கேடி ராகவன் பாலியல் விவகாரம்..! கமலாலயத்தை உலுக்கும் உள்ளடி வேலைகள்..! பின்னணி என்ன?

அண்ணாமலைக்கு எதிராக கமலாலயத்தில் ஒரு டீம் உருவானதாகவும், அந்த டீம் கே.டி.ராகவன் சொல்வதை கேட்டு நடந்து வந்ததாகவும் சொல்றாங்க. அதோட ராகவன் டீம் அண்ணாமலைக்கு எதிரா தனது ஊடகத் தொடர்புகளை பயன்படுத்த ஆரம்பித்தது தான் சிக்கலுக்கு மிக முக்கிய காரணம்ங்கிறாங்க.

கோஷ்டி மோதலையும் காங்கிரசையும் எப்படி பிரித்து பார்க்க முடியாதோ அதே போலதான் தமிழக பாஜகவையும் பாலியல் சில்மிஷங்களையும் பிரித்து பார்க்க முடியாதுங்கிறாங்க பாஜகவின் இளம் தலைமுறை நிர்வாகிகள் சிலர்.

கடந்த ஜூன் மாதமே தினமலர் இந்த விவகாரம் தொடர்பாக எழுதியிருந்தது. தமிழக பாஜக நிர்வாகிகள் மீது சுமார் 130 பாலியல் புகார்கள் வரை நிலுவையில் உள்ளதாகவும் இவற்றை விசாரிக்க விரைவில் விஷாகா குழு அமைக்கப்படலாம் என்று அப்போதே தினமலர் தெரிவித்திருந்தது. இப்போ தினமலர் எழுதுனது போலவே, தமிழக பாஜக சார்பில் விஷாகா குழு அமைக்கப்பட்டு மலர்க்கொடி எனும் பாஜக மாநிலச் செயலாளர் குழுவிற்கு தலைவராக்கப்பட்டிருக்காரு. இதன் பின்னணி குறித்து விசாரிச்சப்போ மத்தியில் பாஜக எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்குதோ அப்போதெல்லாம் தமிழக பாஜகவில் பதவிகளுக்கு போட்டியிருக்கும் இது ஊரறிந்த விஷயம்.

இதற்கு காரணம் அதிகாரம் மட்டும் அல்ல பணம் மற்றும் பொறுப்புகள்னு சொல்றாங்க. அதிலும் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்களும் பாஜகவில் ஆர்வமாக சேரும் போது அவர்களை நிர்வாகிகள் தவறாக பயன்படுத்துவது காலங்காலமா நடந்து வர்றதா சொல்லப்படுது. அதிலும் கடந்த 2014க்கு பிறகு தமிழக பாஜகவில் பெண் நிர்வாகிகளை பாலியல் தேவைகளுக்கு சில நிர்வாகிகள் பயன்படுத்துவது அதிகரிச்சிருக்குன்னே சொல்றாங்க.. இது தொடர்பா ஏற்கனவே பல சமயங்கள்ல அங்க பஞ்சாயத்து நடந்திருக்குது அப்போ செட்டில்மென்ட் மூலமாக அது மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்றாங்க..

இந்த நிலையில் இப்போது கேடி ராகவன் சிக்கியிருப்பது பாஜகவின் உள்ளடி வேலை தான் என்று அவரது ஆதரவாளர்கள் திட்டவட்டமாக சொல்றாங்க. எல்.முருகன் மத்திய அமைச்சரான பிறகு தமிழக பாஜக தலைவராகும் கனவில் இருந்தவர் கே.டி.ராகவன். ஆனால் பாஜக மேலிடம் அண்ணாமலையை பாஜக தலைவராக்கியது. இதன் பிறகு அண்ணாமலைக்கு எதிராக கமலாலயத்தில் ஒரு டீம் உருவானதாகவும், அந்த டீம் கே.டி.ராகவன் சொல்வதை கேட்டு நடந்து வந்ததாகவும் சொல்றாங்க. அத்தோடு ராகவன் டீம் அண்ணாமலைக்கு எதிராக தனது ஊடகத் தொடர்புகளை பயன்படுத்த ஆரம்பித்தது தான் சிக்கலுக்கு மிக முக்கிய காரணம்கிறாங்க.

இதனிடையே மதன் ரவிச்சந்திரன் வீடியோவுடன் வந்த போது அது குறித்து அண்ணாமலை உடனடியாக பாஜக மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கலையாம்.  தொடர்ந்து மதன் அந்த வீடியோ பற்றி கேட்டுக் கொண்டே இருக்க அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வீடியோவை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று அண்ணாமலை வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய பதில் தான் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது எந்த நேரத்திலும் தனது தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்பதை அண்ணாமலை உணர்ந்து வைத்திருப்பதாகவும் அதனால் தான் எப்போதும் தான் சாதாரண தொண்டன் என அவர் ட்வீட் போட்டிருக்கிறார் என்றும் பேச்சு அடிபடுது. ராகவன் தொடர்பான வீடியோ வந்த போதே கட்சித் தலைமையில் அவர் கொண்டு செல்லாததும் அவரது நம்பகத் தன்மையை சீர்குலைத்துள்ளது. மேலும் 15பேரின் வீடியோக்களை மதன் வைத்திருப்பது தெரிந்தும் இந்த விஷயத்தில் அண்ணாமலை அசால்ட்டாக இருந்திருப்பதும் அவர் உண்மையிலேயே தலைவர் பதவிக்கு தகுதியானவர் தானாங்கிற கேள்விகளையும் எழுப்பியிருக்குது. இந்த நிலையில தமிழகத்தில் பாஜக நிலவரங்களை கவனிக்கும் சீனியர் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் உடனடியாக அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றனும்னு ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியுள்ளதாக பேசிக்கிறாங்க. அண்ணாமலையின் செயல்பாடுகள் பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டு போல் இருக்கிறதாகவும் ஹை பிரியாரிட்டி கொடுத்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை அவர் மனம் போன போக்கில் பெரிதாக்கிட்டாருன்னு  அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்றாங்க.

கடந்த 20 வருடமா தமிழக பாஜக நிர்வாகிகள் மீது பொதுமக்களுக்கு இப்படி ஒரு கெட்ட பெயர் ஏற்பட்டதே இல்லைன்னும், தமிழக பாஜக நிர்வாகிகள் மீதான மக்களின் பார்வையே மாற மதன் வீடியோ விவகாரம் காரணமாகிட்டதாகவும், அதற்கு பொறுப்பு அண்ணாமலை தான்ன்னும் அந்த சீனியர் ஆர்எஸ்எஸ் தலைவர் தனது ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருப்பதாகவும் இதன் அடிப்படையில் அண்ணாமலையிடம் பாஜக மேலிடம் பதில் கேட்டுள்ளதாகவும். இதுக்கப்புறம்தான் பாஜகவில் தான் எப்போதும் ஒரு சாமான்ய தொண்டன் தான் அண்ணாமலை ட்விட் செய்ததாகவும் சொல்றாங்க. அதாவது எந்த நேரத்திலும் தனது பாஜக தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்பதை அண்ணாமலை உணர்ந்து வைத்திருப்பதாகவும் அதனால் தான் எப்போதும் தான் சாதாரண தொண்டன் என அவர் ட்வீட் போட்டிருக்கிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின் போது அண்ணாமலை, ராகவன் உள்ளிட்டோர் எப்படி மதனிடம் சிக்கினார்கள் என்கிற விவரத்தை தான் தற்போது உளவுத்துறை ஆராய்ந்து வருவதாக சொல்றாங்க. அதிலும் கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்தை அண்ணாமலை மிகவும் லாவகமாக கையாண்ட அடுத்த சில நாட்களிலேயே அண்ணாமலையை குறிவைத்து ஆடியோக்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இவைகள் தான் பாஜகவின் இமேஜை ரொம்ப டேமேஜ் பண்ணிடுச்சி. எனவே அந்த ஆடியோக்கள் இயல்பாக ரெக்கார்டு செய்திருக்கப்பட வாய்ப்பே இல்லை நீண்ட கால சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக கூட இருக்கலாம் என்று பாஜக மேலிடம் நம்புது.

அதிலும் தமிழகத்தில் பாஜகவை சீரமைத்து அடுத்த தேர்தலுக்கு தயாராகும் நேரத்தில் இந்த வீடியோ, ஆடியோ எல்லாம் வெளியானதை எதார்த்தமானதா  பாஜக மேலிடம் நம்பலைங்கிறாங்க.. அடுத்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அவரது இமேஜூம் கிடுகிடுவென உயர்ந்தது. திமுகவின் வாரிசான உதயநிதிக்கு நிகராக சமூக வலைதளங்களில் அண்ணாமலை புகழப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த சூழலில் தான் அண்ணாமலையை மையமாக வைத்து கே.டி.ராகவன் வீடியோ சர்ச்சை எழுந்தது..!

 வீடியோவை வெளியிட்ட மதன் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருடன் கடந்த சில மாதங்களாக நெருங்கியிருப்பதாகவும் ஒரு தகவல்  வருது. இதன் உண்மைத்தன்மையைச் தெரிஞ்சிக்கிறதுக்காக மத்திய உளவுத்துறை களம் இறக்கப்பட்டுள்ளதாகச் சொல்றாங்க.. அதனால இந்த விஷயத்தை பாஜக சாதாரணமாக எடுத்துக்காதுன்னும் பதிலடி கடுமையாக இருக்கும்னும் சொல்றாங்க.!!