20
Aug
அதிமுகவுக்கு இது சோதனையான காலகட்டம்னு நெனைக்கிறேன்.அடுத்தடுத்த பிரச்சனைகளில் அதிமுக மேலிடம் சிக்கி வருது.. கொடநாடு விவகாரம், புளியந்தோப்பு கட்டிடம்னு இரண்டுமுக்கிய விவகாரங்களை திமுக கையில் எடுத்திருக்குது.. இதில் இருந்து அதிமுக எப்படி மீண்டு வரும் என்பதும் எதிர்பார்ப்பாக கிளம்பியிருக்கு.. ஆட்சி அமைத்து 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் திமுக, தன்னுடைய அதிரடியை காட்ட துவங்கியாச்சு.. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைனு அதிமுக கண்டனம் தெரிவிச்சுது.ஆனா திமுக அசரலை.எல்லாம் சட்டப்படி தான் நடக்கும்னு ஸ்டாலின் உறுதியா சொல்லிட்டாரு. ஆனால், அதிமுக மேலிடத்தையே அசைத்து பார்க்கும்படியான ஒரு அஸ்திரத்தை திமுக கையிலெடுத்திருக்கு அதுதான், கொட நாடு விவகாரத்தை தூசி தட்டியிருக்குது திமுக அரசு.. கொடநாடு விவகாரம் சூடுபுடிக்க ஆரம்பிச்சதுமே உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன ரகசியமா சந்திச்சு எடப்பாடிக்கு எதிரான எவிடென்ஸ் எல்லாத்தையும் வாங்கிகிட்டாராம்.எடப்பாடிய காலி பண்ண இதுதான் நேரம்னு…
