நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி ?

 நடக்கப்போகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளை கழட்டி விட்டுட்டு, தனித்து போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்குது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் தயாராகிக்கிட்டு இருக்குது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரியில் நடக்கும்னு எதிர்பார்க்கப்படுது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்குது. நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒரு மாநகராட்சியையும் ஒதுக்குவதில்லை என்கிற முடிவில் தீர்மானமா இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

2011 இல் ஜெயலலிதா எடுத்த பிளானை இப்போது நாமும் செயல்படுத்தலாம்ங்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஸ்டாலின்னு  தகவல் வெளியாகி இருக்குது.  அடுத்த லோக்சபா தேர்தலை மனதில் வைத்தும், ஆளும் கட்சியில் இருந்து மேயர் இருந்தால் தான் அரசின் திட்டங்களை எளிதாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பதாலும் மாநகராட்சிகளை கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஒதுக்க வாய்ப்பே இல்லைன்னு தகவல்கள் வருது.

எதிர்க்கட்சியை ஒன்றும் இல்லாமல், ஆக்க இதுவும் ஒரு நல்ல முடிவுங்கிறதால், முதல்வர் இந்த முடிவில் இருக்கிறார்ன்னு திமுக வட்டாரங்கள் கூறுது. அரசின் திட்டங்களை மாநகராட்சிகளில் சிறப்பாக செயல்படுத்த மேயர்கள் அவசியம். அவர் நம்ம கட்சியாக இருந்தால் எளிமையாக இருக்கும். கூட்டணி கட்சியாக இருந்தால் ஒவ்வொரு முறையும் கூட்டணி கட்சிகளிடம் போய் பேச வேண்டியதிருக்கும்.

இது திட்டங்களை தாமதப்படுத்தும்ங்கிறதுனால கூட்டணி கட்சிகளுக்கு மாநகராட்சி பதவிகளை திமுக ஒதுக்க வாய்ப்பு இல்லைன்னு தகவல்கள் வருகின்றன. இதை பற்றி திமுக நிர்வாகிகள் சிலர் கூட்டணி கட்சிகளிடம் பேசி இருப்பதாகவும் தகவல்கள் வருது. நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மிகக் குறைவான இடங்களையே ஒதுக்கீடு செய்தது.

இதனால், கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சீட் வாங்கிடணும்னு கடுமையாக திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். திமுக தலைமையின் இந்த முடிவு, கூட்டணிக்கட்சியினரை வருத்தத்தில் உள்ளாக்கி இருக்கிறது. மேலும், கூட்டணி கட்சியினருக்காக ‘சீட்’களை ஒதுக்குவாரா என்ற கேள்வி ? தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.கூட்டணி வைத்ததால் தான் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து போனது. கூட்டணியால் பலன் இல்லை. கிராமம் கிராமமாக சென்று கட்சியை பலப்படுத்துவோம். அப்போதுதான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை நம்மால் பெற முடியும். அதற்கு காங்கிரஸ்காரர்கள் உழைக்க வேண்டும் ; கடுமையாக உழைக்க வேண்டும்” என்று ‘கர்ஜித்தார்’ அழகிரி.

திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் வளர்ச்சியே அடையவில்லை என்பது போலவும், திமுகவால் காங்கிரசுக்கு எந்த லாபமும் இல்லை என்பது போலவும் தொணிக்கின்ற பேச்சுக்கள்தான் திமுகவினரை வருத்தம் அடைய வைத்திருக்கிறது. அந்த வருத்தத்தையே அறிவாலயத்திற்கு பாஸ் செய்துள்ளனர் நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள். இது தவிர, காங்கிரஸ் கருத்தரங்கத்தில் பேசப்பட்ட தகவல்களை உளவுத்துறையும் ஆட்சி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.இதையெல்லாம் மனசுல வைச்சு கிட்டு திமுக தனித்துப் போட்டியிட திட்டம் போட்டிருக்குதாம்.

நகராட்சிகளின் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதுடன், ஓட்டுப்பதிவினையும் 2 கட்டமாக நடத்த தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது… ஒருவேளை அப்படி அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்பட்டால் திமுக வேறு ஒரு ரூட்டை யோசிக்கிறதாம்.. மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடியாகவே இறங்கினால் சரியாக இருக்குமே? எதற்காக கூட்டணி கட்சியினரை தேர்ந்தெடுக்கவேண்டும்? அவர்களுக்கு பதிலாக சொந்த கட்சியினருக்கு உள்ளாட்சி தலைவர்களுக்கான பதவி வாய்ப்புகளை தந்தால், அது கட்சியின் பலத்தை பெருக்குமே என்ற யோசனையில் உள்ளதாம்.. ஒருவேளை கூட்டணிக்கு அதிக வாய்ப்புகளை தந்துவிட்டால், அது அதிமுகவுக்கு பலமாக போய்விடும் என்றும் திமுக கருதுவதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, ஒருவேளை மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்தப்பட்டால் யாரை மேயர் வேட்பாளராக அறிவிப்பது என்பதில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி உருவாகலாம்… இதுவே மறைமுக தேர்தல் நடத்தப்பட்டால் இந்த பிரச்சினைக்கு இடம் இருக்காது என்று திமுக கணக்கு போடுகிறது.  ஆனால், கூட்டணி கட்சிகளோ, நேரடி தேர்தலைதான் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.. ஒருவேளை மறைமுக தேர்தல் என்றால் திமுக என்ன கொடுக்கிறதோ, அதை பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கும் கூட்டணிகள் தள்ளப்படலாம் என்று தெரிகிறது. எதுவானாலும் அடுத்த சில தினங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிடும்ன்னு எதிர்பார்க்கப்படுது. இந்த தேர்தலில், திமுக பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டால், அதிமுகவும் பதிலுக்கு முழு பலத்தை காட்ட தயாராகி கொண்டிருக்கிறது..!  எப்படிப்பார்த்தாலும், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது மிகப்பெரிய வாய்ப்பாகும்.. காரணம், நமது நாட்டிலேயே அதிகமான நகர்ப்புற கட்டமைப்பை கொண்ட மாநிலம் தமிழகமாகும்.. சுமார் 53 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள்… 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்களில் 3 கோடியே 28 லட்சம் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.. அதனால்தான், மாநகராட்சி மேயர் என்பது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது… அந்தவகையில், மீண்டும் மறைமுக தேர்தலே கொண்டு வரவும் வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுது… பார்ப்போம்..!