நீரிழிவு நோயாளிகள் மத்தியில் உறுப்பு நீக்கம் ? எம்வி மருத்துவமனை கணக்கெடுப்பு !

ராயபுரத்தில் இயங்கிவரும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையம் மற்றும் நீரிழிவிற்கான எம்வி மருத்துவமனை, கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்காக நீரிழிவு நிலையில் சிறுநீரகம் மற்றும் பாதங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மீது இந்தியாவின் முதல் ஆவணத்தை இன்று வெளியிட்டது. தமிழ்நாடு, நீரிழிவுசார் உடலுறுப்பு நீக்க கணக்கெடுப்பு ஆய்வு (TAS), என்ற திட்டம் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்போடு, நீரிழிவின் காரணமாக உடல்உறுப்பு நீக்க விகிதாச்சாரம் மீதான ஒரு ஆய்வாகும். சர்வதேச நீரிழிவு நிலை கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புரொஃபசர் ஆண்ட்ரூ போல்ட்டன், ராயபுரத்திலுள்ள நீரிழிவுக்கான எம்.வி. மருத்துவமனை மற்றும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் தலைமை நீரிழிவு சிகிச்சை நிபுணர், டாக்டர். விஜய் விஸ்வநாதன் ஆகியோரால் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இந்த கணக்கெடுப்பு ஆய்வு செயல்பாடு தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை, ராயபுரத்தில் அமைந்துள்ள புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையம் மற்றும் நீரிழிவிற்கான எம்.வி. மருத்துவமனையில் அமைந்துள்ள நீரிழிவு சார்ந்த பாத கிளினிக் மற்றும் நீரிழிவு சார்ந்த சிறுநீரக கிளினிக் ஆகியவை தங்களது 30 ஆண்டுகால பணி மற்றும் ஆய்வு அனுபவத்தின் வழியாக, இந்திய மக்களில் நீரிழிவின் காரணமாக ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் உடலுப்பு நீக்கத்திற்கான இடர் காரணிகளை முன்னிலைப்படுத்தி பல்வேறு ஆராய்ச்சி ஆய்வு கட்டுரைகளை பிரசுரித்திருக்கின்றன. இம்மருத்துவமனையில் அமைந்துள்ள இந்த இரு துறைகளும் கடந்த 30 ஆண்டுகளாக நீரிழிவின் காரணமாக, சிறுநீரக செயலிழப்பு மற்றும் உடல் உறுப்புகள் அகற்றப்படுவதை தடுப்பது குறித்து நீரிழிவு நோயாளிகளுக்கு உரிய ஆலோசனையை வழங்கி வந்திருக்கின்றன. இது குறித்த ஆராய்ச்சி ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டு, அவைகளை முன்னிலைப்படுத்தும் பணியை இத்துறைகள் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாடு நீரிழிவுசார் உடலுறுப்பு நீக்க கணக்கெடுப்பு ஆய்வு திட்டத்தை (TAS) தொடங்கிவைத்து பேசிய ராயபுரத்திலுள்ள நீரிழிவுக்கான எம்.வி. மருத்துவமனை மற்றும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் தலைமை நீரிழிவு சிகிச்சை நிபுணர், டாக்டர். விஜய் விஸ்வநாதன், 'உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு ஒத்துழைப்பு மையமாக இந்த கணக்கெடுப்பு ஆய்வானது இம்மருத்துவமனையால் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நீரிழிவு நிலையின் காரணமாக, உடலுறுப்பு நீக்கத்தின் விகிதாச்சாரம் மீதான ஆய்வாக இது இருக்கும். பல்வேறு நோய் நிலைகளுக்காக அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த கணக்கெடுப்பு ஆய்வு நடத்தப்படும். தமிழ்நாட்டில், நீரிழிவு பாதிப்பின் காரணமாக உடலுறுப்பு நீக்கம் செய்யப்படுகின்ற பிரச்சனையின் அளவையும், வீச்செல்லையையும் புரிந்துகொள்வதற்கு இந்த நோயியல் சார்ந்த கணக்கெடுப்பு உதவும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு கொள்கை வகுப்பாளர்கள் முறையான முன்னுரிமையை வழங்கமுடியும்,' என்று கூறினார். சர்வதேச நீரிழிவு நிலை கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புரொஃபசர் ஆண்ட்ரூ போல்ட்டன், நீரிழிவு நிலையில் சிறுநீரகம் மற்றும் பாதத்தில் ஏற்படும் சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மீது கிராமப்புறத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் தகவல் ஆவணத்தை வெளியிட்டார். வளர்ந்து வரும் நாடுகளில் நீரிழிவினால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் உடலுறுப்பு அகற்றல் நிகழாமல் தடுப்பதற்கான அவசியம் குறித்து தனது உரையில் அவர் வலியுறுத்தினார். டாக்டர். விஜய் விஸ்வநாதன் பேசுகையில், நீரிழிவு நிலையில் சிறுநீரகம் மற்றும் பாதத்தில் ஏற்படும் சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மீது இந்தியாவில் கிராமப்புறங்களில்; பணியாற்றும் மருத்துவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு தனிப்பட்ட ஆவணம் பிரத்யேகமாக வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும். ராயபுரத்தில் அமைந்துள்ள நீரிழிவிற்கான எம்.வி. மருத்துவமனையானது, சர்வதேச நிபுணர்களின் பங்களிப்போடு இந்த ஆய்வு ஆவணத்தை உருவாக்கியிருக்கிறது. கிராமப்புறங்களில் நீரிழிவு நோயாளிகள் மத்தியில், நீரிழிவின் காரணமாக சிறுநீரக செயலிழப்பும், உடலுறுப்பு நீக்கமும் நிகழாமல் தடுப்பதற்கு ஆரம்பநிலை சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்களுக்கு இந்த ஆவணம் பெரிதும் உதவும்,' என்று கூறினார்.

Related posts:

கார்ப்பரேட்டுகளின் கூடாரமாகும் அரசியல் கட்சிகள் !

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா!

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் "படையாண்ட மாவீரா"விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து!

’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது, ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர் !!!

லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக். !

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' பத்திரிகையாளர் சந்திப்பு. !

ரெலிகேர் வழங்கும் புதிய காப்பீடு திட்டம் ‘சூப்பர் மெடிகிளைம்’ !