சினிமா

‘வாட்ஸ் ஆப்’ தகவல் உலகம் முழுவதும் கடும் கட்டுப்பாடு !

‘வாட்ஸ் ஆப்’ தகவல் உலகம் முழுவதும் கடும் கட்டுப்பாடு !

வாட்ஸ் ஆப்' மூலம், ஒரே நேரத்தில், ஐந்து பேருக்கு மட்டுமே, தகவல்களை பகிரலாம் என்ற கட்டுப்பாட்டை, உலகம் முழுவதும், அந்த நிறுவனம் அமல்படுத்தி உள்ளது. 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் மூலம் பரவும் வதந்திகளால், அசம்பாவிதங்கள் நடப்பதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்தாண்டு ஜூலையில், 'வாட்ஸ் ஆப்' மூலம், ஒரு சமயத்தில், ஐந்து பேருக்கு மேல், தகவல், படங்கள், வீடியோக்களை பகிர முடியாது என்ற கட்டுப்பாடு, இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை, உலகம் முழுவதும் அமல்படுத்த, 'வாட்ஸ் ஆப்' முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, 'வாட்ஸ் ஆப்' நிறுவன இணைய தளத்தில் கூறியுள்ளதாவது: 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பப்படும் தகவல்களை, ஒரு சமயத்தில், ஐந்தாக குறைக்க, கடந்தாண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக, பயனாளர்களின் கருத்துகள், ஆறு மாதங்களாக கேட்டு பெறப்பட்டன. இந்த கட்டுப்பாட்டால் பகிரப்படும் தகவல்கள் கணிசமாக குறைந்துள்ளதாக, பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை ! சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் !!

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை ! சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் !!

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை, இனி நாம் சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்ஸ்அப் செயலியில் மெசேஞ் அனுப்ப டைப் செய்வோம் அல்லது வாய்ஸ் மெசேஞ் அனுப்புவது வழக்கம். வாய்ஸ் மெசேஞ்களை அனுப்பத் தனியாக ‘மைக்’ போன்றதொரு ஐகான் இருக்கும். அதைத் தான் நாம் பயன்படுத்தி வந்தோம். தற்போது வாட்ஸ்அப்-ல் வந்துள்ள புதிய அப்டேட் மூலம் டைப் செயயப்படும் மெசேஞ்களையும் நாம் வாயால் சொன்னால் போதும், வாட்ஸ்அப்-ன் புதிய மற்றொரு ‘மைக்’ ஐகான் நமக்காக அந்த மெசேஞ்சை டைப் செய்துவிடும். இப்புதிய மைக் ஐகான் தான் சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது. கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் சிரி போலவே தான் இந்த வாட்ஸ்அப் புதிய மைக் செயல்படும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு மீடியம்களிலும் இப்புதிய அப்டேட் உள்ளது. நாம் chat செய்யவேண்டிய பக்கத்தில்…
Read More
ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால்  ஏடிஎம் கார்டை பிளாக் செய்தாலும், பணத்தை எளிதாக எடுக்கலாம்.!

ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் ஏடிஎம் கார்டை பிளாக் செய்தாலும், பணத்தை எளிதாக எடுக்கலாம்.!

கூகுள் பே, பேடிஎம், போன் பே மற்றும் அரசு, தனியார் வங்கிகளின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துபவர்களின் ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் உடனடியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்தாலும், பணத்தை எளிதாக எடுக்கலாம். இது போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் ஸ்மார்ட்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்குச் சென்று வங்கிக் கணக்கை உடனடியாக முடக்குமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். வங்கி கணக்கை முடக்காவிட்டால் ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிலிருந்து உங்களுக்கே தெரியாமல் பணத்தை திருடுப் போக வாய்ப்புகள் உள்ளது. அலட்சியம் காட்டும் வங்கி அதிகாரிகள் மீது புகார் அளித்தால் உடனடியாக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் கூறுகின்றனர். இன்றைய கால சூழ்நிலையில் சாப்பிடுவது, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்வது, வீட்டிலிருந்தபடியே ரீசார்ஜ் செய்வது, வழி தெரியாவிட்டால் ஸ்மார்ட்போன் மேப் மூலம் வழிகளைத் தேடுவது என அனைத்தும் ஸ்மார்ட்போன்களிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் பண…
Read More
ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தகவல் எடுப்போம் – ஆய்வில் வெளியான பகீர் தகவல்

ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தகவல் எடுப்போம் – ஆய்வில் வெளியான பகீர் தகவல்

ஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விவரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர், பயன்படுத்தாதோர் மற்றும் தளத்தில் இருந்து லாக்-அவுட் செய்தோரின் தகவல்களை ஃபேஸ்புக் டிராக் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.ஆப் டெவலப்பர்கள் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மேம்பாட்டு முகமை (ஃபேஸ்புக் எஸ்.டி.கே.-Facebook Software Development Kit-SDK) எனும் மென்பொருள் மூலம் பயனர் விவரங்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மென்பொருள் மூலம் டெவலப்பர்கள் குறிப்பிட்ட இயங்குதளத்திற்கு ஏற்ப புதிய செயலிகளை உருவாக்க முடியும்.இந்த ஆய்வுக்கென ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 34 செயலிகளை எடுத்துக்கொண்டனர். ஒவ்வொன்றும் 10 முதல் அதிகபட்சம் 50 கோடி பேர் டவுன்லோடு செய்த செயலிகள். இவற்றில் மொழி கற்றுக் கொள்ளும் செயலி, பயணம், உணவகம் மற்றும் பல்வேறு இதர பலன்களை வழங்கும் செயலிகளை தேர்வு செய்தனர். பின் இந்த செயலிகள் ஃபேஸ்புக் எஸ்.டி.கே. மூலம்…
Read More
வாட்ஸ்அப் என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா..!

வாட்ஸ்அப் என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா..!

ஜேன் கௌம் என்றவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் ஆரம்ப கால கட்டத்தில் அவருடைய செயலிக்கு மூன்று விதிகளை வகுத்து வைத்து இருந்தார்.* அந்த செயலி விளம்பரங்களை எடுத்துக்கொள்ளாது. அனைவருக்கு ஒரு சிறந்த செயலியாகவும், அனைத்திலும் அனுபவமாக இருக்க வேண்டும். அந்த செயலியானது மிகவும் பாதுகாப்பாகவும், வாடிக்கையாளர்களின் தனி சுதந்திரத்தை மதிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதுவே இவரை தாரக மந்திரமாகும். செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப்பில் வேறெந்த குறுக்கீடுகளும், எந்தகாலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் இவரும், இவரின் நண்பர்களுக்கும் இருவரும் உறுதியாக இருந்தார்கள்.தங்களின் அனுபவங்களை கொண்டு கடந்த 2009ஆம் ஆண்டு ஜேன் கௌம் மற்றும் பிரையன் ஆக்டன் இருவரும் இணைந்து முதலில் ஒரு சாதாரணi குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டனர். அதன் பயனாக கிடைத்தது தான் தற்போது நாம் பயன்படுத்தும் "வாட்ஸ்அப்". தான் புதியதாக உருவாக்க இருக்கும் செயலுக்கு "வாட்ஸ்அப்" என்று ஜேன் கௌம் தான் பெயரிட்டார். ஒவ்வொருவரும் கண்டிப்பாக தங்களது பேச்சை நீட்டிக்க குறுஞ்செய்தி…
Read More
கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ள இடர்களை தவிர்ப்பதற்கான வழிகள் !

கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ள இடர்களை தவிர்ப்பதற்கான வழிகள் !

இந்தியர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள டிரான்ஸ் யூனியன் சிபில் அறிக்கை, இந்தியர்கள், 3.69 கோடி கிரெடிட் கார்டு கணக்கு பெற்றிருப்பதாக தெரிவிக்கிறது. அதே போல, கிரெடிட் கார்டு பாக்கித்தொகையை செலுத்தாமல் நிலுவையில் கொண்டு செல்வதும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையை தவிர்ப்பதற்கான வழிகள்:கிரெடிட் கார்டு பயன்பாடு வசதியானது, பல அனுகூலங்கள் கொண்டது என்றாலும், அதில் இடர்களும் அதிகம். கிரெடிட் கார்டை சரியாக நிர்வகிக்காமல், இஷ்டம் போல பயன்படுத்தினால், அளவுக்கு அதிகமாக செலவு செய்ய நேரலாம். எனவே, மாத அடிப்படையில் திருப்பி செலுத்தக்கூடிய தொகைக்கு மட்டும் கார்டை பயன்படுத்துவது நல்லது. பொதுவாக கிரெடிட் கார்டு பயனாளிகளால் கார்டு பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இது மாதாந்திர பில்லில் வெளிப்படலாம். இதனால், பகுதி அளவு தொகையை செலுத்தி, சுழலும் கடன் முறைக்கு நிர்ப்பந்திக்கலாம். இதனால் கடன் சுமை அதிகமாகும். சுழலும் கடனை தவிர்க்கும் உறுதி வேண்டும்.கிரெடிட் கார்டு தொகையை…
Read More
கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (update) வேண்டும் 2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் >https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR code) காண்பிக்கப்படும். 3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும். 4. மெனுவில்…
Read More
இணையதள மோசடிகள் !

இணையதள மோசடிகள் !

மூடநம்பிக்கைகளுக்கும், மோசடிகளுக்கும் அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்துவது முன்னெப்போதும்விட மிக பிரம்மாண்டமாக விரிவடைந்தே வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் அண்மைக்காலமாக வெளிநாட்டுப் பெண்களின் பெயரில் முகநூல் வழியாக நட்பினை உருவாக்கி பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முகநூலில் அதிக நேரம் செலவிடுவோர் இதில் சிக்கிக் கொள்கிறார்கள்.முன்பெல்லாம் ஆபாசமான படங்களும், உரையாடல்களும்தான் நம்மை மோசடிக்குள் சிக்க வைக்கும். இப்போதெல்லாம் அப்படியல்ல. நாகரிகமான பொருளாதார மோசடிகள் பெருகிவிட்டன. நடுத்தர வர்க்கத்தினரும் இதில் பரிதாபமாக வீழ்ந்துள்ளனர்.தொடக்கத்தில் முகநூலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் நட்பு அழைப்பினை அனுப்புவார். வழக்கமாக நட்பு அழைப்பினை ஏற்கும்போது அவரது நட்பு பட்டியலில் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா எனப் பார்ப்போம். அவ்வாறாக ஓரிருவர் இருப்பர். உடனே அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால் மிகச் சில நிமிடங்களில் மெசஞ்சரில் வருவார்கள். "தங்களது புரோபைல் பார்த்தேன், மிகவும் நம்பிக்கையானவராகத் தெரிகிறீர்கள், தங்களிடம் பேச வேண்டும், வாட்ஸ்ஆப் எண் இருக்கிறதா?' என்பார். வாட்ஸ்ஆப் எண் கொடுத்துவிட்டால்…
Read More
பாத்ரூமிற்குள் செல்போன் எடுத்துச்செல்வதால் ஏற்படும் விளைவுகள் !

பாத்ரூமிற்குள் செல்போன் எடுத்துச்செல்வதால் ஏற்படும் விளைவுகள் !

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் தீய பழக்கங்களில் முக்கியமான ஒன்று கழிவறையில் செல்போன் உபயோகிப்பது. பெரும்பாலும் இளைஞர்கள் அனைவருமே இதனை செய்கிறார்கள் என்று கூறலாம். இந்நிலையில் சமீபத்திய ஆய்வு முடிவின்படி பாத்ரூமிற்கு செல்போனை எடுத்துச்செல்வது உங்கள் நேரத்தை வீணாக்குவது மட்டுமின்றி பல ஆரோக்கிய கேடுகளையும் ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இளைஞர்கள் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போல செல்போன்களுக்கும் அடிமையாக மாறிக்கொண்டிருக்கின்றனர். எங்கு சென்றாலும், எந்த வேலை என்றாலும் அவர்களால் செல்போன் இன்றி இருக்கமுடிவதில்லை. இந்த சூழ்நிலையில் கழிவறைக்கு செல்போன் எடுத்துச்செல்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இங்கு பார்க்கலாம். கழிவறை என்பது அதிக பாக்டீரியாக்களும், கிருமிகளும் இருக்கும் இடம் என நாம் நன்கு அறிவோம். அப்படி இருக்கும்போது அங்கே செல்போனை எடுத்துச்செல்வது உங்களை கிருமிகள் தாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். புத்தகமோ, செல்போனோ எதுவாக இருப்பினும் வலது கையால் உபயோகப்படுத்திவிட்டு ஃபிளஸ் செய்யும்போது இடதுகைக்கு மாற்றிவிட்டு பின்னர் கையை சோப்பு போட்டு கழுவவேண்டும். எங்காவது போனை…
Read More
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு ?

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு ?

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு. சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக்களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம். பலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும்,…
Read More