“அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் !

கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் முதல்வர் முக ஸ்டாலின்.. சைலண்ட்டாக சில அதிரடி வேலைகளை தொடங்கி வைத்திருக்கிறார். 
அதன்படி,  அறநிலைய துறைக்கு ஒரு புது உத்தரவு பறந்துள்ளதாம்.. இதற்காகவே அந்த “ஸ்டிரிக்ட்” அதிகாரியிடம் அசைன்மென்ட்டும் தரப்பட்டுள்ளதாம்.. இதையடுத்து அதிமுக, பாஜக மட்டுமல்ல திமுக தரப்பும் கலங்கி போயுள்ளதாக செய்திகள் வருது .சமீப காலமா “இந்துக் கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், இது தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள, அதற்கு சேகர்பாபுதான் சரியான நபர் என்ற எண்ணத்திலேயே இந்த பொறுப்பு அவருக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி விட்டு கட்சி தாவி வந்தால், அவர்களுக்கு உடனே பெரிய அளவிலான பதவிகளை தருவது எம்எல்ஏ சீட் தருவது சமீப காலமாக நடந்து வருகிறது.. இப்படி ஒரு பழக்கத்தை துவக்கி வைத்ததே தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும்தான்.. இந்த பழக்கம் திமுக மட்டுமல்ல அதிமுகவிலும் ஒட்டிக் கொண்டது..!

அந்த வகையில் யார் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு, எம்எல்ஏ சீட், போன்ற பதவிகளை தந்து வருகிறது திமுக தலைமையும்.. அதில் ஒருவர்தான் சேகர்பாபு..! சேகர்பாபு சீனியர்.. அரசியல்வாதி தான்.அதிமுகவில் இருந்தபோதும் சரி, திமுகவிற்கு வந்த போதும் சரி, எந்த கட்சியில் இருந்தாலும், தொகுதியில் இவருக்கென்று தனி விசுவாசிகள் உண்டு… அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பி.கே.சேகர் பாபு. அதிமுக-வின் அவைத் தலைவரான மதுசூதனனின் உறவினர் என்பதிலிருந்தே சேகர்பாபுவின் அதிரடி அரசியல் எப்படியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒருகாலத்தில் அதிமுகவின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர்… பொது இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவரை பெயர் சொல்லியே கூப்பிடுவார்.. அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். அதனால்தான், திமுகவில் இவர் இணைந்தபிறகும், களப்பணி, கட்சி பணி என ஒன்றையும் விடாமல் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்.. ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், டக்கென ஸ்டாலினுக்கே போனை போட்டு பேசுவார்.. தொகுதிப் பிரச்னைகளை அசால்ட்டாக தீர்த்து வைப்பார்.. அதிகாரிகளை நாசூக்காக வேலை வாங்கும் திறமைசாலி.. இப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பை ஸ்டாலின் தந்துள்ளார். “

இந்த பொறுப்பை ஏற்றதில் இருந்தே அதிரடியை கையில் எடுத்துள்ளர் சேகர்பாபு.. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் சுற்றி வந்தாலும். இன்னொரு பக்கம், அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட வேலைகளிலும் இறங்கி உள்ளார்.. “அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று சேகர்பாபு முதல் உத்தரவை போட்டதுமே கோவை “ஆன்மீக பகுதி”யில் ஒரு நடுக்கம் வந்தது.. அடுத்த செகண்டே, ஈஷா அமைப்பின் ஜக்கி வாசுதேவ் “அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் – சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது” என்று ட்வீட் போட்டிருந்தார்.. மற்றவர்கள் எல்லாம் சும்மா இருக்கும்போது, இவர் மட்டும் ஏன் வாண்ட்டடா வந்து ட்விட் போடுகிறார் என்ற சந்தேகமும் எழுந்தது. அந்த வகையில் இன்னொரு அதிரடியையும் இப்போது அறநிலையத்துறை கையில் எடுத்துள்ளது. அறநிலையத்துறையின் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் குமரகுருபரன் ஐஏஎஸ்ஸிடம், கோயில் சொத்துகளை மீட்டு வருவாயை உயர்த்த வேண்டும் என்கிற பொறுப்பை திமுக தலைமை ஒப்படைத்திருக்கிறதாம்இந்து அறநிலையத்துறையில் நிதி ஆதாரத்தை அதிகரிக்கவே இப்படி திட்டம் என்று சொல்லப்படுகிறது..

இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக குமரகுருபரன்  பொறுப்பேற்ற உடனேயே , அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 அம்ச செயல் திட்டம் ஒன்று கொண்டுவரப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் ஆன்லைன் மூலம் நிர்வாகம் மற்றும் சட்டப்பூர்வமான ஆவணங்களை மின்னணுவில் மாற்றம், கோயில் சொத்துக்களில் வருமானங்களை அதிகரித்தல் உள்ளிட்ட 5 அம்ச செயல் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை. விரைவில் இத்துறையின் ஆன்லைன் மென்பொருள் அமல்படுத்தப்படும் எனவே, அனைத்து அதிகாரிகளும் தங்களது அலுவலகங்களில் தொழில்நுட்ப வசதிகளில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டும். அப்போது தான் இமாலய சாதனைகளை பெற முடியும். கள ஆய்வு செய்யும் அதிகாரிகள் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்தல் வேண்டும். மேலும், அனைத்து அதிகாரிகளுக்கும் தேசிய தகவல் மையம் மூலம் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குமரகுருபரன் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

இந்து கோயில்களிலிருந்து திரட்டப்படும் நிதியைக் கொண்டு, தமிழகத்தின் 4 முக்கிய ஆன்மிகத் தலங்களில் இந்து அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளும், பெரிய கோயில்களில் திருமண மண்டபங்களும் கட்டும் திட்டங்களும் இருக்கிறதாம்.. இந்த பணியில்தான் சேகர்பாபு & கோ களமிறங்கி உள்ளது.. இப்ப சென்னையில் கபாலீஸ்வரருக்கு சொந்தமான நிலங்களை யாரெல்லாம் ஆட்டையப் போட்டிருக்கன்னு பாக்கலாம் !

சென்னை மைலாப்பூரில் உள்ள மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார்.மொத்தம் உள்ள 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். மீதி 471 பேர் ஹிந்துக்கள் என்பது வேதனையான விஷயம்.

கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களைக் கொள்ளையிடும் இந்துவிரோதிகளின் பட்டியல் மிகவும் நீளமானது…

வாடகை கொடுக்காத பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன்-காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் பாரதிய வித்யா பவன். கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32,லட்ச ரூபாய்.

அடுத்தது,
மயிலாப்பூர் கிளப்.
1903 ம் ஆண்டு ஜனவரி,1, ந்தேதியன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது, கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்திய, தென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், என பல கிரவுண்டு கோயில் நிலத்தை குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலீஸ்வரருக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3 கோடியே 57 லட்ச ரூபாய்.

‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன் நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6,கோடியே 45 லட்சம்.

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்கிற பி.எஸ். ஹைஸ்கூல், கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.10 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்தவர்கள் இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இப்படியே போகிறது பட்டியல். இதெல்லாம் ஒரு சாம்பிள் தான்.தமிழ்நாடு முழுவதும் கோயில் நிறுவனங்களை ஆட்டயப் போட்டவர்களோட பட்டியல் ரொம்பப் பெரிசு.

முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் மயிலை  கபாலீசுவரரும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும்.
பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை.
இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

அற்ப வாடகை,
குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதற்குத்தான்.

இப்படித் திரட்டப்படும் நிதியை கொண்டு, தமிழகத்தின் 4 முக்கிய ஆன்மிகத் தலங்களில் இந்து அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளும், பெரிய கோயில்களில் திருமண மண்டபங்களும் கட்டும் திட்டங்களும் இருக்கிறதாம்.. இந்த பணியில்தான் சேகர்பாபு & கோ களமிறங்கி உள்ளது.. இதையடுத்து, கூடிய சீக்கிரம், இந்த துறையில் நடந்த முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்.. இதனால் அதிமுக தரப்பு மட்டுமல்ல, பாஜகவுக்கு ஆதரவான சிலரும் நடுநடுங்கி போயுள்ளார்களாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், கடைகள் மற்றும் யாரெல்லாம் எவ்வளவு வாடகை பாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.கோயில் சொத்துக்களை மீட்பதோடு வாடகை பாக்கியையும் வசூலித்து திமுக திட்டமிட்டபடி இந்துக் கல்லூரிகளையும் கல்யாண மண்டபங்களையும் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் திமுக இந்து விரோத கட்சி என்கி கெட்ட பெயர் விலகுவதோடு ஒட்டு மொத்த இந்துக்களும் திமுகவுக்கு ஆதரவாக மாறுவார்கள் என்பதை உறுதியாகச் சொல்லலாம். சொல்வதைச் செய்வோம் .! செய்வதை சொல்வோம் என்கிற அரசு ..! நிச்சயம் செய்யும் என்று நம்பலாம்! செய்வீர்களா ஸ்டாலின் அவர்களே!