ஜுன் 3… கருணாநிதி பிறந்த நாளில் கரம் கோர்க்கும் மு.க.ஸ்டாலின் – மு.க. அழகிரி? தடபுடல் ஏற்பாடுகள்?

முக ஸ்டாலினுடன் முக அழகிரி சந்திப்பு ! இது எப்போ நடந்ததுன்னு நீங்க கேட்கிறது புரியுது.ஜுன் 3… கருணாநிதி பிறந்த நாளில் திமுகவில்- மு.க. அழகிரி?
மு.க.அழகிரி திமுகவில் இருந்த வரைக்கும் தென் மாவட்டங்களில் அவரது கைதான் ஓங்கியிருந்தது . தேர்தலில் தனி பாணியை உருவாக்கி திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வார்.அவருடைய திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா ரொம்ப ஃபேமஸ். அழகிரியின் நீக்கத்திற்கு பிறகு அவரது செயல்பாடுகள் எல்லாமே திமுகவிற்கு எதிரானதாக மாறிவிட்டது . அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது திமுக. ஆனால் அதே நேரத்தில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிரான அலை காரணமா திமுக , காங்கிரஸ் கூட்டணி அமோகமாமான வெற்றியை பெற்றது .38 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது.அதிமுக கட்சி சார்பில் ஓபிஎஸ்ஸோட மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.முக அழகிரியோட தயவு இல்லாமல் திமுக அபார வெற்றி பெற்றதை ஸ்டாலின் தொடங்கி தொண்டர்கள் வரை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.ஆனால் சட்டமன்ற தேர்தல் அப்படி இல்லை.கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை.கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 1.3% சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது.அதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது.வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி வாக்குகளைப் பிரித்தது தான் காரணம். கடந்த தேர்தல் மாதிரி கோட்டை விட்றக்கூடாது என்பதற்காகவே வைகோவைச் சேர்த்துக் கொண்டார்.அதிலும் புத்திசாலித்தனமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வைத்து குருவை மிஞ்சிய சிஷ்யனாகி விட்டார்.
சட்டமன்ற தேர்தலைச் சந்திப்பதற்காகவே பிரசாந்த் கிஷோரை தேர்தல் ஆலோசகராக நியமித்தார்.அவர் போட்டு கொடுத்த ஸ்கெட்ச் படி ஸ்டாலினும் நடந்து கொண்டார்.
தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை அமமுக பிரிப்பது நமக்கு சாதகம் என்பதைக் கணித்தார். வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு நமக்கு பாதகமாக இருக்குமோ என்று யோசித்தார்.ஆனால் வன்னியர்கள் அந்த உள் இட ஒதுக்கீடை நம்ப வில்லை.திமுகவுக்கு சேலம் , ஈரோடு கோவை மாவட்டங்களில் மட்டும் சறுக்கல்கள் ஏற்பட்டது.
எல்லாவற்றையும் மீறி திமுக கூட்டணி159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதலமைச்சராக ஆகிவிட்டார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் எனது தம்பி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி வாழ்த்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முதல்வராக முகஸ்டாலின் பதவியேற்றது கூட கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு எளிமையான முறையிலேயே பதவியேற்பு விழா நடைபெற்றது .

இந்த ஒரு புதிய திருப்பமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மு.க. அழகிரி இணைந்து ஜூன் 3-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு முன்னரே மு.க. அழகிரியை கருணாநிதி குடும்பத்தினர் சமாதானப்படுத்திவிட்டனர். ஏசுநாதர் சொன்ன மாதிரி தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்னு சொன்ன மாதிரி முக அழகிரி கதவைத் தட்டினார்.கேட்டது கிடைத்தது.தேர்தலில் திமுக ஜெயிக்கணும் மு.க. அழகிரி அதக் கெடுத்துடக் கூடாது என்கிற அடிப்படையில் இந்த சமாதான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மு.க. அழகிரியும் தம் பங்குக்கு எந்த இடையூறும் செய்யாமல் அமைதி காத்தார். இதனால் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற உடனேயே சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்தும் தெரிவித்தார் அழகிரி. இதனை திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் கட்டம் கட்டி வெளியிட்டது. சென்னை ஆளுனர் மாளிகையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு அழகிரி மகனும் மகளும் சென்றனர். அழகிரி மகன் துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலினின் மகனும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கட்டித்தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையேயான மன வருத்தங்கள் முழுவதும் விலகிவிட்டதாகச் சொல்கிறார்கள். மதுரையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அழகிரி வீட்டுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினின்
பயணத் திட்டத்தின்படி அரசு முறை பயணத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிந்தது. முதல்வர் ஸ்டாலினும் மதுரை பயணத்தை முடித்துவிட்டு உடனே திருச்சி கிளம்பிச் சென்று விட்டார்.

இதனிடையே மு.க. அழகிரி எப்போது திமுகவுக்கு திரும்புவார் என்கிற கேள்வி அழகிரி ஆதரவாளர்களிடையே எழுந்தது. மு.க. அழகிரி ஆதரவாளர்கள் திமுகவில் இருந்து ஒதுங்கியபடியே இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த முறை உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வாய்ப்பும் தரப்படவில்லை. அவர்களுக்கான பொறுப்புகளும் என்ன என்பதும் பேசி முடிக்க வேண்டி உள்ளது.  இந்நிலையில் வரும் ஜூன்3-ந் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டில் இருந்து அழகிரி, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. என ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக கருணாநிதி நினைவிடம் செல்ல திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறதாம். அதன்பிறகு ஆற அமர உட்கார்ந்து, கட்சி விவகாரங்களைப் பேசிக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அப்படி மு.க. அழகிரி திரும்பவும் திமுகவுக்குள் நுழையும் போது அவரது தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. இந்த தகவல்கள் மு.க. அழகிரி ஆதரவாளர்களை பெரும் உற்சாகப்படுத்தி இருக்கிறதாம்.இருக்காதா பின்னே ! தென் மண்டல அமைப்பு செயலாளராக மீண்டும் அழகிரி நியமிக்கப்பட்டால் அதிமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.