அரசியல்

டெல்லி பறந்த “தங்கம்” ஸ்டாலின் தந்த முக்கிய டாஸ்க்

டெல்லி பறந்த “தங்கம்” ஸ்டாலின் தந்த முக்கிய டாஸ்க்

திடீர்ன்னு டெல்லிக்குப் பறந்த "தங்கம் தென்னரசு ! ஸ்டாலின் தந்த முக்கிய டாஸ்க் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி புறப்பட்டுச்சென்றுள்ளார். முக்கியமான 2 திட்டங்களை மனதில் வைத்து இவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். என்கிறார்கள். தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது அதிகரித்து உள்ளது. தினமும் தடுப்பூசி போடப்படும் மக்களின் எண்ணிக்கை 2.1/2 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்கும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை.. தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். இதன் ஒரு கட்டமாகவே முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின்…
Read More
தமிழ்நாட்டுக்குள் விரைவில் வலது காலடி எடுத்து வைக்கும் லாட்டரி…..!

தமிழ்நாட்டுக்குள் விரைவில் வலது காலடி எடுத்து வைக்கும் லாட்டரி…..!

லாட்டரி விற்பனை மீதான தடை நீக்கம்? Plan to lift ban on lottery sales: நிதி நிலையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி தர திமுக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கு. 18 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்தது. இதனால் குறிப்பிட்ட சிலருக்கு அதிக அளவிலும், அரசுக்கும் பெரும் வருவாய் கிடைத்து வந்தது. அதேநேரம், என்றாவது ஒருநாள் லட்சாதிபதி ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், தினக்கூலி பணியாளர்களும், ஏழை எளியோரும் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகவே இருந்தனர். சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை லாட்டரி வாங்கவே செலவழித்ததால், அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இதில் மதுபோதைக்கு அடிமையான பலர்,லாட்டரி சீட்டுக்கும் அடிமையாகிக் கிடந்தனர்.அன்றைய லாட்டரி அதிபர்களான கே.ஏ.எஸ் சேகர், மார்டின் போன்ற பண முதலைகள் டூப்ளிகேட் லாட்டரி சீட்டுகளை அச்சடித்து மக்களை…
Read More
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார் ?

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார் ?

பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக பல்வேறு கட்சிகளில் இருந்து விட்டு வந்த செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார் ? பாஜக பக்கம் தாவும் பெண் எம்எல்ஏ.? தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு குறித்து சத்தியமூர்த்தி பவனில் 2 முறை கூட்டம் நடந்தது. அந்த கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 13 பேர் புதிய முகங்களாக இருந்ததால், `மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ ஆக தேர்வான சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்' என்ற குரல்கள் எழுந்தது. இதற்கிடையே, கட்சியின் மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்களான பிரின்ஸ், விஜயதரணி, முனிரத்தினம் ஆகியோர் இடையே தலைவர் பதவிக்கு போட்டி நிலவியது. அதேநேரம், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் ஆகியோரும்…
Read More
பத்மஷேசாத்ரின்னா பொங்குரீங்க ? வைரமுத்துன்னா ஏன் பம்முரீங்க கனிமொழி மேடம்னு சின்மயி கேள்வி கேட்டிருக்காங்க ?

பத்மஷேசாத்ரின்னா பொங்குரீங்க ? வைரமுத்துன்னா ஏன் பம்முரீங்க கனிமொழி மேடம்னு சின்மயி கேள்வி கேட்டிருக்காங்க ?

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தியாளர் சந்திப்புக்கான வீடியோ தான் இது. சென்னை அமைந்தகரையில் உள்ள St. George’s பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி இவர் சொல்கிறார். இதை எந்த தொலைக்காட்சி செய்தி ஊடகமும் ஒளிபரப்பவில்லை. இன்று PSBB பள்ளியில் நடந்ததை பற்றி விவாதிக்கும் அதே ஊடகங்கள், அன்று St. George’s பள்ளியை பற்றி விவாதிக்காதது ஏன்? PSBB பற்றி பேசும் அமைச்சர்கள் அரசியல்வாதிகள், சமூக போராளிகள் St. George பள்ளியை பற்றி பேச தயங்கியது  ஏன்? இன்று வரை அந்த செய்தி ஊடகத்திலும் வரவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போ  பத்மஷேசாத்ரி பள்ளின்ன உடனே எல்லாரும் ஏன் பொங்கி எழுந்து வர்றாங்க.இதே பத்மஷேசாத்ரி பள்ளியில ஏ.ஆர்.ரஹ்மான் படிச்சப்போ ஃபீஸ் கட்டாததால வெளியேற்றினது இல்லாம கோடம்பாக்கம் ரோட்டுல பிச்சை எடுங்கன்னு சொல்லி என்னைய வெளியே அனுப்பிட்டாங்கன்னு ரொம்ப வருத்தத்தோடு. பேட்டி கொடுத்திருந்தார். ஆனா அவர் ஆஸ்கார் அவார்டு வாங்குனதும்…
Read More
தமிழகத்திற்கு பறக்கும் உதவி.. கரம் தரும் அமெரிக்க சமூகநீதி போராளி ஜெஸ்ஸி ஜாக்சன்.. அசரவைத்த பிடிஆர்!

தமிழகத்திற்கு பறக்கும் உதவி.. கரம் தரும் அமெரிக்க சமூகநீதி போராளி ஜெஸ்ஸி ஜாக்சன்.. அசரவைத்த பிடிஆர்!

தமிழகத்திற்கு  ஆதரவுக்கரம் நீட்டிய அமெரிக்க சமூகநீதி போராளி ஜெஸ்ஸி ஜாக்சன் ! ஆச்சரியப்படவைத்த பிடிஆர்! தமிழகத்திற்கு கொரோனா வேக்சின் மற்றும் மருத்துவ உதவிகளை செய்வதாக அமெரிக்காவின் மனித உரிமை செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடன் இவர் நடத்திய நெகிழ்ச்சியான ஆலோசனை கூட்டத்தில் ஜெஸ்ஸி ஜாக்சன் தமிழகத்திற்கு உதவுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சர்வதேச நாடுகளிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்று வருகிறார். பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் தொடங்கி தடுப்பு நடவடிக்கைகளுக்கான வல்லுநர் ஆலோசனை வரை பல உதவிகளை அமைச்சர் பிடிஆர் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வருகிறார். அமெரிக்காவில் படித்தவர் என்பதாலும், சர்வதேசஅளவில் நிறைய நண்பர்களை கொண்டவர் என்பதால் அமைச்சர் பிடிஆர் மூலம் தமிழகத்திற்கு பல சர்வதேச உதவிகள் கிடைத்து வருகின்றன.…
Read More
ஜுன் 3… கருணாநிதி பிறந்த நாளில் கரம் கோர்க்கும் மு.க.ஸ்டாலின் – மு.க. அழகிரி? தடபுடல் ஏற்பாடுகள்?

ஜுன் 3… கருணாநிதி பிறந்த நாளில் கரம் கோர்க்கும் மு.க.ஸ்டாலின் – மு.க. அழகிரி? தடபுடல் ஏற்பாடுகள்?

முக ஸ்டாலினுடன் முக அழகிரி சந்திப்பு ! இது எப்போ நடந்ததுன்னு நீங்க கேட்கிறது புரியுது.ஜுன் 3... கருணாநிதி பிறந்த நாளில் திமுகவில்- மு.க. அழகிரி? மு.க.அழகிரி திமுகவில் இருந்த வரைக்கும் தென் மாவட்டங்களில் அவரது கைதான் ஓங்கியிருந்தது . தேர்தலில் தனி பாணியை உருவாக்கி திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வார்.அவருடைய திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா ரொம்ப ஃபேமஸ். அழகிரியின் நீக்கத்திற்கு பிறகு அவரது செயல்பாடுகள் எல்லாமே திமுகவிற்கு எதிரானதாக மாறிவிட்டது . அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது திமுக. ஆனால் அதே நேரத்தில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிரான அலை காரணமா திமுக , காங்கிரஸ் கூட்டணி அமோகமாமான வெற்றியை பெற்றது .38 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது.அதிமுக கட்சி சார்பில் ஓபிஎஸ்ஸோட மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.முக அழகிரியோட தயவு இல்லாமல் திமுக அபார வெற்றி பெற்றதை ஸ்டாலின் தொடங்கி தொண்டர்கள் வரை…
Read More
“அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் !

“அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் !

கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் முதல்வர் முக ஸ்டாலின்.. சைலண்ட்டாக சில அதிரடி வேலைகளை தொடங்கி வைத்திருக்கிறார்.  அதன்படி,  அறநிலைய துறைக்கு ஒரு புது உத்தரவு பறந்துள்ளதாம்.. இதற்காகவே அந்த "ஸ்டிரிக்ட்" அதிகாரியிடம் அசைன்மென்ட்டும் தரப்பட்டுள்ளதாம்.. இதையடுத்து அதிமுக, பாஜக மட்டுமல்ல திமுக தரப்பும் கலங்கி போயுள்ளதாக செய்திகள் வருது .சமீப காலமா "இந்துக் கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், இது தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள, அதற்கு சேகர்பாபுதான் சரியான நபர் என்ற எண்ணத்திலேயே இந்த பொறுப்பு அவருக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி விட்டு கட்சி தாவி வந்தால், அவர்களுக்கு உடனே பெரிய அளவிலான பதவிகளை தருவது எம்எல்ஏ சீட் தருவது சமீப காலமாக நடந்து வருகிறது.. இப்படி ஒரு பழக்கத்தை துவக்கி வைத்ததே தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும்தான்.. இந்த பழக்கம் திமுக மட்டுமல்ல அதிமுகவிலும் ஒட்டிக் கொண்டது..! அந்த வகையில் யார்…
Read More
கனிமொழி பேசும்போது இந்த அரசு சொல்வதைச் செய்யும் ! செய்வதைச் சொல்லும் என்று அவங்கப்பா டயலாக்கைச் சொன்னாங்க

கனிமொழி பேசும்போது இந்த அரசு சொல்வதைச் செய்யும் ! செய்வதைச் சொல்லும் என்று அவங்கப்பா டயலாக்கைச் சொன்னாங்க

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயரிழந்த 13 பேர் மற்றும் நிரந்தர ஊனம் அடைந்த 4 பேர் என மொத்தம் 17 பேரின் குடும்பங்கள் தாங்கள் கனிமொழி மேடமுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர் . இந்த இடத்தில எல்லாருக்கும் ஒரு கேள்வி கேட்கத் தோணும்.என்ன சார் கடந்த ஆட்சியில் அவங்களுக்கு அரசு வேலை கொடுத்திருந்தாங்களே அப்புறம் இந்த ஆட்சியிலயும் அரசு வேலையான்னு நீங்க கேட்கிறதும் எனக்கு புரியுது.இது சம்பந்தமா சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள்? அதிலுள்ள உண்மைத்தன்மையை ஆராயாமல் மீம்ஸ் வெளியிடுறாங்க. அதை தெளிவு படுத்தத்தான் இந்த பதிவு. தூத்துக்குடியில் கடந்த 2018 ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற கலவரத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயம் அடைந்த 4 பேர் என மொத்தம் 17 பேரின் குடும்பங்கள் தாங்கள் கனிமொழி மேடமுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர் .…
Read More
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார்..

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார்..

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.. அடுத்தடுத்து உதயநிதியின் செயல்பாடுகள் தொகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதில் போட்டியிட்டார்.. இவருக்கு இளைஞர் அணி தரும்போதும் சரி, சீட் தரும்போதும் சரி, வாரிசு என்ற அடிப்படையிலேயே விமர்சிக்கப்பட்டு வந்தார். ஆனால், தொகுதியில் போட்டியிட்டு 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எம்எல்ஏவாகவும் பதவியேற்றதிலிருந்து, உதயநிதி மீது வாரிசு என்ற பார்வை மெல்ல மெல்ல மாற தொடங்கிவிட்டது.. சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ என்ற அணுகுமுறையும் பெருகி வருகிறது. அதற்கேற்றபடி, இந்த ஒரு வாரமாகவே, தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் உதயநிதி ஆய்வு செய்து வருகிறார்.. எந்த தெருவையும் விட்டு வைக்கவில்லை.. சாக்கடையும், மழைநீரும் கலந்த நீரில் நடந்து சென்று, ஹவுசிங்போர்டு பகுதியை பார்வையிட்டதையும், குப்பை கொட்டுவது முதல் பொது கழிவறையை…
Read More
ரூ.6 கோடி மோசடி புகார்! -முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் நீக்கப்பட்ட பின்னணி

ரூ.6 கோடி மோசடி புகார்! -முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் நீக்கப்பட்ட பின்னணி

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 104 பேரிடம் ரூ.6.62 கோடி ஏமாற்றியதாக மோசடி புகார். நிலோஃபர் கபில் அமைச்சராக இருந்தபோது, பலருக்கு வேலைக்கு வாங்கித் தருவதாக கிட்டத்தட்ட 6 கோடி ரூபாயை தனது அரசியல் உதவியாளரான பிரகாசம் என்பவர் மூலம் மோசடி செய்ததாக நிலோஃபர் கபில் மீது குற்றச்சாட்டுகள் குவிகின்றன. கடந்த ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வாணியம்பாடியைச் சேர்ந்த நிலோஃபர் கபிலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறது, அ.தி.மு.க தலைமை. ‘இப்படியொரு மந்திரி இருந்தாரா?’ என்பதே பலருக்கும் தெரியாது. அப்படியிருந்தும், கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து ஐந்து வருடங்களை அசால்ட்டாகக் கடந்துவந்தவர் நிலோஃபர் கபில். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்கும், நிலோஃபர் கபிலுக்கும் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வில் கடும் மோதல் இருந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்றத்…
Read More