அரசியல்

மொதல்ல அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க...முதல்வரின் தூக்கத்தை கலைத்த டெல்லி! மத்திய அரசின் நிதி உதவிகள் கிடைக்க வேண்டுமென்றால், முதலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு டில்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.   பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க ஸ்டாலினுக்கு மத்திய அரசு அழுத்தம் ஆட்சி, அதிகாரம், அரசியல் என அனைத்திலும் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர்கள் பட்டியலில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு. அமைச்சராக பொறுப்பேற்றதும் தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிட்டு, தேசிய அளவில் கவனத்தை பெற்றவர்... பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், அரசின் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அதனை பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்து உடன்பிறப்புகளையே ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.…
Read More
பக்க பிளானில் களமிறங்கும் பாஜக !!

பக்க பிளானில் களமிறங்கும் பாஜக !!

பாஜகவில் போட்டியிடுறதுக்கு ஆளே இல்லன்னு கிண்டல் அடிச்சாங்க.ஆனா நிறைய பேர் ஆர்வத்தோட வேட்பு மனுத் தாக்கல் பண்ணிட்டு வர்றாங்க. பாஜக தனித்துப் போட்டிங்கிறது விஷப்பரிட்சைன்னு பாஜக நிர்வாகிகள் புலம்புறாங்க.அண்ணாமலைய காலி பண்றதுக்காகத்தான் அவர உசுப்பேத்தி தனித்துப் போட்டின்னு அறிவிக்க வைச்சாங்கன்றாங்க. இதுல கணிசமான இடத்தில் ஜெயிச்சா அண்ணாமலை மவுசு கூடும் கேவலமா தோத்தா அண்ணாமலை காலிங்கிறாங்க.பாஜகவில பழத்தின்னு கொட்டை போட்ட பழைய பெருச்சாளிகள். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இணைந்து தேர்தலைச் சந்தித்து வந்த அதிமுக - பாஜக நடக்கவிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாக களமிறங்குது. மாநில அளவில் இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாததால், தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதேவேளை, பேச்சுவார்த்தைகள் முடிவதற்கு முன்பாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது அதிமுக. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற…
Read More
கோவைல வெல்லப் போவது யார் ? எஸ்.பி.வேலுமணியா ? அமைச்சர் செந்தில் பாலாஜியா? இந்த பரபரப்பான சூழ்நிலையில கோவைல அதிமுக சார்பா எஸ்.பி.வேலுமணி பினாமி சந்திரசேகரோட மனைவி முனைவர் ஷர்மிளா சந்திரசேகர் 38 வது வார்டுல களமிறக்ஙப்பட்டிருக்காரு.ஜெயிச்சா கோவை மேயர் அவருதான்னு அடிச்சு சொல்றாங்க அதிமுக உடன்பிறப்புகள். அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோவை நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோயம்பத்தூர் 38வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் பினாமி சந்திரசேகரின் மனைவி சர்மிளா சந்திரசேகரை அதிமுக களமிறக்கியுள்ளது. இதனால் கோவை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுச்சு. ஆனால் கோவையைப் பொருத்தவரையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக மண்ணைக் கவ்வியது. இதனால் கோவை என்பது அதிமுகவின் கோட்டையாக இப்போது வரை இருந்து வருது. அங்குள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில்…
Read More
தொகுதி பங்கீட்டில் கறார் காட்டிய அதிமுக - செம கடுப்பில் பாஜக! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பாஜகவிடம் அதிமுக கறார் காட்டி உள்ளது. தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. வரும் 4 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 5 ஆம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும்.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, திமுக - அதிமுக போன்ற பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து…
Read More

திமுகவிற்கு ஆப்பு வைத்த ஆளுநர் ?

தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி பதவி விலகணும்னு சொன்ன திமுகவுக்கு அழகா செக் வைத்த ஆளுநர். நீட் விலக்கு தொடர்பா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாத ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகணும்னு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார் பல திமுக தலைவர்களும் இதையே தெரிவிச்சாங்க., இந்த சூழலில் ஆளுநர் ரவி தனது அறிக்கையில் நீட் தேர்விற்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்தது, மிக குறைவான எண்ணிக்கையில் எனவும் ஆனால் தற்போது 7.5% இட ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு வந்த. பிறகு அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். இதன் மூலம் நீட் தேர்வு நல்லது என்று உறுதி படுத்தி இருக்கிறார் ஆளுநர், இது ஒருபுறம் என்றால் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது துணை வேந்தர்களை இனி தமிழக அரசே நியமிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம்…
Read More
தீவிர அரசியலுக்கு வந்தார் விஜய்..! மேயர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி! கலக்கத்தில் கழகங்கள் ! 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு வேட்பாளர் தேர்வு நடந்து வருது ‘நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’னு சினிமாவில்  பஞ்ச் டயலாக்கில் தெறிக்க விட்டார் விஜய். அதேப்போல் தேர்தலில் ஒரு தடவை வெற்றியை பார்த்துவிட்டவர், இப்போது அடுத்தடுத்து களமிறங்கி கலக்க முடிவெடுத்துவிட்டார். அதாவது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. அமோக வெற்றியை பெற்றாலும் கூட விஜய்யின் ‘மக்கள் இயக்க’த்தை சேர்ந்தவர்கள்  சுயேட்சையாக களமிறங்கினாங்க. விஜய்யின் பெயரையும் கொடியையும் பயன்படுத்தி பிரசாரம் செய்த அவரது இயக்க நிர்வாகிகள் சுமார் நூற்றைம்பது இடங்களில் வெற்றி பெற்றனர். சொல்லப்போனால் போட்டியிட்ட மொத்த இடங்களில்…
Read More
நயினார் நாகேந்திரனால் அதிமுக-பாஜக கூட்டணியில் குண்டு.. ஈபிஎஸ்ஸை அவசரமாக கூல் செய்த அண்ணாமலை.. பின்னணி என்ன? தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும்கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில்  பேசுவதில்லை. நயினார் நாகேந்திரன் அதிமுக பற்றி பேசிய ‘ஆண்மை’ பேச்சு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக துணை தலைவரும் சட்டப்பேரவை பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையானது. அவர் பேசும்போது, “தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும்கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு…
Read More
குடியரசுத் தலைவராகிறார் Dr. தமிழிசை சௌந்தரராஜன் ? இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் பாஜக சார்பாக முன்னிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் உலவிக்கொண்டு இருக்கின்றன. டெல்லி வட்டாரத்திலும், பாஜக வட்டாரத்திலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இந்த தகவல்கள் உலவிக்கொண்டு இருக்குது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்காக பல்வேறு மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் மிக தீவிரமாக தயாராகிக்கிட்டு இருக்கிறாங்க. இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த சில மாதங்களில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017 இந்தியாவின் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார். பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார். இவருக்கு ஆதரவாக 65.65 சதவிகித வாக்குகள் விழுந்தன. இவரை…
Read More

அண்ணாமலையை சினம் கொள்ள வைத்த நகைச்சுவை நிகழ்ச்சி

ஊடகங்களை மிரட்டி பணியை வைத்துவிடலாம் என்ற சிந்தனைப்போக்கு, தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு செல்வாக்கு படைத்த தலைவருக்கும், தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அளவுக்கு இருந்திருக்குமா? சந்தேகம்தான் என்கிறார்கள் அனுபவமிக்க அரசியல் கள ஆய்வாளர்கள். தமிழக பாஜக தலைவராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பே, அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட காலத்திலேயே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் பேச்சும், செயல்களும் ஊடகத்திற்கு எதிராகதான் இருந்தது. எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போல தமிழக பாஜக தலைவராக பதவியேற்றுக் கொண்ட பிறகு, எதேச்சதிகாரப் போக்கு பன்மடங்கு அதிகரித்துவிட்டதாக குமறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.அரசியல் மேடைகளில், நேர்காணல்களில் விமர்சனங்கள் தாறுமாறாகதான் இருக்கும். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பார் முன்னாள் போலீஸ் அதிகாரி என்று என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், இளம்தலைமுறையினரிடம் உள்ள பக்குவம் கூட கே.அண்ணாமலையிடம் இல்லை என்பதும், பொது வெளியில் கூட நிதானம் இல்லாமல் பக்குவமற்ற போக்கை அடிக்கடி வெளிப்படுத்திக்…
Read More
பாமகவில் மீண்டும் தி.வேல்முருகன்.???

பாமகவில் மீண்டும் தி.வேல்முருகன்.???

பாமகவில் மீண்டும் தி.வேல்முருகன்.??? டாக்டர் ராமதாஸூக்கு நெருக்கமானவர்கள் தூது.வருகிறார்களாம்.. கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் பாமகவில் இணைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், தன்னையும் பலர் அனுகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர் என்றும், ஆனால் இதுவரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசிடமிருந்து நேரடியாக அழைப்பு வரவில்லை என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல் முருகன் தெரிவிச்சிருக்காரு. கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் பாமகவில் இணைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், தன்னையும் பலர் அணுகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய வேண்டும்னு அழைப்பு விடுத்தாங்க என்றும், ஆனால் இதுவரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசிடமிருந்து நேரடியாக அழைப்பு வரவில்லை என்றும் தவக தி.வேல் முருகன் தெரிவிச்சிருக்காரு. 1980களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக தான் நடத்திய வீரியமிக்க போராட்டத்தின் மூலம் தமிழகத்தின் சமூகநீதி காவலராக  அறியப்பட்டவர் தான் பாமக நிறுவனர் ராமதாஸ்.…
Read More