கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த ‘ஹெலியா’ என்ற மின்சார கார்!

இனி மின் வாகனங்களுக்கே எதிர்காலம் என்பதால், பல புதுமைகள் தினமும் வரத்துவங்கிவிட்டன. பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள், மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தால் ஓடும் புதிய காரை வடிவமைத்துள்ளனர்.

காரின் கூரையில் சூரிய ஒளி மின் பலகைகளும், நான்கு இருக்கைகளும் கொண்ட, ‘ஹெலியா’ என்ற அந்த மின் கார், ஒரே மின்னேற்றத்தில், 900 கி.மீ., செல்லக்கூடியது. நான்கு பயணியர் இருக்கையுள்ள ஹெலியா, உபரி மின்சாரத்திற்காக, சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துகிறது.

பயணிக்கும் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக, மாணவர்கள், கணினியில் அதன் வடிவத்தை உருவாக்கி சோதித்து, இறுதியில் காற்றுத்தடை குறைவாக உள்ள வடிவத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், அதிகபட்ச வேகமாக, 80 கி.மீ., வரை காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லக் கூடியது ஹெலியா.

மின்சார வாகனங்கள் எடை அதிகமாக இருந்தால், செல்லும் துாரம் குறையும். இதற்காகவே, ஹெலியாவின் உடலை கார்பன் இழைகளால் கட்டமைத்துள்ளனர். பிரிட்டனின், ‘மிகச் செயல்திறன் கொண்ட மின்சார கார்’ என்ற பட்டம், ஹெலியாவுக்கு கிடைக்கும் என, கேம்பிரிட்ஜ் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:

இனிகா புரொடக்சன்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அனிமேஷன் திரைப்படமான 'கிகி & கொகொ'!

*நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம் 'கண்மணி அன்னதான விருந்து'!*

பரோடா வங்கியின் உழவர் திருவிழா இருவார கொண்டாட்டம் !

90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது ! பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்!!

தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை!

*"சம்பலில் இருந்து குலசேகரபட்டினம் வரை நீண்ட தூரம் பயணித்திருந்தேன்” நடிகை சீமா பிஸ்வாஸ்!*

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT - இந்தியன் 2 !

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி!