அரசியல்

கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை ?

கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை ?

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. இதையடுத்து கோவை தெற்கு தொகுதி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..! கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட போறார்ன்னதுமே கமல்ஹாசனைப் பார்க்கணும்னு பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தாங்க . ஆரம்பத்தில் இருந்தே வாக்காளர்களைப் பரபரப்பில் வைத்திருந்த தொகுதியாகும்.. நாளுக்கு நாள் இந்த தொகுதியின் பிரச்சாரங்கள் எல்லா ஊடகங்களிலும் இடம்பெற்றது. கமல்ஹாசன் எங்க போட்டியிடப் போறாருங்கிறது ரகசியமாக இருந்தது.மைலாப்பூர் அல்லது ஆலந்தூரில் போட்டியிடப் போவதாகச் சொன்னார்கள்.ஆனால் யாரும் எதிர்பாராத மாதிரி கோவைத் தெற்கில் பாஜக வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.கமலஹாசன் கோவை தெற்கில் போட்டியிடச் சொன்னது துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் தான்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோவையில் மகேந்திரன் போட்டியிட்டு 1 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.அதனால் கமல்ஹாசன் ஆர்வமாக வேட்புமனு தாக்கல்…
Read More
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இல்லாத தமிழக சட்டப்பேரவை !

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இல்லாத தமிழக சட்டப்பேரவை !

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இல்லாத தமிழக சட்டப்பேரவையாக இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் அதற்கான வேலைகளை தொடங்கி விட்டார் என்கிறார்கள். அரசியல் ரீதியாக பழிவாங்கும் குணத்தோடு செயல்படாமல், அவர்கள் செய்த சட்டவிரோத செயல்களே அவர்களது தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டம்.. அதனால், ஜூலை மாதத்திற்குப் பிறகு இ.பி.எஸ்..ஓ.பி.எஸ்.ஸில் தொடங்கி ஒவ்வொருத்தராக முன்னாள் அமைச்சர்கள் சிறைக்குப் போவது உறுதி.முந்தைய அதிமுக ஆட்சியைப் பற்றியும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊழலில் கொடி கட்டி பறந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டவர்களைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதி காக்கிறாரே, காரணம் என்ன? புரியாமல் இருக்கிறார்கள் திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள். அவர்களுக்கு எல்லாம் வார்த்தைகளால் பதில் சொல்லாமல், செயல்களால் பதில் சொல்லி கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சொல்கிறார்கள்.! மூத்த…
Read More
திமுகவில் இணைகிறார் ம.நீ.ம முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்?

திமுகவில் இணைகிறார் ம.நீ.ம முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்?

மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய போது மிகவும் ஆர்வத்துடன் சேர்ந்தவர்களில் ஒருவர் Dr.மகேந்திரன். இவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து கமல் கட்சியின் தூண்களில் ஒருவராக மகேந்திரன் மாறினார். இவரது வீட்டு விசேஷங்களுக்கு சென்று கமல் மிகவும் நெருக்கமானார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தனது சொந்த ஊரான கோவையில் போட்டியிட்டு மகேந்திரன் தோல்வியடைந்தார். இருந்தாலும் 1 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் பெற்று பிற கட்சியினரை ஆச்சரியப்பட வைத்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இங்கு அவர் 36,855 வாக்குகள்  பெற்று திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி விட்டனர். அதில் மகேந்திரனும் ஒருவர்.…
Read More
மோடிக்கு எதிராக மாநில சுயாட்சி கோஷம் ? அணிதிரளும் எதிர்க்கட்சிகள் !

மோடிக்கு எதிராக மாநில சுயாட்சி கோஷம் ? அணிதிரளும் எதிர்க்கட்சிகள் !

  நிர்வாகரீதியாகவும் பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் வேலையை மாநிலக் கட்சிகள் தொடங்கிவிட்டன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேசிய அளவில் சத்தமில்லாமல் ஓர் அரசியல் மாற்றம் அரங்கேறிவருகிறது. மாநிலக் கட்சிகளின் கைகள் ஓங்கி, மத்திய பா.ஜ.க அரசின் அதிகாரம் குறையத் தொடங்கியுள்ளது. ஜெட் வேகத்தில் பாய்ந்துகொண்டிருந்த பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாய்மூடி செல்ஃப் குவாரண்டைன்ல இருக்காங்க. ‘மோடி என்கிற பிம்பத்தை வைத்து, ஒவ்வொரு மாநிலத்தையும் பிடித்துவிடலாம்’ என்ற கனவில் இருந்தவர்களுக்கு, இன்று அந்த பிம்பமே பிரச்னையாகியிருக்கிறது! ‘மாநில அரசின் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரும் எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதற்கான அறிவிப்புகளையும் அதிரடியாக வெளியிட்டுவருகிறது தமிழகத்தில் பொறுப்பு ஏற்றிருக்கும் முகஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு. இப்படி தி.மு.க கையிலெடுத்துள்ள மாநில சுயாட்சி கொள்கையை, பா.ஜ.க ஆளாத பிற மாநிலங்களின் முதல்வர்களும் பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள். மேற்கு…
Read More
அதிமுகவின் ஆதரவுத் தளம் திமுகவினுடையதைவிட குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது !

அதிமுகவின் ஆதரவுத் தளம் திமுகவினுடையதைவிட குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது !

அதிமுகவின் ஆதரவுத் தளம் திமுகவினுடையதைவிட குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது; ஏனெனில் அந்தக் கட்சி தொடர்ந்து வந்த இரண்டு தலைவர்களின் (எம்ஜிஆர், ஜெயலலிதா) ஆளுமைக் கவர்ச்சியையே சார்ந்திருந்தது, கருணாநிதி தனக்குப் பிறகு ஒரு தொடர்ச்சியை விட்டுச்சென்றதுபோல் ஜெயலலிதா தனக்குப் பிறகு கட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு தலைமையை உருவாக்கவில்லை. மேலும் கட்சியின் கட்டமைப்பும் பலவீனமாக இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியின் தலைவர்கள் பெரிதும் ஒன்றிய அரசையே சார்ந்திருந்தார்கள், மாநிலத்தின் மிதமான மக்கள்நல பாணியை அவர்களால் போதிய அளவுக்குத் தக்கவைக்க முடியவில்லை, ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்தனத்தை, இந்துப் பெரும்பான்மைவாதத்தை, முழுமையான நவதாராளமயக் கொள்கைகளை அவர்கள் ஆதரித்தார்கள் அல்லது கிட்டத்தட்ட எதிர்க்கவே இல்லை. குடியுரிமை (திருத்தச்) சட்டம், ஜம்மு & காஷ்மீரை ஒன்றியப் பிரதேசங்களாக ஆக்கியது, பள்ளிக்கல்வியின் வெவ்வேறு தேர்வுகளை மையப்படுத்தியது, விவசாய மானியங்களைக் குறைத்தது, வேளாண்மையைப் பெருநிறுவனமயத்தை நோக்கி முடுக்கிவிட்டது போன்றவைதான் இந்தக் கொள்கைகள். அதிமுகவை திமுக வெற்றிகொண்டது என்றாலும் அதை மிகப் பெரிய வெற்றி என்று…
Read More
ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின் ! அதைக் கச்சிதமா முடித்துக் கொடுத்த வேல்முருகன் !!

ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின் ! அதைக் கச்சிதமா முடித்துக் கொடுத்த வேல்முருகன் !!

பண்ருட்டியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடட்டு வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.. திமுக கொடுத்த சில முக்கியமான டாஸ்க்குகளை வடதமிழகத்தில் கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார்! அரசியல் ரீதியாக எப்போதும் கொதிப்பாக இருக்கும் வடதமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சத்தமே இன்றி மேஜிக் ஒன்றை நிகழ்த்தி வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலின் போது வேல்முருகனுக்கு திமுக ஒரு முக்கிய "அசைன்மென்ட்" கொடுத்து இருந்தது.  அதை வெற்றிகரமாக முடித்த வேல்முருகன் தற்போது அதே உதயசூரியன் சின்னத்தில் திமுக சார்பாக பண்ருட்டி தொகுதியில் களமிறங்கினார். வடதமிழகத்தில் தற்போது வேல்முருகன் செய்த தேர்தல் பணிகள்.. அப்பகுதியின் பல்லாண்டு கால அரசியல் வரலாற்றை கொஞ்சம் கொஞ்சமாக திசை மாற்ற தொடங்கி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் என்று வந்தாலே வடதமிழகம் தனி கவனம் பெறும். இங்கு இருக்கும் வன்னியர் ஜாதி வாக்குகளும், தலித் ஜாதி வாக்குகளும் யாருக்கு செல்கிறது என்பதை…
Read More
இறுதிக் கட்டத்தை நோக்கி ‘பிக்பாஸ்’ மய்யம் ..!

இறுதிக் கட்டத்தை நோக்கி ‘பிக்பாஸ்’ மய்யம் ..!

சட்டமன்ற தேர்தலின் தோல்விக்கு பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து விலகி வருகிறார்கள் கட்சி ஆரம்பித்த போது கமலுடன் உடன் இருந்தவர்களான பேராசியர் கு.ஞானசம்பந்தன் உயர்மட்டக்குழுவில் இருந்த நெல்லை கண்ணனின் மகன் சுகா உள்ளிட்டோர் ஆரம்ப காலத்திலேயே கட்சியில் இருந்து விலகி விட்டனர் . அடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதோடு சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டது மக்கள் நீதி மய்யம் . ஆனால் , சட்டமன்ற தேர்தலில் ஐஜேகே , சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் ஓரிடத்தில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றிபெறவில்லை தேர்தலுக்கு முன்பே வழக்கறிஞர் ராஜசேகர் , சி.கே.குமரவேல் , கடலூர் மாவட்ட பொறுப்பாளர் டி வெங்கடேசன் , முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா என பலரும் கட்சியை விட்டு விலகி விட்டனர் . சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு , துணைத்தலைவராக இருந்த பொன்ராஜ் கமீலா நாசர் , தலைமை…
Read More
பாமக கோட்டையைத் தகர்த்த திருமாவளவன் !

பாமக கோட்டையைத் தகர்த்த திருமாவளவன் !

பாமக கோட்டையைத் தகர்த்த திருமாவளவன் ! பொதுத் தொகுதியில் ஜெயித்து காட்டிய விசிக ! அதுவும் பானைச் சின்னத்தில் !! பா.ம.க., கோட்டையாக கருதப்படுகிற, திருப்போரூர் பொது தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அத்தொகுதியில் ஆய்வு நடத்த நிர்வாகிகளுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், நான்கு தனித் தொகுதிகள், இரண்டு பொது தொகுதிகளில், அக்கட்சி போட்டியிட்டது. பொதுத் தொகுதிகளான திருப்போரூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜியும் நாகப்பட்டினம் தொகுதியில், ஆளூர் ஷாநவாஸும் வெற்றி பெற்றுள்ளனர். தனி தொகுதிகளான காட்டுமன்னார் கோவிலில், சிந்தனை செல்வன், செய்யூர் தொகுதியில், பனையூர் பாபு வெற்றி பெற்றுள்ளனர். திருப்போரூர் தொகுதியில், வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தொகுதியில் அடங்கிய திருக்கழுக்குன்றத்தில் தான், முதல் முறையாக வன்னியர் சங்கம் துவக்கப்பட்டது. பா.ம.க., துணை தலைவரும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவருமான ஆறுமுகம்,…
Read More
ஓபிஎஸ் மாஸ்டர் பிளான், கலக்கத்தில் ஈபிஎஸ்!

ஓபிஎஸ் மாஸ்டர் பிளான், கலக்கத்தில் ஈபிஎஸ்!

அதிமுகவில் அடுத்த அதிரடி; ஓபிஎஸ் மாஸ்டர் பிளான், கலக்கத்தில் ஈபிஎஸ்!தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.முக தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்? கட்சியினர் புகார் குழு அமைத்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை தயக்கம் காட்டும் எடப்பாடி பழனிசாமி, ரகசிய ஆலோசனையில் ஓபிஎஸ் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 66 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை இழந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை நீடித்து வந்த நிலையில், ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழலில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், புகார்கள் எனக் கட்சிக்குள் பலரும் தங்களது கருத்துகளை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.  அதாவது, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் செலவு ஆகிய இரண்டு விஷயங்களில் பெரிதும் கோட்டை விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா தலைமை பொறுப்பில் இருந்த போது, வேட்பாளர்களிடம் நேரடியாக பணம் வழங்கப்படாது. குழு அமைத்து…
Read More
ஆட்டத்தைத் தொடங்கிய கோவை மாநகராட்சி ? நடுக்கத்தில் வேலுமணி ?

ஆட்டத்தைத் தொடங்கிய கோவை மாநகராட்சி ? நடுக்கத்தில் வேலுமணி ?

4 ஆண்டு காலம் மூச்சை அடக்கி வாழ்ந்துக் கொண்டிருந்த கோவை மக்கள், ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகுதான் சுதந்திரம் அடைந்ததைப் போல, நிம்மதியாக மூச்சு விடுவதுடன் எவ்வித அச்சமும் இன்றி சுற்றி வருகிறார்கள். அந்தளவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அராஜகம் கோவையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்து வந்திருக்கிறது. அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு கோவை மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணி மட்டுமே அதிகார திமிரைக் காட்டவில்லை, அவருடைய சகோதரர், உறவினர்கள் என பெரிய பட்டாளமே தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்ததாம். அமைச்சர், அவரது சகோதரர் மற்றும் உறவுகளை உள்ளடக்கிய கூட்டத்திற்கு அடிவருடிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவை மாவட்டத்தில் கெட்ட ஆட்டம் போட்டு வந்துள்ளனர். எஸ்.பி வேலுமணிக்கு இடது வலது கரமாக இருந்தவர்களை தன் தட்டித் தூக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் முகஸ்டாலின். ஆட்டத்தைத் தொடங்கிய கோவை மாநகராட்சி ? நடுக்கத்தில் வேலுமணி ?…
Read More