17
Oct
போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை எதிர்பாராத வகையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் விற்பனையில் அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம். ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் ட்யூக் மற்றும் ஆர்சி என்ற இரண்டு வகை பாடி ஸ்டைலில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதில், ட்யூக் என்ற திறந்தமேனி வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிட்டன. இதனால், ட்யூக் வரிசையில் 125, 200, 250, 390 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வந்தது. இவை அனைத்துமே சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள். இந்த நிலையில், அண்மையில் ட்யூக் வரிசையில் மிக சக்திவாய்ந்த இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக 790 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 23ந் தேதி இந்த புதிய ட்யூக் பைக்கை…
