காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார் ?

பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக பல்வேறு கட்சிகளில் இருந்து விட்டு வந்த செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார் ? பாஜக பக்கம் தாவும் பெண் எம்எல்ஏ.?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு குறித்து சத்தியமூர்த்தி பவனில் 2 முறை கூட்டம் நடந்தது.

அந்த கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 13 பேர் புதிய முகங்களாக இருந்ததால், `மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ ஆக தேர்வான சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்ற குரல்கள் எழுந்தது. இதற்கிடையே, கட்சியின் மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்களான பிரின்ஸ், விஜயதரணி, முனிரத்தினம் ஆகியோர் இடையே தலைவர் பதவிக்கு போட்டி நிலவியது.

அதேநேரம், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சித்து வந்தனர். இந்த விவகாரத்தில் குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் மற்றும் விளவங்கோடு விஜயதரணி இடையே நேரடியாக மோதல் வெடித்தது.

கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவுவை வாழ்த்திப் பேசுவது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது.

`சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியை கேட்டு வருகிறேன். சீனியர் உறுப்பினர் என்பதால் கட்சி பரிசீலிக்கும் என நினைக்கிறேன். தேர்தலில் போட்டியிட கட்சி சார்பாக பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. எனவே, ஒரு பெண் என்ற அடிப்படையில் தலைமை எனது பெயரை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என விஜயதரணி, கூறியிருந்தார்.

தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவவை காங்கிரஸ் கட்சிக்குப் பலம் சேர்க்கும் வகையில் உள்ளன. கன்னியாகுமரியில் உள்ள கிள்ளியூர் தொகுதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி பெற்றார். மேற்கண்ட 3 மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு 6 எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளனர். இதைத் தவிர்த்து மற்ற தொகுதிகளில் தி.மு.கவின் கூட்டணி பலத்தில்தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்” என்கிறார்கள் கதர்ச்சட்டைக்காரர்கள்.

இவர்களில் ராஜேஷ்குமார், பாரம்பரியமாகவே காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரைத் தலைவராக்க வேண்டும் என்று எம்.பி.க்களாக இருக்கின்ற மாணிக்கம் தாகூர், டாக்டர் ஜெயக்குமார், விஜய் வசந்த் ஆகியோர் முயன்றனர். பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் ஆதரவும் ராஜேஷ் பக்கம் இருந்தது. இந்த நிலையில், சோனியா காந்தியிடம் பேசிய ப.சிதம்பரம், ` தலித் வாக்கு வங்கியை நம் பக்கம் திருப்ப வேண்டும் என்றால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை தலைவராக்க வேண்டும்’ எனக் கூறி செல்வப்பெருந்தகையின் பெயரை முன்மொழிந்தார். ஆனால், அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு தலித் வாக்கு வங்கி என்ற ஒன்றெல்லாம் கிடையாது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ` அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக கு.செல்வபெருந்தகையும் துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என கூறப்பட்டிருந்தது.

“இந்த அறிவிப்பின் மூலம் மோதல்கள் ஏற்படவே வாய்ப்பு அதிகம்” என்கின்றனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக செல்வப்பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அக்கட்சியில் புதிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை குழு தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள விஜயதாரணி பாஜக ஆதரவு நிலையை எடுக்கக் கூடுமோ என்கிற பரபரப்பும் நிலவுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மொத்தமாக அறிவிக்கப்பட்ட போதும் கடைசி நிமிடம் வரை 3 தொகுதிகளுக்கு மட்டும் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்காமல் வைத்திருந்தனர். அதேபோல் பாஜகவும் விளவங்கோடு தொகுதியின் வேட்பாளரை கடைசி வரை அறிவிக்காமலேயே இருந்தது.

காங்கிரஸ் மேலிடத்தைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்னரே அந்த குறிபிட்ட தொகுதிக்கான வேட்பாளர் பாஜகவுக்கு போய்விடுவாரோ என்னவோ? என அவருக்கு சீட் கொடுக்கவும் தயங்கியது. அதேநேரத்தில் காங்கிரஸில் சீட் கிடைக்காமல் போனால் நிச்சயம் பாஜகவுக்கு அந்த பிரமுகர் வருவார் என்று இலவு காத்தது பாஜக. இது தமிழக அரசியல் களம் அறிந்த கதைதான்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு விஜயதாரணி அமோக வெற்றியும் பெற்றார். இதன்பின்னர் சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் பதவிக்கான போட்டி ஏற்பட்டது. இது தொடர்பாக 2 முறை சத்தியமூர்த்தி பவனில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியில் சீனியர் என்ற அடிப்படையில் தமக்கே எம்.எல்.ஏக்கள் குழு தலைவர் பதவி என்பதில் விஜயதாரணி பிடிவாதமாக இருந்தார். அதற்கான லாபிகளையும் முயற்சித்துப் பார்த்தார்.

ஆனால் அந்த பிரமுகர் மீது கட்சித் தலைவர்கள் யாருக்குமே நம்பகத்தன்மை இல்லை. அதனால் அவரை எப்படியாவது ஓரம்கட்டி உட்கார வைத்துவிடவேண்டும் என்கிற லாபியும் படுதீவிரமாக வேலை செய்தது. இதனால் 18 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் பதவிக்காக வாக்கெடுப்பு எல்லாம் நடந்தது எனவும் செய்திகள் வெளியாகின.

இருந்தபோதும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் முடிவை டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்த கையோடு தமிழக காங்கிரஸ் மவுனம் காத்தது. இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு வந்த செல்வபெருந்தகை, சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான உடனே, ஆக ஒரு விக்கெட் பாஜகவுக்கு போகப் போகிறது என சர்ச்சைக்குரிய அந்த பிரமுகர் பெயர் குறிப்பிடாமலேயே சமூக வலைதளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இத்தனை போராடியும் தமக்கு சட்டசபை தலைவர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் இருக்கிறாராம் விஜயதாரணி. அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பதை பதைபதைப்புடன் பார்த்து கொண்டிருக்கின்றார்கள் காங். தலைவர்கள். ஏனெனில் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவு காங். எம்.எல்.ஏ.வாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர் விஜயதாரணி.. இந்த முறை பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.வாக அவர் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.2016 சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு 68,789 வாக்குகள் பெற்றார்.தனித்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தர்மராஜ் 35,646 வாக்குகளும் சிபிஎம் வேட்பாளர் 25,821 வாக்குகளும் பெற்றார்கள்.ஆனால் அதிமுக வேட்பாளர் நாஞ்சில் டொமினிக் சேவியோ ஜார்ஜ் 24,801 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டைப் பறி கொடுத்தார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விளவங்கோடு விஜயதாரணி.
அவருக்கு வாய்ப்பு வழங்காமல் ப.சிதம்பரம் விசுவாசியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து காங்கிரஸுக்கு வந்த செல்வப் பெருந்தகைக்கு சட்டமன்ற தலைவராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி வளராததுக்கு காரணமே மக்கள் செல்வாக்கு இல்லாத மக்களோடு நெருங்கிப் பழகாத, மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்து மக்களுக்காகப் போராடாத ஒருவரை தலைவராக்குவதால் தான் காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா ஆகிப்போச்சு. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அந்த அம்மணி மீளவேயில்லை ? இந்த நேரத்தில் பாஜக அவரைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளும் என்கிறார்கள் விவரமறிந்த சங்கிகள்.இதே நிலமை நீடித்தால் காங்கிரஸ் கட்சியை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்!