டிருக்கும். பிரசாந்த் கிஷோர் தேர்ந்த அரசியல் விமர்சகர் என்பதால், அவர் ஆலோசனைகள் வழங்கியிருக்கும் பட்சத்தில், அதை மனதில்கொண்டு எங்கள் தலைவர் சரத் பவார் செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை” என்கிறார்கள்

இந்தச் சந்திப்பு தொடர்பாக பிரசாந்த் கிஷோர் தரப்பில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஸ்டாலின், மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் பிரசாந்த் கிஷோர்-சரத் பவார் சந்திப்பு நிகழ்ந்தது” என்கின்றனர்.

ஸ்டாலினுக்கும் மம்தாவுக்கும் ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கத்தான் இந்தச் சந்திப்பு’ என ஐபேக் தரப்பு கூறியிருப்பது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. `பா.ஜ.க-வுக்கு எதிராக நிற்கும் மாநிலக் கட்சிகளை 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஓர் அணியாக ஒன்று திரட்டுவதுதான் இந்தச் சந்திப்பின் பின்னணியா?’ என்பது போன்ற பேச்சுகள் அரசியல் களத்தில் அடிபடத் தொடங்கியிருக்கின்றன.>

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், “2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிராக மாநிலங்களிலுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று திரள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சரத் பவார், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு அதன் தொடக்கமாகக்கூட இருக்கலாம் . `மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசியலில் பல மாற்றங்கள் நிகழும்’ என முன்னதாகச் சொல்லியிருந்தார் சரத் பவார். மேற்கு வங்கத்தில் மம்தா அமோக வெற்றிபெற்ற பின்னர், சரத் பவாரை பிரசாந்த் கிஷோர் சந்தித்திருப்பது மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

மாநிலக் கட்சிகளை பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று திரட்ட, இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களில் சரத் பவரே சரியானவர். 2019-லேயே இந்த முயற்சியை மேற்கொண்டு அதில் தோல்வியுற்றார் அவர். ஆனால், 2024-ல் காட்சிகள் மாறியிருக்கும். எனவே, பவார் மீண்டும் இந்த முயற்சியில் இறங்க வாய்ப்புகள் அதிகம். இந்தச் சந்திப்பின்போது மூன்றாவது அணியைத் திரட்டுவது குறித்துத்தான் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கூடும்.
2024-ல் மாநிலக் கட்சிகள் ஓர் அணியாகத் திரண்டால், பல்வேறு சிக்கல்கள் எழும். அந்தச் சிக்கல்களை சரிக்கட்ட பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் வியூக வல்லுநர் தேவைப்படுவார். அதன் காரணமாகவே பிரசாந்த் கிஷோரைக் கொண்டு மூன்றாவது அணியைத் திரட்டும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கலாம்”னு சொல்றாஙமேலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார் என்பது பற்றியும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “ மூன்றாவது அணியாக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பொறுப்பை சரத் பவார் ஏற்றுக்கொள்வார் எனத் தெரிகிறது. அப்படி அவர் ஒன்று திரட்டினால், மம்தாவை பிரதமர் வேட்பாளராக முன்மொழியத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. பிரசாந்த் கிஷோரின் தேர்வும் மம்தாவாகத்தான் இருக்கக்கூடும். கடந்த வாரம் திரிணாமுல் பவனில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார். இதனால், `மம்தா சார்பாகத்தான் சரத் பவாரை, பிரசாந்த் கிஷோர் சந்தித்திருப்பாரோ’ என்கிற பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் சுற்றத் தொடங்கியிருக்கின்றன.மம்தாவுக்கும், சரத் பாவருக்குமிடையே 90-களிலிருந்தே நட்புறவு இருந்துவருகிறது. 1993-ல் மத்திய அமைச்சராக இருந்த சரத் பவாரை மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளச் சொன்னது காங்கிரஸ். இதையடுத்து, “மத்திய அரசு பொறுப்பிலிருந்து மாநில அரசுப் பொறுப்புக்கு கட்சி மேலிடம் அனுப்பி வைப்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளக் கூடாது” என்று சரத் பவாரின் வீட்டுக்கே சென்று கோரிக்கை வைத்தார் மம்தா பானர்ஜி. அப்போதிலிருந்தே இவர்களுக்கிடையே நல்லுறவு இருந்துவருகிறது. சரத் பவார், மம்தா என இருவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தங்கள் மாநிலத்தில் சொந்தக் கட்சி தொடங்கியவர்கள் என்கிற ஒற்றுமையும் இவர்களிடையே இருக்கிறது.

மூன்றாவது முறையாக அமோக வெற்றிபெற்று வங்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார் மம்தா. அதுமட்டுமல்லாமல், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும், மோடி, அமித்ஷாவையும் ஒருகை பார்த்துவருகிறார் அவர். இந்தியாவின் அனைத்து மாநில மக்களுக்கும் தெரிந்த முகமாக இருப்பதும் மம்தாதான் என்பதால், அவருக்கே மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு அதிகம்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இருப்பினும், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை அவரது சில்வர் ஓக் இல்லத்தில் சந்தித்து சுமார் 3 மணி நேரம் பிரஷாந்த் கிஷோர் உரையாடியுள்ளார்.

“இது ஒரு தனிப்பட்ட சந்திப்பு” என்று இருவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அந்த சந்திப்பின்போது உடனிருந்த சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். ஆனாலும், prime ministerial material என்று பரவலாக அறியப்படும் சரத்பவாரை பிரஷாந்த் கிஷோர் சந்தித்திருப்பது மெகா கூட்டணிக்கான முன்னோட்டம் என்று அரசியல் அரங்கில் யூகங்களை ஏற்படுத்தாமல் இல்லை.

பாஜக எதிர்ப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மெகா கூட்டணி என்பது மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற முடியாது என்ற கருத்தும் நிலவுவதால், பாஜக ஆளாத மாநிலங்கள், அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் மாநில கட்சிகள் அணி திரள்வதற்கான காரணமாகவும் உள்ளது என்று சுட்டிக் காட்டும் அரசியல் நோக்கர்கள், பிரஷாந்த் கிஷோரால் மட்டுமே அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
உதாரணமாக 2015இல் பி மாநில ன்றத் தேர்தலின்போது, எதிரெதிர் துருவங்களாக இருந்த லாலு பிரசாத் யாதவ் – நிதிஷ் குமாரை இணைத்து அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சியையும் கொண்டு வந்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியவர் பிரஷாந்த் கிஷோர் என்பதால், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் இதுபோன்ற மெகா கூட்டணியை அமைக்க அவரால் தான் முடியும் என்கிறார்கள்.

ஆனாலும், இதுபோன்ற கூட்டணியை அமைப்பதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. ஏராளமான பிரதமர் முகங்கள் இருக்கும். காங்கிரஸ் கட்சியுடன் பிரஷாந்த் கிஷோருக்கு நல்ல உறவு இருந்தாலும், அக்கட்சி ஆளும் அல்லது முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் சுமார் 19 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் (204 மக்களவை சீட்டுகள்) இது எவ்வாறு சாத்தியம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் விளிம்பு நிலையில் காங்கிரஸ் தனது இருப்பை தக்க வைத்திருக்கும் மாநிலங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும், ஆந்திராவில் ஜெகன் மோகனுக்கும் பிரஷாந்த் கிஷோருக்கும் நல்ல உறவு இருந்தாலும் மத்திய ஏஜன்சிகளிடம் சிக்கியுள்ள அவர் எந்த மாதிரியான முடிவை எடுப்பார், அவர் இல்லையென்றாலும் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இணைவாரா, மெகா கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அக்கட்சி எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்பன உள்ளிட்டவைகளுக்கு போகப்போக விடைதெரியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.