அரசியல்

பணிவுக்குப் பெயர் பெற்றவர், எரிமலையாக வெடிப்பாரா? மே 2 வரை பொறுத்திருக்க வேண்டும்….

பணிவுக்குப் பெயர் பெற்றவர், எரிமலையாக வெடிப்பாரா? மே 2 வரை பொறுத்திருக்க வேண்டும்….

சேலத்தில் உள்ள இல்லம் மற்றும் எடப்பாடியில் உள்ள சொந்த கிராமத்தில் ஆலோசனை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக பிஸியாக இருந்து வருகிறார். அமைச்சர்கள், அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனைகளின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதிலும், தான் முதல்வர் பதவியேற்பதிலும் எந்த மாற்றமும் இருக்காது என்று திடமான மனநிலையிலேயே பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து கலந்துரையாடி வருவதில், கொங்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிமுக முன்னணி நிர்வாகிகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களோ, அதிமுக முன்னணி நிர்வாகிகளோ முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சேலத்திற்கே சென்று நேரில் சந்திக்கவே ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் கசிய விடப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மட்டுமே சேலம் சென்று முதல்வரைச் சந்தித்து பேசிவிட்டு திரும்பியுள்ளார். இப்படி…
Read More
முதல்வரை மட்டும் ஏன் “குறி” வைத்து தாக்குகிறார்.. தினகரன் திமுகவின் பி டீமா.. நக்கலடிக்கும் அதிமுக!

முதல்வரை மட்டும் ஏன் “குறி” வைத்து தாக்குகிறார்.. தினகரன் திமுகவின் பி டீமா.. நக்கலடிக்கும் அதிமுக!

முதல்வரை மட்டும் ஏன் "குறி" வைத்து தாக்குகிறார்.. தினகரன் திமுகவின் பி டீமா.. நக்கலடிக்கும் அதிமுக! சென்னை: அமமுக விளம்பரங்களை எல்லாம் பார்த்தால், வேறு தினுசாக தெரிவதாகவும், ஒருவேளை டிடிவி தினகரன், திமுகவின் B டீமா? இருக்குமோ என்ற சந்தேகங்கள் எழுந்து வருவதாக அதிமுகவினர் கேள்வி கேட்கின்றனர்.டிடிவி தினகரனை பொறுத்தவரை, சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிய பின்னும் தனது அரசியல் பயணத்தை அமமுக மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.. பொது எதிரி திமுக என்கிறார். இனி திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் இருப்பதும் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்பதுமே அமமுகவின் நோக்கம் என்றும் தொடர்ந்து பேசி வந்தார். சசிகலாவின் அறிக்கைக்கும் தனது அரசியல் பயணத்திற்கும் தொடர்பு இல்லையென தெளிவுபடுத்தி, பொது எதிரியான திமுகவை ஆட்சிக்கு அமைக்க விடாமல் இருப்பதே குறிக்கோள் என்றும் டிவிக்களில் பேட்டியும் அளித்தார். ஆனால் சமீபத்தில் அமமுக சார்பில் டிவியில் வரும் விளம்பரங்களை பார்த்தால் டிடிவியின் உள்நோக்கம் தெரிவதாகவும், அந்த…
Read More
தேர்தலில் யார் வெற்றிக்கு வேலை செய்தார் சுனில்?- அதிமுகவில் வெடிக்கப் போகும் பூகம்பம் ?

தேர்தலில் யார் வெற்றிக்கு வேலை செய்தார் சுனில்?- அதிமுகவில் வெடிக்கப் போகும் பூகம்பம் ?

ஒருமாத காலமாக ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த தேர்தல் பிரச்சார முழக்கங்கள் ஒருவழியாக ஓய்ந்து விட்டன. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குஇந்தத் தேர்தலில் சமூக வலைதளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இதை முன்பே உணர்ந்து, திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு தங்களுக்கான வெற்றி வியூகங்களை வகுத்தன. திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ கம்பெனி.. அதிமுகவுக்கு சுனில் கனுகோலுவின் ‘மைண்ட்ஷேர் அனல்டிக்ஸ்’ கம்பெனி.. இவர்கள்தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதப்போகும் சக்திகளாக பார்க்கப்பட்டனர்; பேசப்பட்டனர். பிரசாந்த் கிஷோரும் சுனிலும் ஒரு காலத்தில் அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் பணி செய்தவர்கள்தான். அப்போது இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்த திட்டம் ஒன்றில் பணியாற்றுவதற்காக கடந்த2011-ல் குஜராத்துக்கு வந்தார் பிரசாந்த் கிஷோர். அப்போது முதல்வராக இருந்த மோடியுடன் தனக்கான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்ட கிஷோர்,…
Read More
வங்கத்தில் வென்றாலும், வெல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பாஜக ஆட்சி அமைவதை தவிர்க்க முடியாது.?

வங்கத்தில் வென்றாலும், வெல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பாஜக ஆட்சி அமைவதை தவிர்க்க முடியாது.?

இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரமான மேற்கு வங்கம் தற்போது இந்தியாவின் கலவர பூமியாக உருமாறியுள்ளது. நாளொரு துப்பாக்கி சூடு, பொழுதொரு கலவரம் என்று அல்லோகலப்படுகிறது. தேவையற்ற வகையில் எட்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது, மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி விசிட் செய்து அதகளப்படுத்துவது, மம்தாவின் உக்கிரமான எதிர்வினைகளால் வங்கத்தில் யாருக்கு வாய்ப்பிருக்கிறது…? கம்யூனிஸ்டுகள் ஏன் காணாமல் போனாங்க…? வங்கத்தை எப்படியாவது வசப்படுத்திடணும்னு ஒட்டு மொத்த மத்திய அரசின் பலத்தை பிரயோகித்து, மம்தாவின் மாநில ஆட்சியை நிலைகுலைய செய்தது பாஜக! 20 க்கும் மேற்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை மம்தாவிடமிருந்து தூக்கியது பாஜக! அத்துடன் நிறைய கட்சி நிர்வாகிகளையும் திரிணமுல் கட்சியிடமிருந்து திருடியது. இதையெல்லாம், வருமான வரித்துறை, சி.பி.ஐ ரெய்டு ஆகிய அச்சுறுத்தல்களால் தான் சாதிக்க முடிந்தது! அரச மற்றும் அசுர பலத்துடன் இப்படி சில அக்கிரமங்கள் செய்வது போதாதுண்ணு தொழில் முறை ரவுடிகளை எல்லாம் கட்சியில் இணைத்து, ஆங்காங்கே பல வன்முறை சம்பவங்களை நிகழ்த்துகிறது பாஜக.…
Read More
எஸ்.பி.வேலுமணியின் அதிகாரம் எல்லாம் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு அப்படியே அடங்கிவிட்டதாம்.

எஸ்.பி.வேலுமணியின் அதிகாரம் எல்லாம் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு அப்படியே அடங்கிவிட்டதாம்.

கடந்த ஒருவாரமாக கோவையில் எங்கு திரும்பினாலும், என்னப்பா… போலீஸ் கமிஷனர் இந்த விரட்டு விரட்டுகிறார் என்ற பேச்சுதான் பரவலாக கேட்கிறதாம்.. கோவை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக கடந்த நான்காண்டுகளாக கொடி கட்டி பறந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அதிகாரம் எல்லாம் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு அப்படியே அடங்கிவிட்டதாம். 4 ஆண்டு காலம் மூச்சை அடக்கி வாழ்ந்துக் கொண்டிருந்த கோவை மக்கள், ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகுதான் சுதந்திரம் அடைந்ததைப் போல, நிம்மதியாக மூச்சு விடுவதுடன் எவ்வித அச்சமும் இன்றி சுற்றி வருகிறார்கள். அந்தளவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ராஜாங்கம், இல்லை, இல்லை அராஜகம் கோவையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்து வந்திருக்கிறது. அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு கோவை மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணி மட்டுமே அதிகார திமிரைக் காட்டவில்லை, அவருடைய சகோதரர், உறவினர்கள் என பெரிய பட்டாளமே தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி…
Read More
ஜனநாயகப் பொறுப்பை இழந்த தேர்தல் ஆணையம் ?  அமித்ஷாவின் கைப்பாவையாக மாறிய அவலம்.?

ஜனநாயகப் பொறுப்பை இழந்த தேர்தல் ஆணையம் ? அமித்ஷாவின் கைப்பாவையாக மாறிய அவலம்.?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 ன் படி, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் நிறைந்த அமைப்பபு தான் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். இந்தியாவில் நியாயமான முறையில் நடுநிலையுடன் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல்களை நடத்துவதே, தேர்தல் ஆணையத்தின் பொறுப்பும், கடமையும் ஆகும். ஆணையத்தின் முதல் ஆணையராக, சுகுமார் சென் என்பவர் 1950, மார்ச் 21 இல் நியமிக்கப்பட்டார். இவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவருக்கு பின் வந்த கே.வி.கே.சுந்தரம் சுமார் ஒன்பது ஆண்டு காலம் இப்பதவியில் இருந்தார். இவர்களுக்கு பின்னர் 1990 டிசம்பர் 12 இல் ஆணையராக வந்த டி.என்.சேஷன் சுமார் ஆறு ஆண்டுகள் இப்பதவியில் இருந்த போதுதான், தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகள், அதிகாரங்கள் மக்களுக்கு தெரிய வந்தது. அதிலிருந்து சுனில் அரோரா வரை 23 பேர் தேர்தல் ஆணையர்களாக இருந்துள்ளனர். 2010…
Read More
234 தொகுதிகளில், 184 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளனர்

234 தொகுதிகளில், 184 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளனர்

184 இடங்களாமே.. "ஓவர்டேக்" செய்த பெண்கள்.. வளைத்து வளைத்து குத்தி.. கலக்கத்தில் அதிமுக, திமுக..!* மொத்தமாகவே தமிழகத்தில் இந்த முறை வாக்கு சதவீதம் குறைவாக பதிவானதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், 234 தொகுதிகளில், 184 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.. இதனால், இவர்கள் எல்லாம் யாருக்கு ஓட்டு போட்டிருப்பார்கள் என்று தெரியாததால், அதிமுக, திமுவும் கலங்கி போய் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை தேர்தல் பலவித செய்திகளை தாங்கி வந்துள்ளது.. தமிழகத்தில் வழக்கம்போலவே வாக்குகள் குறைவாக பதிவாகி இருக்கிறது.. ஆனால், 10 அதிமுக அமைச்சர்களின் தொகுதிகளில் நல்ல வாக்குப்பதிவு பதிவாகி இருக்கிறது. இதில் அதிர்ச்சியை தரும் அளவுக்கு குறைவான வாக்குகள் பதிவானது, ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி, மற்றும் சீமானின் திருவொற்றியூர் தொகுதி ஆகும்.. பலருக்கு எப்படி ஓட்டுப்போட வேண்டும் என்று தெரியாமல் திரும்பி சென்றதாகவும், பூத் சிலிப் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், காரணம் சொல்லப்பட்டது.…
Read More
ஆட்சியில் பங்கு..!’ – விருப்பத்தில் பா.ஜ.க, காங்கிரஸ்… அ.தி.மு.க, தி.மு.க நிலைப்பாடு என்ன?

ஆட்சியில் பங்கு..!’ – விருப்பத்தில் பா.ஜ.க, காங்கிரஸ்… அ.தி.மு.க, தி.மு.க நிலைப்பாடு என்ன?

ஆட்சியில் பங்கு..!’ - விருப்பத்தில் பா.ஜ.க, காங்கிரஸ்... அ.தி.மு.க, தி.மு.க நிலைப்பாடு என்ன? 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்டமான வாக்குப்பதிவு, எந்தவித பெரிய அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. அடுத்ததாக, வாக்கு எண்ணிக்கை என்ற கத்தி அரசியல் கட்சிகளின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைத்தால் பா.ஜ.க-வும், தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் காங்கிரஸும் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? என்ற கேள்வியை இரு கூட்டணிகளையும் உற்று நோக்கிவரும் அரசியல் ஆய்வாளர் ஒருவரிடம் பேசினோம். ”இப்படிப்பட்ட சூழல் தமிழகத்தில் சமீப காலத்தில் நடந்ததே இல்லை. ‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்பதுதான் திராவிட இயக்கங்களின் கொள்கையே. ஒரு எம்.பி ஜெயித்தாலும் மத்திய கேபினட்டில் பங்கு கேட்கும் திராவிடக் கட்சிகள், அதேபோன்ற ஒரு பங்கினை மாநில கேபினட்டில் தேசியக் கட்சிகளுக்கு வழங்குவதில்லை. இந்த கொள்கையில் இரு கட்சிகளுமே ஒரே நேர்கோட்டில்தான் உள்ளது. 2006-ல் தி.மு.க 98 தொகுதிகளில் மட்டுமே…
Read More
கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு டோஸ் விட்ட எடப்பாடி பழனிசாமி .?

கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு டோஸ் விட்ட எடப்பாடி பழனிசாமி .?

இப்படி ஒரு செய்தி சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் பரவி வருகிறது.. அந்த செய்தியின்படி, சட்டசபை தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவிற்கு கடும் பின்னடைவு ஏற்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாம். இதனால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செம டோஸ் விட்டதாக சொல்கிறார்கள். சட்டசபை தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வென்று ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுகவிற்கே சாதகமாக சூழ்நிலை இருப்பதாக கூறப்பட்டது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஈரோடு மாவட்டத்தில் திமுகவிற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது. அங்கு அதிமுகவில் முக்கிய தலைவர்களாக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் இருந்தார்கள். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் 3 பேரும் வெற்றி பெற்றாங்க. அதில் கருப்பணனும், செங்கோட்டையனும் தற்போதும் அமைச்சர்களாக…
Read More
ஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. “அது” நடக்குமா?! !

ஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. “அது” நடக்குமா?! !

யாருமே சொல்லாத, சொல்ல முடியாத ஒரு விஷயத்தை ராகுலிடம் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.. இந்திய அரசியலில் இது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 140 வருட பழமை வாய்ந்த கட்சிக்கு ஒரு தலைவர் இல்லை.. தேசிய அளவில் காங்கிரசுக்கு இது ஒரு பிரதான பிரச்சனையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. சோனியா காந்தி மட்டும் உடல்நலம் தேறி, பொறுப்பில் இருந்தால், இந்த கட்சி இப்படி சிதைந்து போயிருக்காது.. இடைக்கால தலைவர் பதவியில் அவர் இருப்பதால் பெரிதளவு எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் தான் உள்ளது. எனவே ராகுல் காந்தியே இந்த தலைமை பொறுப்பினை ஏற்றிருக்கலாம். அதிருப்திக்கு உள்ளான அந்த 23 மூத்த தலைவர்களையும் சோனியா காந்தி சமாதானப்படுத்தினாரா? அல்லது அதற்கான முயற்சிகள் கைகொடுத்ததா என்று தெரியவில்லை.. ஆனால் சம்பந்தப்பட்ட 23 பேரும், தலைவரை தேர்ந்தெடுங்கள், அது ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி என்றுதான் சொல்கிறார்கள்.. அந்த வகையில் ராகுலுக்கு எந்தவித எதிர்ப்பும் பெரிதாக அகில இந்திய…
Read More