கோபத்தில் பாஜக..! காங்கிரஸ் நிழலில் சூர்யா குடும்பம்..! கை கொடுப்பாரா ராகுல்?

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் தமிழ்மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். தலையில் காந்தி குல்லாவுடன் கதர் ஆடையில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.மத்திய அரசுக்கு எதிராக கடந்த சில வருடங்களாக பேசி வருவதோடு செயல்பட்டும் வரும் சூர்யா குடும்பம் மீது பாஜக கோபத்தில் உள்ள நிலையில் திடீரென சிவக்குமார் காங்கிரஸ் நிழலில் ஒதுங்கியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் தமிழ்மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். தலையில் காந்தி குல்லாவுடன் கதர் ஆடையில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர் சிவக்குமார் இதுவரை அரசியல் ரீதியிலான நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொண்டது இல்லை. அவர் நேற்று கலந்து கொண்டது நாட்டின் சுதந்திர தின விழாவாக இருந்தாலும், நிகழ்ச்சி நடைபெற்றது பிரபல அரசியல் கட்சியின் அலுவலம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்தது.

 

நடிகர் சிவக்குமார் துவக்கம் காலம் முதலே காங்கிரஸ் தலைவர்களான காந்தி, காமராஜர் குறித்து விரிவான சொற்பொழிவுகளை நடத்தி வருபவர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான மரியாதையில், சுதந்திர தின விழாவில் சிவக்குமார் பங்கேற்றதாக விளக்கம் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் விசாரித்தால் உண்மை வேறு மாதிரியாக உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து அதனை தனது பட விளம்பத்திற்கு சூர்யா பயன்படுத்துவதாக ஒரு புகார் நீண்ட காலமாகவே உள்ளது. அதிலும் மத்திய அரசின் நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், அண்மையில் ஒளிப்பதிவு திருத்த சட்டம் போன்றவற்றிற்கு எதிராக சூர்யா கடுமையான கருத்துகளை கூறி வருகிறார். அத்தோடு இந்த விவகாரத்தில் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளையும் கூட சூர்யா எடுத்துச் சொல்லி வருகிறார்.

 

சூர்யா தனது படங்களிலும் கூட நேரடியாகவே அரசியல் பேச ஆரம்பித்துள்ளார். அதிலும் முழுக்க முழுக்க பாஜகவிற்கு எதிரான அரசியலைத்தான் அவர் பேசி வருகிறார். இதனால் நேரடியாக விவாதத்திற்கு வருமாறு சூர்யாவை பாஜகவின் இளைஞர் அணித் தலைவர் மனோஜ் அழைக்கும் அளவிற்கு பிரச்சனை சென்றது. இந்த நிலையில் அண்மையில் ஜெய்பீம் என்கிற படத்தை தயாரிப்பதுடன் அதில் முக்கிய வேடத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஜெய்பீம் என்பது தலித் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக முன்வைக்கும் கோஷங்களில் முக்கியமானது. மேலும் அரசுக்கு எதிராக தீவிரமாக இயங்க கூடிய அமைப்புகள் பயன்படத்தும் கோஷம்.

எனவே இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அது குறித்து மத்திய உளவுத்துறை நேரடியாக  விசாரித்ததாக சொல்கிறார்கள். மேலும் படக்குழு மத்திய உளவுத்துறையின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. படத்தின் கதை என்ன, மத்திய அரசுக்கு எதிரான அம்சங்கள் உள்ளனவா? என்கிற அம்சங்களை திரட்ட உளவுத்துறை கண்கொத்தி பாம்பாக படப்பிடிப்பு தளத்தை சுற்றி வருவதாகவும் சொல்கிறார்கள்.

 

இதனிடையே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மத்திய அரசுக்கு எதிராக நடிகர் விஜய் பேட்டி அளித்தார். அப்போது முதல் அவரை விரட்டி விரட்டி மத்திய பாஜக அரசு பழிவாங்கியது. அவரது படத்திற்கு சென்சார் போர்டு மூலம் சிக்கலை ஏற்படுத்தியது, வீட்டில் வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தியது என விஜயை சுற்றி சுற்றி அடித்தது. அதே பாணியில் அடுத்ததாக நடிகர் சூர்யாவை மத்திய அரசு குறி வைக்க கூடும் என்கிறார்கள். இதனால் தேசிய அளவில் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவை என்று கருதி சிவக்குமார் காங்கிரஸ் நிழலில் ஒதுங்கியுள்ளதாகவும் விரைவில் நடிகர் சூர்யா ராகுல் காந்தியை சந்திப்பார் என்றும் சொல்கிறார்கள்