தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் இன்று காலை ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் மத்திய வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று பாஜக நம்பிய நிலையில் திமுக நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. திருச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ரெய்டு நடத்தும்படி அழைப்பு விடுக்க, திமுக வேட்பாளர்கள் அனைவரும் பிரதமர் தங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும், அது தாங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபபெற உதவும் என்றும் டூவிட்டரில் பதிவிட, இது பாஜகவை திகைக்க செய்திருக்கிறது.
இதுவரை தாங்கள் நடத்திய ரெய்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு பணிவதையே பார்த்து பழகியவர்கள் இம்முறை இந்த வித்தியாசமான அழைப்பை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் என்றால், பாஜக அடுத்தடுத்து செய்யும் முட்டாள்தனங்களால் பாதிக்கப்படப் போவது அதிமுக தான் என்று கட்சிக்குள் எழும் குரல்கள் பழனிச்சாமியை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
வெற்றிப் பாதையில் பயணிக்கும் திமுகவை தடுத்து நிறுத்த நாங்கள் போராடிக கொண்டிருக்கும் நிலையில் எங்களுக்கு உதவி செய்ய முடியவில்லையென்றாலும் உபத்திரவம் செய்யாமலிருங்கள் என்று பழனிச்சாமி கவர்னர் மூலம் பாஜக மேலிடத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்.
ஏற்கனவே மோடி பேச்சில் தன்னுடைய தாயாரை இழுத்ததை ரசிக்காத பழனிச்சாமி, அடுத்து வந்த யோகியால் கோவையில் நடந்த கல்வீச்சையும் ரசிக்கவில்லை. இதற்கிடையே அண்ணாமலையின் தேவையற்ற பேச்சால் எழுந்த சலசலப்பு அடங்குவதற்குள் இந்த ரெய்டு என்று அடுத்தடுத்து நடப்பவைகளால் அதிமுகவுக்கு வரக்கூடிய கட்சி அனுதாபிகள் ஓட்டும் சிதறும் அபாயமிருப்பதாக கவர்னரிடம் கோபத்துடன் கூறியிருக்கிறார்.
நடக்கும் கூத்துகள் அனைத்தையும் மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது நமக்கு எதிராக வளர்ந்து தேர்தல் நாளன்று பயங்கரமாக எதிரொலிக்கும் என்ற தகவலை பாஜக மேலிடத்துக்கு கொண்டு சேர்க்கும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.