புதிய முதல்வர் யார்?

புதிய முதல்வர் யார்? என்பதை தமிழக மக்கள் முடிவு செய்ய ஒரு வாரம் கூட அவகாசம் இல்லாத சூழலில் இப்போதைய பரப்புரையில் தகிக்கும் அனலையும் தாண்டி அன்லிமிட்டெட் டாக்- அதாவது எல்லை மீறிய பேச்சு சகல தரப்பிலும் இருந்து வருகிறது. அப்படித்தான் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சொர்ணாம்பிகை லே-அவுட் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக நிர்வாகியான வானதி சீனிவாசன் கமல்ஹாசனப் பத்தி என்ன சொன்னாங்கன்னா “என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதின்னு மக்கள் நீதி மையம் கட்சியினர் சொல்றாங்க.அந்த நடிகரை பார்த்து கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர். லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதின்னு எப்படி சொல்லலாம்? மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் கமலஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டும்” என்று வானதி சீனிவாசன் பேசினார். உடனே ‘அச்சச்சோ வானதி இப்படி பேசலாமா?’ என்று ஒரு பக்கமும், கமல் தரப்போ யாகாவராயினும் நா காப்போம் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.

உண்மையில் இது சர்ச்சைக்குரிய விஷயமான்னு பாப்போம்!

முன்னொரு முறை சினிமா பத்திரிக்கையாளர்  நடத்திய சங்க விழா ஒன்றில் கலந்துகொண்ட கமல், தான் முதன் முதல் முத்தக் காட்சியில் நடித்ததை நினைவு கூர்ந்தார்.

‘உணர்ச்சிகள்’ படத்தில் நடிக்கும்போது எனக்கு வயசு 18.

அப்போ என்னைப்பற்றி ஒரு நியூஸ் வருமா என ஏங்கிய காலம்.

ஒரு நிருபரிடம் ‘என்னைப் பற்றி ஒரு செய்தி போட முடியுமா?’ என்றேன்.

‘பரபரப்பா ஏதாவது செய்யுங்க’ என்றார்.

அப்போதுதான் நான் முத்தக் காட்சியில் நடித்ததைப் பற்றிச் சொன்னேன்.

மறுநாள் அது பரபரப்பான நியூஸ் ஆயிடுச்சு” என்று பகிர்ந்துகொண்டார் கமல். மேலும் பிறிதொரு சமயம் நான் முத்தம் கொடுத்து கலாச்சாரத்தை சீரழிக்கிறேன் என்று கூறினால், சட்டம் என் கையில் படம் வந்தபோதே என்னை புறக்கணித்திருக்க வேண்டும். அப்போதே முத்தக் காட்சியில் நடித்து விட்டேன். அதிலும் ஒரு தாய் தன் மகளுக்கும், மகனுக்கும் முத்தம் கொடுக்கிறார். சிறு குழந்தைக்குப் பலரும் முத்தம் தருகிறார்கள். ஆழமான காதலையும், அன்பையும் காட்ட முத்தம் நியாயமானதே. “புன்னகை மன்னன்” படத்தில் வரும் முத்தக்காட்சி, என்னைப் பொறுத்தவரை சாதாரண விஷயம். “வனமோகினி” (எம்.கே.ராதா – தவமணிதேவி முத்தக்காட்சி இடம் பெற்ற படம்) காலத்திலேயே முத்தக்காட்சி வந்துவிட்டது. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.முத்தக்காட்சி தவறானதோ, பாவச் செயலோ அல்ல. அதைப் பயன்படுத்துகிற முறையைப் பொறுத்து, அந்தக் காட்சி அழகானதாகவே மாறும். எல்லோருக்குமே முத்தம் பொதுவானது! பல் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே இது விதிவிலக்கு! – என்றெல்லாம் சொல்லி இருந்தார்

இதே முத்தம் குறித்து கமல்ஹாசன் ஒரு முறை… “முத்தம் இல்லாமல் ஒரு நாள் கூட என் வாழ்வில் கழிந்தது கிடையாது. இந்த அன்பின் சின்னத்தை ஏன் கலாச்சார சீரழிவாக பார்க்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு இன்னும் விளங்கவில்லை. தினமும் என் தாயிடம் கன்னத்தில் முத்தம் பெற்ற பின் தான் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவேன்’ என்றும் சொல்லி இருந்தார் கமல்.

உண்மைதான்.. முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும் ஓர் வழி. பெற்றோர்கள், நண்பர்கள் போன்றவர்களுக்கு கன்னங்கள், நெற்றி, கைகளில் முத்தத்தைக் கொடுப்போம். நம் மனதிற்கு நெருக்கமான மற்றும் வாழ்க்கை துணையாக வருபவர்களுக்கு அன்பின் உச்சக்கட்டமாக உதட்டோடு உதடு முத்தம் கொடுப்போம். சொல்லப்போனால் முத்தம் ஒரு நல்ல உணர்வைக் கொடுப்பதோடு, நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது தெரியுமா? அதுவும் உதட்டோடு உதடு வானதி ஸ்ரீனிவாசன் சொன்ன லிப் சர்வீஸ் எனப்படும் முத்தம் கொடுப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம்.

இந்த பதிவுல அதப்பத்தி தான் பார்க்கப் போகிறோம். அதைப் படித்து அந்த நன்மைகளைத் தெரிந்து கொண்டு, இனி தினமும் உங்கள் துணைக்கு லிப் கிஸ் கொடுத்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பொதுவாக எச்சரிக்கையுடன் இருக்கச் செய்யும் முத்தம் கொடுப்பதால் பெறும் நன்மைகளுள் முதன்மையானது ஒருவரை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்யும். எப்படி என்றால் அடிக்கடி முத்தம் கொடுக்கும் போது, உடலில் நோர்அட்ரினலின் மற்றும் அட்ரினலின் வெளியீடு ஊக்குவிக்கப்பட்டு, இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து, மிகவும் உற்சாகமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கச் செய்யும்.

கூடவே நுரையீரல் ஆரோக்கியம் முத்தம் கொடுத்த பின், நாம் வேகமாக சுவாசிப்போம். சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசித்தால், முத்தம் கொடுத்த பின்பு ஒரு நிமிடத்திற்கு 60 முறை சுவாசிப்போம். நாம் அதிகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதன் மூலம், நுரையீரல் சம்பந்தமாக பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், தினமும் உங்கள் துணைக்கு லிப் கிஸ் கொடுங்கள்.

மேலும் உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன.உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் கிடைக்கிறதாம்.ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம்.

இதில் ஆண் பெண் இருவரின் பங்குமே முக்கியமானது. ஆண் பார்வையாளராகவும், பெண் பங்கு கொள்பவராகவும் இருந்தால் மட்டுமே முத்தம் இனிக்கும். எடுத்த உடனே நாக்கை நீட்டிச் சுவைக்கக் கூடாதாம். நாக்கோடு, நாக்குகள் உரசும் போது, மெல்ல நாக்கின் முனையைச் சுவைத்து, மெல்ல நிமிண்ட வேண்டுமாம். ஏனெனில் பெண்ணின் உணர்வுகள்,நாக்கின் நுனியில் நிரளச் செய்தால், பலமாக அதிகமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதிலும் எத்தனை நேரம் முத்தமிடுகிறோம் என்பதை விட,எப்படி முத்தமிடுகிறோம் என்பதே பெரிது எனவே அடிக்கடி முத்தமிடுங்கள். எப்போது முத்தமிட்டாலும், எடுத்த உடன் லிப் லாக் செய்ய கூடாதாம். இரண்டு நிமிடம் இதழ்களையும் , நாக்கையும் சுவைத்து அறிந்த பின்னரே லிப் லாக் செய்ய வேண்டுமாம். ஒரு போதும் கண்ணை திறந்தபடி முத்தமிடவேண்டாம். கண்ணை மெதுவாக மூடி கற்பனையில் ரசியுங்கள் என்றும் வல்லுநர்கள் சொல்கிறார்கள். இந்த பதிவை கேட்டதுக்கு அப்புறம் பொது இடத்தில லிப் கிஸ் குடுத்து போலீஸ்ல மாட்டிகிட்டா நாங்க பொறுப்பில்லை.

Related posts:

திமுகவில் ஓரங்கட்டப்படும் கனிமொழி ?அதிர்ச்சியில் அவரது ஆதரவாளர்கள்.?
ரிசல்ட்டுக்குப் பிறகு அதிமுக தன் கைக்கு வருமா? ஜோதிடர்களுக்கு வலை வீசும் சசிகலா…
தூங்கும் அதிமுக ஊழல் ஃபைல்கள்... ஸ்டாலின் சைலண்ட்- என்ன நடக்கிறது?
பா.ஜ.வுக்கு கூஜா தூக்கும் தேர்தல் கமிஷன்
கொங்கு நாடு யாருக்கு ? திமுகவுடன் முட்டி மோதும் பாஜக ? என்ன செய்யப் போகிறது அதிமுக ?
அரசியலில் குதிக்கும் விஜய்! பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு? அதிர்ச்சியில் திராவிடக் கட்சிகள் ?
எஸ்.பி.வேலுமணியின் அதிகாரம் எல்லாம் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு அப்படியே அடங்கிவிட்டதாம்.
மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது திமுகவா ? அல்லது அதிமுகவா