அரசியல்

கனிமொழி vs உதயநிதி ஸ்டாலின் திமுகவில் யார் நம்பர் 2 .2ம்இடத்தை கைப்பற்ற உதயநிதிக்கும் கனிமொழிக்கும் இடையே கடுமையான போட்டி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் நம்பர் 1 யார் என்ற பஞ்சாயத்து நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது. உச்ச பதவி எனக்கு தான்ங்கிற மல்லுக்கட்டு ஜெயலலிதா மறைந்ததிலிருந்தே நடைபெற்று வருது. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பனிப்போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சசிகலாவும் வெளியிலிருந்து குரல் கொடுத்துட்டு வர்றாரு. திமுகவில் இந்த பஞ்சாயத்து இல்லை என திமுககாரர்கள் காலரை தூக்கிவிட்டுக் கிட்டிருந்தாங்க.. கலைஞர் மறைவுக்குப் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மு.க.ஸ்டாலின் கட்சியையும் தற்போது ஆட்சியையும் வழிநடத்தி வர்றாரு. இதனால் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் எந்த பக்கம் போறதுங்கிற குழம்பம் இல்லாமல் கட்சிப் பணிகளை செஞ்சுக்கிட்டு வர்றாங்க. ஆனால் திமுக தற்போது அடுத்த அதிகார போட்டி ஒண்ணுக்கு தயாராகி வருதுன்னு சொல்றாங்க திமுக உடன்பிறப்புகள். அதிமுகவில் நம்பர் 1 யார் என்ற போட்டி என்றால், திமுகவில் நம்பர் 2…
Read More
பதவி விலகினார் பிடிஆர்..? புதிய ஐடி விங் செயலாளர் டிஆர் பி ராஜா ? பின்னணி என்ன..? கட்சிப் பதவியை விட்டுக்கொடுக்குறதப் பத்தி தலைமைக்கு பி.டி.ஆர் தெரிவிச்சவுடனே தலைமையும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியுது. ஆளும் தி.மு.க.விற்குள் ஏற்பட்ட உள்கட்சி பூசலால்  நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், கட்சியின் ஐடி பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிய வந்திருக்குது. “நிதித்துறை அமைச்சரின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்கிறது. கூடுதலாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் அதோட ஃபாலோ அப் விஷயங்கள் இருக்குறதுனால கடந்த வாரம், கட்சிப் பதவியை விட்டுக்கொடுக்கிறதப்பத்தி தலைமைக்கு பி.டி.ஆர் தெரிவிச்சவுடனே , தலைமையும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியுது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக 2017-ம் ஆண்டு முதல் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வந்தார். பணிச்சுமையை காரணம் காட்டினாலும் உட்கட்சி பூசலே அவர் பதவியை ராஜினாம…
Read More
மிரட்டப்படுகிறாரா தளபதி விஜய்? ‘உள்ளே வராதே!’ன்னு தடுப்பது யார்? மெர்சலாகும் மக்கள் இயக்கம்! தி.மு.க.வின் தலைமை மற்றும் குடும்ப வட்டாரத்துக்கு விஜய்யின் இந்த திடீர் அரசியல் எழுச்சி விருப்பமானதாக இல்லை! என்கிறார்கள் ”விஜய் தன்னோட சினிமாவுல அடியாட்களை பார்த்து ‘சாமி கிட்ட மட்டும்தான் சாந்தமா பேசுவேன். சாக்கடைங்கட்ட இல்ல!’ அப்படின்னு பொளேர் பஞ்ச் டயலாக் பேசுறாரு. ஆனால், யதார்த்த வாழ்க்கையில பம்மிதான் இருப்பார் போல. தன் இயக்கத்தை மிரட்டும் சக்திகளை அவரால என்ன பண்ண முடியுது?” என்று தெறிக்க விடுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதாவது, சமீபத்தில் முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் நூற்றைம்பது முதல் இருநூறுக்கு உள்ளான பதவிகளுக்கு விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ சார்பாக அவரது ரசிகர்கள் போட்டியிட்டனர். இதில் மிக கணிசமான இடங்களில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். ‘சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வங்கியாக விஸ்வரூபமெடுத்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை கூட விஜய்யின் ரசிகர்கள்…
Read More

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார் ! நாள் குறித்த துர்கா ஸ்டாலின்

எனக்கு அமைச்சர் பதவியெல்லாம் எதுவும் வேண்டாம் ன்னு உதயநிதி ஸ்டாலின் சொல்லிட்டு வர்றதெல்லாம் கட்சியில் உள்ள சீனியர்களை சரிகட்டுவதற்கான ஒரு முயற்சி தான்னும், அவரை அமைச்சராக்குவதற்கான நாள், நேரம் வரை துர்கா ஸ்டாலின் குறித்துவிட்டதாகவும் அறிவாலய வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. அமைச்சர் பதவியை தொடர்ந்து அப்படியே அவரை துணை முதல்வராக்கவும் மெகா திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் சொல்கின்றனர் விவரமறிந்த உடன்பிறப்புகள். உதயநிதியை அமைச்சராக்குவதில் துர்கா ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். அதிருப்தியில் இருக்கும் சீனியர்களை சரிகட்ட முயற்சி பண்ணிட்டு வர்றாங்க ளாம் மே மாதம் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பாராம் திமுக இளைஞரணி செயலாளராகவும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாகவும் இருக்கிற உதயநிதி ல்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் கொளுத்திப் போட்டிருந்தார் அவரின் நெருக்கிய நண்பரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நட்பின் மிகுதியால் அவர் இவ்வாறு சொல்லியிருக்கலாம்ன்னு தான் பொதுவா எல்லாரும் நெனைப்பாங்க..…
Read More
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.இவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 5 புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது ராஜேந்திர பாலாஜிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பாஜக ஆதரவோடு சர்ச்சை சாமியார் நித்தியானந்தா கட்டமைத்துள்ளதாக கூறப்படும் கைலாசா நாட்டுக்கு ராஜேந்திர பாலாஜி போயிருக்கலாம் என்றும், அங்கு சென்றால் தமிழக போலீசாருக்கு ஒரே கல்லில் 2 மாங்காய் கிடைக்க கூடும் என்றும் பேசப்பட்டது.இந்த சூழலில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக திடீரென…
Read More
தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறாருன்னு சொல்றாங்க. ஒவ்வொரு அமைச்சர்களின் ஃபெர்ஃமான்ஸ் குறித்த மாதாந்திர ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு உளவுத்துறை கொடுத்து வருது .தமிழ்நாடு அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் பெரிய மாற்றம் வரலாம், டெல்டாவில் பலரும் அமைச்சர் பதவி அளிக்கப்படலாம்ன்னு அறிவாலய வட்டாரங்கள் சொல்லுது.. இதுகுறித்து பல முக்கிய விவரங்கள் வெளியாகி இருக்குது. முக்கியமா டெல்டா மாவட்ட எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்ங்கிற தகவல்கள் வருது. சுமார் 7 அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லைன்னு ரிப்போர்ட் சொல்லுது. முதலில் ஆட்சி பொறுப்பேற்றதும் 100 நாளில் அமைச்சர்களின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்கப்பட்டு அவர்களுக்கெல்லாம் மதிப்பெண் வழங்கி இருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதில் பாஸ் மார்க் எடுக்காதவர்கள் கேபினெட்டிலிருந்து கல்தா கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால், 100 நாட்கள் என்பது மிக குறுகிய காலம்ங்கிறதால், மேலும் 3 மாதங்கள் அவகாசம் தரலாம்னு ஸ்டாலினுக்கு யோசனை சொன்னதாக சொல்லப்படுது. அதனால், 100 நாளில் கல்தா கொடுக்கும்…
Read More

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி ?

 நடக்கப்போகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளை கழட்டி விட்டுட்டு, தனித்து போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்குது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் தயாராகிக்கிட்டு இருக்குது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரியில் நடக்கும்னு எதிர்பார்க்கப்படுது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்குது. நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒரு மாநகராட்சியையும் ஒதுக்குவதில்லை என்கிற முடிவில் தீர்மானமா இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். 2011 இல் ஜெயலலிதா எடுத்த பிளானை இப்போது நாமும் செயல்படுத்தலாம்ங்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஸ்டாலின்னு  தகவல் வெளியாகி இருக்குது.  அடுத்த லோக்சபா தேர்தலை மனதில் வைத்தும், ஆளும் கட்சியில் இருந்து மேயர் இருந்தால் தான் அரசின் திட்டங்களை எளிதாக மக்களிடம் கொண்டு செல்ல…
Read More
பரிகார பூஜைக்குத் தயாராகி வரும் சசிகலா !

பரிகார பூஜைக்குத் தயாராகி வரும் சசிகலா !

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கிற சசிகலா பரிகார பூஜைக்குத் தயாராகி வருகிறார் முக்கியமான அரசியல் சக்தியாக விளங்கிவந்த சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இறங்குமுகம்தான். சசிகலாவின் கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. குடும்பத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்று சசிகலா தன் உறவினர்களிடம் சொல்வியிருக்கிறாராம். தை மாதத்திற்குப் பிறகு பரிகார பூஜைகள் நடத்தப்படலாம் எனச் சொல்லப்படுது.‘ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’ என்பார்களே! கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவின் நிழலாக இருந்து தமிழக அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இவர் செயல்பட்டு வந்ததை நாடு நன்கறியும். சசிகலாவின் ஒரு நிமிடப் பார்வைக்காக அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் எனப் பலரும் நாள் கணக்கில் காத்திருந்த காலங்கள் உண்டு. ஆனால் என்றைக்கு ஜெயலலிதா இறந்தாரோ அன்றுமுதல் இவருக்கு இறங்குமுகம்தான். சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைவாசம், எடப்பாடியின் துரோகம், குடும்பத்தினரின் குத்து வெட்டு, தினகரனின்…
Read More
அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்ட உத்தரவுகள் ரத்து. !

அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்ட உத்தரவுகள் ரத்து. !

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்ட அத்தனை நியமன உத்தரவுகள் ரத்து. முதல்வர்.மு.க.ஸ்டாலின் அதிரடி. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமனம் செய்து இருந்த அத்தனை நியமன உத்தரவுகளையும் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார் . முதல்வர் ஸ்டாலின். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது . தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமன விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மற்ற அமைச்சர்களும் முதல்வரின் இந்த அதிரடி அதிர்ந்து போயிருக் கிறார்கள். ஒவ்வொரு ஆட்சியின் போதும் அந்தக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவது வழக்கம் அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு போக்குவரத்துக்கழக டிப்போவிற்கும் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம் . அப்படித்தான் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக டெப்போவிற்கு வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன் . இதற்காக 199 பேர் அடங்கிய வழக்கறிஞர்கள் பட்டியலை போக்குவரத்து கழக துறையின் முதன்மைச் செயலாளர்…
Read More
தங்கமணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய செந்தில் பாலாஜி!

தங்கமணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய செந்தில் பாலாஜி!

பத்தாண்டுகால பகை: தங்கமணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய செந்தில் பாலாஜி! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தங்கமணிக்கும் இடையேயான பத்தாண்டு காலப் பகைதான் இந்த ரெய்டு என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்   திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து பாய்ந்து வரும் ரெய்டுகளில் போன வாரம் சிக்கியவர் கொங்கு மண்டலத்தில் கோலோச்சி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி. இந்த சோதனையை முன்கூட்டியே அறிந்தவர் போல ரெய்டை கூலாகவே எதிர்கொண்டார் தங்கமணி. தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டாலும், பெரிய அளவில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. ஆனால், கிரிப்டோகரன்சியில் அவர் முதலீடு செய்திருப்பதாக வெளியான தகவல் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. இந்த ரெய்டுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த அழுத்தமே காரணம் என்று செய்தியாளர் சந்திப்பின் போது வெளிப்படையாகவே தங்கமணியும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து கொங்கு மண்டல அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “இன்று நேற்று அல்ல; இது பத்தாண்டுகாலப் பகைங்க” என்கின்றனர். என்னது…
Read More