கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தியாளர் சந்திப்புக்கான வீடியோ தான் இது. சென்னை அமைந்தகரையில் உள்ள St. George’s பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி இவர் சொல்கிறார். இதை எந்த தொலைக்காட்சி செய்தி ஊடகமும் ஒளிபரப்பவில்லை.
இன்று PSBB பள்ளியில் நடந்ததை பற்றி விவாதிக்கும் அதே ஊடகங்கள், அன்று St. George’s பள்ளியை பற்றி விவாதிக்காதது ஏன்? PSBB பற்றி பேசும் அமைச்சர்கள் அரசியல்வாதிகள், சமூக போராளிகள் St. George பள்ளியை பற்றி பேச தயங்கியது ஏன்? இன்று வரை அந்த செய்தி ஊடகத்திலும் வரவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போ பத்மஷேசாத்ரி பள்ளின்ன உடனே எல்லாரும் ஏன் பொங்கி எழுந்து வர்றாங்க.இதே பத்மஷேசாத்ரி பள்ளியில ஏ.ஆர்.ரஹ்மான் படிச்சப்போ ஃபீஸ் கட்டாததால வெளியேற்றினது இல்லாம கோடம்பாக்கம் ரோட்டுல பிச்சை எடுங்கன்னு சொல்லி என்னைய வெளியே அனுப்பிட்டாங்கன்னு ரொம்ப வருத்தத்தோடு. பேட்டி கொடுத்திருந்தார். ஆனா அவர் ஆஸ்கார் அவார்டு வாங்குனதும் வெக்கமே இல்லாம அவர் எங்க ஸ்டூடன்னு சொன்னாங்க.
அப்பேர்ப்பட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி (PSBB) பொதுப் பள்ளியாக இருந்ததால் அதற்குப் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது இடம் கொடுத்துள்ளார். அப்பள்ளிக்கு அடிக்கல்லும் நாட்டியுள்ளார்.பத்ம சேஷாத்ரி குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக அறக்கட்டளையைக் கைப்பற்றி பள்ளியை அபகரித்துக் கொண்டது. இதுகுறித்து அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கு.
இந்தப் பொதுப் பள்ளியைச் சட்டத்திற்குப் புறம்பாக தனிச் சொத்தாக மாற்றியுள்ளது குறித்து தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்பள்ளியின் நிர்வாகத்தினர் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்ம சேஷாத்ரி பள்ளியைக் கைப்பற்றி மீண்டும் பொதுப் பள்ளியாக ஆக்க வேண்டும்னு இப்ப கண்டனக் குரல்கள் வர ஆரம்பிச்சிடுச்சு.
இந்த சூழ்நிலையில பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி கொதித்திருந்த நிலையில் , அதே கொதிப்பு நான் உள்ளிட்ட 16 பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த போது ஏன் வரலன்னு சின்மயி கேள்வி எழுப்பியிருக்காங்க. சென்னை பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலன் மீது மாணவி ஒருவர் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றில் பாலியல் புகார் கூறியிருந்தார் ஆன்லைன் வகுப்பிற்கு ராஜகோபாலன் வெறும் துண்டை மட்டுமே கட்டிக் கொண்டு வருவதாகவும் , லேட் நைட்டில் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்புவதாகவும் சினிமாவிற்கு கூப்பிடுவதாகவும் ஸ்க்ரீன் ஷாட்டுகளோடு கூறிய புகாரை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தார் . தற்போது பிரதான ஊடகங்களில் இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் பிரச்சனையை அறிமுகம் செய்து வைத்தவர் சின்மயி தான்.
இந்த விவகாரம் குறித்து சின்மயி ட்விட்டரில் பதிவிட்ட பிறகு தான் மேலும் பல பிஎஸ்பிபி பள்ளி மாணவிகள் அங்கு ராஜகோபாலன் மட்டும் அல்லாமல் வேறு பல ஆசிரியர்களால் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை பட்டியலிட்டனர். தொடர்ந்து திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியும் , இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறியிருந்தார் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு முறையான விசாரணை தேவை என்றும் கனிமொழி கூறியிருந்தார்.
மேலும் மாணவிகளின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத பத்மஷேசாத்ரி பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையிடப்படும் என்றும் கனிமொழி கூறியிருந்தார் . இதனை அடுத்து தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சியும் இதே பாணியில் ட்வீட் செய்திருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு படி மேலே போய் அறிக்கை வெளியிட்டார் .தற்போது ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சின்மயி வேறு ஒரு ட்வீட் செய்திருந்தார் கனிமொழி பத்மஷேசாத்ரி பள்ளி தொடர்பாக பதிவிட்டிருந்த ட்வீட்டை டேக் செய்த சின்மயி , உண்மையிலேயே நீங்கள் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார் . இதே போல நான் உள்ளிட்ட 16 பெண்கள் வைரமுத்து மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாகவும் தேவையான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கனிமொழியை சின்மயி கேட்டுக் கொண்டிருக்கிறார் இந்த விவகாரத்தில் ராதாரவி தலையிட்டு தன்னை எந்த பணியும் செய்யவிடாமல் தடுக்கும் நிலையிலும் உண்மை அப்படியே தான் இருக்கிறது என்றும் சின்மயி கூறியுள்ளார்.
பத்மஷேசாத்ரி பள்ளி விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ள உங்களுக்கு என்னுடைய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்கிற ரீதியிலும் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் . சின்மயி கூறுவது சரி தான் பாலியல் புகார் என்று வந்துவிட்டால் பத்மஷேசாத்ரி பள்ளி மாணவர்கள் மீது காட்டும் அக்கறையை வைரமுத்துவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் மீதும் காட்டுவது தான் நியாயம் ! கனிமொழி மேடம் கருத்து சொல்வாரா ?
கடைசியாக கெடச்ச தகவல் என்னன்னா ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் வழக்கில் சென்னை தனியார் பள்ளிக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.கே.நகர் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க அசோக்நகர் மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
PSBB பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரளிக்க முன்வர வேண்டும்; விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என காவல்துறை உத்தரவாதம் கொடுத்திருக்காங்க ! மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையரை 9444772222-ல் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்ணு சொல்லியிருக்காங்க.
இது மேலிடத்து சமாச்சாரம்ங்கிறதுனால விசாரணை நேர்மையான முறையில நடக்குமா ? இல்ல வழக்கம்போல ஊத்தி மூடிருவாங்களா ? எல்லாம் பெரிய எடத்து சமாச்சாரம் !
