வடிவேலு ஒரு படத்தில் கிணத்தைக் காணோம்னு ஒரு காமெடி சீன் வரும்.அதே மாதிரி 2 லட்சத்து 38 ஆயிரம் டன்நிலக்கரியக் காணலேன்னு தமிழக மின்துறை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிருபர்களிடம் பேசும்போது சொல்லியிருக்காரு. என்ன சொல்லியிருக்கிறார் னா இங்கு நிலக்கரி கிடங்கில் இருப்பு சரிபார்க்கப்பட்டது . அப்படி சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் இருக்குது . இந்த இருப்பை சரிபார்க்க கூடிய பணியை இயக்குநர் ( உற்பத்தி ) . இயக்குநர் ( விநியோகம் ) மற்றும் தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கடந்த 6 ந்தேதி முதல் 9 ம் தேதிவரை ஆய்வு பண்ணினாங்க. அந்த ஆய்வின் அடிப்படையில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை என்ற தகவல் கிடைச்சிருக்குது . இதேபோல் , தூத்துக்குடி அப்புறம் மேட்டூர் அனல் மின் நிலையங்கள்லேயும் ஆய்வு பண்ணிகிட்டு வர்றாங்க. இந்த ஆய்வின் அறிக்கை கெடைச்சவுடனே அதன் உண்மை நிலவரங்கள் தெரிவிக்கப்படும் . இந்த இருப்பு விவரம் 31.03.2021 வரை பதிவேட்டில் எடுக்கப்பட்ட கணக்குகளின் அடிப்படையில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் இருக்கிறது . இதனுடைய மதிப்பு ரூ .85 கோடி இருக்கும்ங்கிற திடுக்கிடும் தகவலை வெளியிட்டாரு. தமிழ்நாட்டில் உள்ள எண்ணூர் , மேட்டூர் . தூத்துக்குடி அனல்மின்நிலையங்களுக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து நிலக்கரி வாங்கப்படுகிறது . இந்தோனேஷியாவில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது . ஒடிசாவில் இருந்து தமிழக அரசே கொள்முதல் செய்கிறது . வெளிநாட்டில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது . நிலக்கரி அனைத்துமே சென்னை துறைமுகம் வந்தடையுது . அங்கிருந்து கண்வேயர் பெல்ட் மூலம் எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு கொண்டு வரப்படுது . அதில் கடந்த 3 மாதத்தில் எவ்வளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது . எவ்வளவு மீதி இருக்குதுன்னு கணக்கிடப்பட்டபோதுதான் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது தெரியவந்துள்ளது . ஒரு கப்பலில் 70 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரலாம் . அப்படின்னா , 3 கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அளவுக்கான நிலக்கரி மாயமாகியுள்ளது . இது இந்தோனேஷியா அல்லது ஒடிசாவில் இருந்து கப்பலில் கொண்டு வராமல் , கொண்டு வந்ததாக கணக்கு காட்டினார்களா அல்லது கடந்த சில மாதங்களாக கப்பலில் கொண்டு வரப்படும் நிலக்கரி குறைவாக கொண்டு வரப்பட்டிருக்கலாம்.
ஆனா கணக்கில் அதிகமா கூட காட்டியிருக்கலாம்.இதுக்கு உத்திரவிடப் போவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லியிருக்கிறார்.
இதில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜியின் இந்தக் கருத்துக்கு மின்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி பதிலளித்திருக்கிறார். “அதிமுக அரசு ஏற்கனவே எடுத்த கணக்கைத்தான் தாங்கள் கண்டுபிடித்ததைப் போல அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு வந்தநேரத்தில் நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரியவந்தது.
முந்தைய ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை எனக் கணக்கெடுத்தோம். என்னை பொறுத்தவரை எனக்கு மடியில் கனமில்லை. அதனால், வழியிலும் பயமில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க நானும் முழு மனதோடு ஆதரிக்கிறேன். மின் உற்பத்திக்காக வாங்கிய கடன் குறித்து நானும் விளக்கம் அளித்திருக்கிறேன். நிலக்கரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் வாய்ப்பு அளித்தால், விளக்கம் அளிக்கத் தயார். அதிமுக அரசை குறைகூற வேண்டும் என்பதற்காகவே செந்தில்பாலாஜி இக்குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார்” என்று தங்கமணி தெரிவித்தார்.
. நிலக்கரி தட்டுப்பாடு வந்தநேரத்தில் நாங்கள் ஆய்வு செஞ்சோம். அப்போதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரியவந்தது.
முந்தைய ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லைனு கணக்கெடுத்தோம். என்னை பொறுத்தவரை எனக்கு மடியில் கனமில்லை. அதனால், வழியிலும் பயமில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க நானும் முழு மனதோடு ஆதரிக்கிறேன். மின் உற்பத்திக்காக வாங்கிய கடன் குறித்து நானும் விளக்கம் அளித்திருக்கிறேன். நிலக்கரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் வாய்ப்பு அளித்தால், விளக்கம் அளிக்கத் தயார். அதிமுக அரசை குறை சொல்லணுங்கிறதுக்காகவே செந்தில்பாலாஜி இந்தக்குற்றச்சாட்டைத் வைக்கிறாருன்னு தங்கமணி சொல்லியிருக்காரு.இதுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன சொல்ல வரறாருன்னா கடந்த ஆட்சியில நீங்கள் செக் பண்ணும்போது கொறஞ்சதுன்னா ஏன் நடவடிக்கை எடுக்கலேன்னு எதிர் கேள்வி கேட்டிருக்காரு.இப்ப எல்லாருடைய கேள்வியும் என்னன்னா நிலக்கரி இருக்கா இல்லையா என்ன சொல்லப் போறார் செந்தில் பாலாஜி.