தமிழ்நாட்டுக்குள் விரைவில் வலது காலடி எடுத்து வைக்கும் லாட்டரி…..!

லாட்டரி விற்பனை மீதான தடை நீக்கம்? Plan to lift ban on lottery sales:

நிதி நிலையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி தர திமுக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கு.

18 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்தது. இதனால் குறிப்பிட்ட சிலருக்கு அதிக அளவிலும், அரசுக்கும் பெரும் வருவாய் கிடைத்து வந்தது. அதேநேரம், என்றாவது ஒருநாள் லட்சாதிபதி ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், தினக்கூலி பணியாளர்களும், ஏழை எளியோரும் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகவே இருந்தனர். சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை லாட்டரி வாங்கவே செலவழித்ததால், அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இதில் மதுபோதைக்கு அடிமையான பலர்,லாட்டரி சீட்டுக்கும் அடிமையாகிக் கிடந்தனர்.அன்றைய லாட்டரி அதிபர்களான கே.ஏ.எஸ் சேகர், மார்டின் போன்ற பண முதலைகள் டூப்ளிகேட் லாட்டரி சீட்டுகளை அச்சடித்து மக்களை ஏமாற்றி வந்தனர்.

இதைக் கருத்தில் கொண்டு,தமிழ்நாட்டில் 2003 ஜனவரியில்,
அப்போதைய முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தார்.லாட்டரி சீட்டால மக்கள் பாதிக்கப்படுறாங்கன்னு விளக்கம் சொன்னாலும் பல்வேறு அரசியல் காரணங்களும் இருந்தது. ஆன்லைன் லாட்டரியும் தடைசெய்யப்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட வருவாய் இழப்பானது, 2001-ல் முற்றிலும் அரசுடையாக்கப்பட்ட மதுக்கடைகள் மூலம் ஈடுகட்டப்பட்டது. ஆனாலும்,லாட்டரி சீட்டுகள் தடையை மீறி ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது இன்னமும் மறைமுகமாக விற்கப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில்,திமுக நிர்வாகிகளால் நிழல் முதலமைச்சர் என்று அழைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை பிரபல லாட்டரி அதிபர் கோவை மார்ட்டின், காங்கிரஸ் முன்னாள் எம்.பி,ஜே.எம்.ஹாரூண் ஆகியோர் தரப்பு சந்தித்துள்ளது.
மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா இதற்கான ஏற்பாட்டை செய்ததாக தெரிகிறது. அப்போது,அரசின் வருவாயைப் பெருக்க,  லாட்டரி விற்பனை மீதான தடையை நீக்கி மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி தாங்கன்னு கேட்டிருக்காங்க !

வழக்கமான சம்பிரதாயங்களைத் தாராளமா செய்யவும் தயார் என அவர்கள் கூறியபிறகு, உதயநிதியுடன் கலந்துபேசிவிட்டு,முதலமைச்சர்  மூலம் அறிவிப்பை வெளியிட வைப்பதாக சபரீசன் உறுதியளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை மார்ட்டின் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு நெருக்கமாக இருந்ததோடு சினிமா படமும் எடுத்தவர். ஜே.எம். ஹாரூனும் திமுக–வுக்கு மிகவும் நெருக்கமானவர்தான்.அவரது நெருக்கத்தைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னா சென்னைல கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கலை.ஆனா ஜே.எம்.ஹாரூண் தனது நெருக்கத்தைப் பயன்படுத்தி தனது மகன் ஹசன் மௌலானாவுக்கு வேளச்சேரி தொகுதியை கேட்டு வாங்கி வெற்றியும் பெற்று விட்டார்.

இப்போ நீங்களே சொல்வீங்க விரைவில் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி கெடச்சிடும்னு.

டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரேயடியா. மூட முடியாதுங்கிறது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியும்.அதனால படிப்படியாக குறைக்க இருப்பதாலும், கொரோனா பேரிடர் காரணமாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை கடும் சரிவை சந்தித்துள்ளதாலும், நிதி  வருவாய்க்காக, லாட்டரி விற்பனையை முறைப்படுத்தி அனுமதிப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம்.
பொதுமக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்படுதுன்னு முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை விட்டால் சரியாப் போயிடும்! புது விளக்கம் சொல்றாங்க என்னன்னா மது குடிச்சா ஹெல்த்தும், வெல்த்தும் போகும். .. ஆனால் லாட்டரி சீட்டால வெல்த் மட்டும் தான் போகும்னு விளக்கம் சொல்வார்களாம்.

அதேபோல்,அண்டை மாநிலமான கேரளாவில் இன்னமும் லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து வருவதையும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டலாம். லாட்டரி விற்பனையை அனுமதித்தால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு தோராயமாக ஏழாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பதை காரணம் காட்டியும்,பக்கத்து மாநிலங்களில் லாட்டரி விற்பனை நடப்பதாலும் ,சிக்கிம்,
நாகாலாந்து,
அருணாச்சலப்பிரதேசம்,மேகலயா மாநில லாட்டரிகள் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் விரைவில் வலது காலடி எடுத்து வைக்கும்…..அதோடு கூடப் பிறந்த அக்கா தங்கச்சியான ஒரு நம்பர் லாட்டரியும் ஆன்லைன் லாட்டரியும் சேர்ந்தே வரும்..இன்னமும் தமிழ்நாட்டில பெரும்பாலான பெட்டிக்கடைகள்ல ஆன்லைன் லாட்டரி சிறப்பு கவனிப்போட நடந்து கிட்டுதானிருக்குது.

இந்த மறைமுகப் பேச்சு வார்த்தை நடந்ததைப் பற்றி தெரிந்து கொண்டசிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது ” தமிழகத்தைப் பொறுத்தவரை லாட்டரி சீட்டு மறைமுகமாக விற்கப்பட்டுதான் வருது . அதை அரசே நேரடியாக விற்றால் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் . அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஏழை, எளிய மக்கள் மற்றும் மாணவர்களின் மேல் படிப்புக்கும் , தரமான மருத்துவ உதவிக்கும் பயன்படுத்தலாம் . அரசு அதிகாரிகள் , அரசியல்வாதிகள் , ஏன் நான் கூட குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கவில்லை . அதுமட்டுமல்ல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் இல்லை
ஆனால் , லாட்டரி சீட்டில் கிடைக்கும் வருமானம் மூலம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி , மருத்துவச் சேவை ஆகியவற்றை கிடைக்க நடவடிக்கை எடுக்கலாம் அரசே லாட்டரியை விற்பனை செய்யலாம் என்று யோசனை கூறினார் இதை எல்லோரும் விமர்சனம் செய்வார்கள் விமர்சனம்தான் நல்ல விடிவுக்கு அடித்தளம் ” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார்.ஏன் சொன்னாநுன்னு உங்களுக்கு இப்ப புரிஞ்சிருக்கும்.

தமிழகத்தில் கடந்த 2003 – ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் தான் லாட்டரி சீட்டு விற்பனக்குத் தடை விதிக்கப்பட்டது உங்கள் எல்லாருக்கும் நினைவிருக்கலாம்.
ஆனா இது மக்கள் நலனுக்காக மட்டும் லாட்டரி சீட்டை அந்தம்மா தடை பண்ணலை அதுக்கு பல்வேறு அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டுது.
இந்த நேரத்தில காலத்தால் அழியாத ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருது .மணமகளே ! மருமகளே ! வா..வா..! வலது காலை எடுத்து வைத்து வா…வாங்கிற பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது.லாட்டரி சீட்டும் கூடிய விரைவில் தமிழகத்திற்குள் தனது வலது காலை எடுத்து வைத்து வரத்தான் போகுது ! விடியல் வரத்தான் போகுது ! யாருக்கு ?