29
Aug
ஜெயலலிதா ‘வசித்தது’ போயஸ் கார்டன் வேதா இல்லம்னா, அவர் ‘வாழ்ந்தது’ கொடநாடு எஸ்டேட் பங்களாவில் தான். இப்போதும் கூட அவரின் ஆன்மா, கொடநாடு எஸ்டேட்டின் மலை முகடுகளிலும், வெளிர் பச்சை நிறத்தின் தேயிலைத் துளிர் இலைகளிலும் மெதுவாக நகரும் மேகக்கூட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அங்கே நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தை நினைத்து, மழையோடு மழையாக தன் கண்ணீரையும் சிந்திக் கொண்டிருக்கலாம். என்றைக்கோ எப்படியோ எப்ஃஐஆர் போடப்பட்டு, கிட்டத்தட்ட இறுதிச்சடங்கே முடிக்கப்பட்டு விட்ட கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் உயிர் பெற வைத்து உண்மையை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருவதும் அவரின் ஆன்மாவாகக் கூட இருக்கலாம். ஜெயலலிதாவை தன் இதயத்தில் ஏந்தி வாழும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டனின் உள்ளுணர்வுக்குள்ளும் இந்த நினைவுகள்தான் இப்போது ஓடிக் கொண்டிருக்குது.. அவர்கள் உட்பட எட்டுக்கோடி தமிழர்களுக்கும், இந்த வழக்கில் எல்லா உண்மைகளும் வெளி வர வேண்டும் என்பது தான் வேண்டுதலும், ஏக்கங்கள் நிறைந்த எதிர்பார்ப்புமாக இருக்கிறது. எதிர்க்கட்சி…
