அரசியல்

அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கத் தயாராகும் பாஜக சீனியர் நிர்வாகிகள்

அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கத் தயாராகும் பாஜக சீனியர் நிர்வாகிகள்

அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கத் தயாராகும் பாஜக சீனியர் நிர்வாகிகள். அதிரடி அரசியல் செய்துவரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்குக் கட்சிக்குள்ள சமீப காலமாகடுமையான எதிர்ப்பு கிளம்பி வருது. அண்ணாமலையின் அசுர வேக வளர்ச்சியை மூத்த தலைவர்கள் விரும்பலை. பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்கள் அண்ணாமலையுடன் இணைந்து செயல்படுவதேயில்லை. கட்சிக்காகப் பாடுபட்ட மூத்த தலைவர்களை அண்ணாமலை போன்றவர்கள் கொஞ்சமும் மதிப்பதில்லைன்னு சொல்லப்படுது. ‘பொது வெளியில் புலி ; கமலாலயத்தில் எலி’. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள் அந்த கட்சியின் மூத்த புள்ளிகள். கூடவே இந்த மாஜி ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக டெல்லிக்கு புகார் கடிதங்களையும் வழக்கம் போல சீனியர்கள் அனுப்பி வருவதாகக் சொல்லப்படுது.தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக் கட்டங்களில் பத்தோடு பதினொன்றாவது கட்சியாகத்தான் பாஜகவும் இருந்தது. தமிழிசை தலைவரான பிறகே அந்தக் கட்சி மக்கள் மத்தியில் பிரபலமடைய முடிஞ்சிது. நாள் தவறாமல் அவர் எதையாவது மீடியாக்களில் பரபரப்பாக பேசி மக்களின்…
Read More
ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் பனிப்போர் !

ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் பனிப்போர் !

 ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் பனிப்போர் நடந்துகிட்டிருக்கிறதாதைலாபுரம் வட்டாரங்கள் சொல்லுது. அப்பாவுக்கும் புள்ளைக்கும் இடையே அண்மைக் காலமாக சம்பிரதாய ரீதியான பேச்சுக்கூட இல்லையாம். களத்திற்குப் போகச் சொல்லி ராமதாஸ் பலமுறை சொல்லியும் அன்புமணி கேக்கிற மாதிரி இல்லை என்கிறார்கள் ராமதாஸூக்கு நெருக்கமானவர்கள். சின்னவரிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு சுதந்திரமும் கொடுத்தால்தான் பெரிய ஐயா எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படும்னு சொல்றாங்க அன்புமணிக்கு நெருக்கமானவர்கள். “அன்புமணி முதல்வராகணும். இதற்காக வயது வித்தியாசம் பார்க்காமல் வாக்காளர்கள் காலில் விழுந்து ஓட்டு கேளுங்கள்.’. மகனுக்காகப் பொதுவெளியில் டாக்டர் ராமதாஸ் இப்படி உருகினாலும், உள்ளுக்குள் இருவருக்கும் இடையில் மிகப் பெரிய பனிப்போரே நடந்துகிட்டிருப்பதாகத் தைலாபுரம் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன.எண்பதுகளில் வன்னியர் சங்கமாக உருவெடுத்துப் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாக உருமாறிய இந்த இயக்கம் ஆரம்ப கட்டத்தில் வட மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது நிஜம். இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள், ஐந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் என்பதெல்லாம் பாமகவிற்கு இனி கிடைக்காத வசந்த காலங்கள். ’ஆனால் பாமகவின் அரசியல் செல்வாக்கால்…
Read More
அரசியல் அனாதையான தினகரன் ?முடிவெடுக்க முடியாமல் திணறிவர்றாரு ?திமுக அதிமுக ஆகிய இரண்டு முன்னணிக் கட்சிகளையும் எதிர்த்துத் தோற்கடித்த டிடிவி தினகரனை நாளைய தமிழகமாகவே பலரும் கணித்தார்கள்.   எடப்பாடி அரசைக் கவிழ்க்க தினகரன் அடுத்தடுத்து மேற்கொண்ட வியூகங்கள் தோல்வியில் தான் முடிந்தது. அவரை நம்பி அதிமுகவிலிருந்து வெளியே வந்த 28 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்ததுதான் மிச்சம். கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பெரும்பாலான குடும்ப உறவுகளின் அதிருப்தியையும் சம்பாதித்தது தினகரனின் சரிவுக்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுது. தொடர் தோல்விகள், நிர்வாகிகள் விலகல் என அடுத்தடுத்து அதிர்ச்சிகளால் துவண்டு போன தினகரன் இப்போ தனியே களமாடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானபோது இந்தியாவே அவரைத் திரும்பிப் பார்த்தது. அதிகார பலமிக்க அதிமுக, அமைப்பு ரீதியாக பலம் பொருந்திய திமுக ஆகிய இரண்டு முன்னணிக் கட்சிகளையும் எதிர்த்துத்…
Read More
கனிமொழிக்கு எதிராகக் கம்பு சுற்றும் கீதா ஜீவன் !

கனிமொழிக்கு எதிராகக் கம்பு சுற்றும் கீதா ஜீவன் !

கனிமொழிக்கு எதிராகக் கம்பு சுற்றும் கீதா ஜீவன் தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் இடையிலான திரைமறைவு மோதல் இப்போது வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.   ஹைலைட்ஸ்: பொது நிகழ்ச்சிகளில் தன்னைவிடக் கனிமொழிக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவது குறித்து கீதா ஜீவனுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திதான் மோதலின் முதற்கட்டமாகக் கூறப்படுகிறது. மறைந்த தலைவரின் மகள், இப்போதைய தலைவரின் சகோதரி என்பதால் இயற்கையாகவே முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது என்கிறார்கள் கனிமொழிக்கு நெருக்கமானவர்கள். விஷயம் மேலிடத்திற்குச் செல்ல, தூத்துக்குடி விவகாரம் பற்றி முழு அளவிலான விவரங்களைத் திரட்டித் தருமாறு உளவுத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குமரி மாவட்டத்தில் மனோ தங்கராஜ்- சுரேஷ் ராஜன், நெல்லை மாவட்டத்தில் அப்பாவு- ஆவுடையப்பன் என தென்மாவட்ட திமுக, கோஷ்டிபூசலில் சிக்கித் திணறும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் இடையிலான திரைமறைவு மோதல் இப்போது வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியிருப்பதாக…
Read More
கனிமொழிக்கு சபரீசன் கொடுத்த அலர்ட்: என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்? Manikandaprabu S | Samayam TamilUpdated: 13 Dec 2021, 12:32 pm 1334 Subscribe தென் மாவட்ட அமைச்சர் ஒருவர் கனிமொழி குறித்து முதல்வரிடம் போட்டுக் கொடுத்துள்ள விவகாரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது   கனிமொழி, சபரீசன் ஹைலைட்ஸ்: கட்சியினரை, பொது மக்களை கனிவுடன் அணுகும் பாங்கு போன்றவை கனிமொழிக்கு நல்ல இமேஜை கொடுத்துள்ளது கனிமொழி மீதான புகார் சபரீசன் மூலமே பாஸ் ஆனதுதான் இதில் சுவாரஸ்யம் என்கின்றனர்என்னைப் பற்றியே என் அண்ணனிடம் புகார் அளித்துள்ளார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கனிமொழி வருத்தம் சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு? திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டதுமே, அம்மாவட்டத்தில் முகாமிட ஆரம்பித்த அவர், இன்று வரை தூத்துக்குடி முழுவதும் பரபரப்பாக சுற்றி தீவிரமாக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடியில் எந்த திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் கனிமொழிதான் அதில் சீஃப் கெஸ்ட். தூத்துக்குடியோடு…
Read More
 ஸ்டாலினுக்கு எதிராக கொந்தளிக்கும் மூத்த அமைச்சர்கள்? முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் தமிழக அரசையும் அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறதுன்னு தலைமைச் செயலக திமுக விசுவாசிகள் பேச ஆரம்பிச்சிட்டாங்க   இந்தத் தலைப்பைக் கேட்டதும் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சிலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். இதெல்லாம் நடக்கிற விஷயமா எனப் பலரும் எண்ணலாம். ஆனால் தேசிய அரசியலில் வி.பி சிங், ஐ.கே குஜ்ரால் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்த நேற்றைய வரலாற்றைக் கொஞ்சம் அலசினால் எல்லாவற்றின் பின்னணியிலும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்ததை புரிந்துகொள்ள முடியும். இத்தகைய கருத்து வேறுபாடுகள்தான் இப்போது தமிழக அரசையும் அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறதுன்னு விஷயமறிந்தவர்கள் கோட்டையில் பேசத்தொடங்கியிருக்காங்க. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பில் ஸ்டாலின் அமர்ந்ததை தொண்டர்கள் முழு மனசோடு ஏற்றுக்கொண்டாலும் சில மூத்த நிர்வாகிகளுக்கு அதில் பூரண உடன்பாடு இல்லைன்னு சொல்லப்படுது. இதில் முதன்மையானவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் அமைச்சர்…
Read More

கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் ? ஸ்டாலின் அதிரடி முடிவு ?

கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் ? ஸ்டாலின் அதிரடி முடிவு ? கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக பொறுப்புகளில் அ.தி.மு.கவினர் இருக்கிறதால், அதனை மொத்தமாக கலைக்கணுங்கிற குரல், தி.மு.க தரப்பில் வரத் தொடங்கியிருக்குது. `போலி நகைகளை வைத்துக் கடன் பெற்றது என குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருதுன்னு சொல்றாங்க தி.மு.க நிர்வாகிகள். என்ன தான் நடக்குது? சேலம் மாவட்டத்தில் தி.மு.க செயற்குழுக் கூட்டம் கடந்த 5 ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகிட்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் சிலர், ` நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர இருக்குது. கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்குக்கீழ் மக்கள் வாங்கிய நகைக்கடன்களை முதலமைச்சர் தள்ளுபடி செய்திருக்காரு. ஆனால், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக பொறுப்புகளில் அ.தி.மு.கவினர் இருக்கிறதால் அவர்கள் தங்களுக்கு சாதகமாக மக்களிடம் பிரசாரம் செஞ்சுக்கிட்டு வர்றாங்க. இதனால் நமக்குத்தான் பாதிப்பு…
Read More
களவாடப்பட்ட அதிமுகவின் தலைமைப் பதவிகள் அதிமுக தலைமைக்கான தேர்தல் கேலிக்கூத்தாக நடந்து முடிஞ்சிருக்கு. தேர்தல் கமிஷன், சொந்த கட்சியினரை மட்டுமல்ல, எல்லாரையும் முட்டாளாக்கி இருக்குது இந்த தேர்தல்! தன் அதிகாரத்தை உறுதிபடுத்திக் கொள்வதற்கான சசிகலாவை பகடைக் காயாக்கிக்கிட்டாரு பன்னீர்! சில நிர்வாகிகள், ‘கட்சியில் தங்களுக்கு செல்வாக்கு இருக்குது. நாங்கள் இந்த பதவிக்கு போட்டியிடுறோம்ணு வேட்பு மனு தாக்கல் செஞ்சிருந்தாங்க. அதன்படி முதல் நாளான 3-ந் தேதி 154 மனுக்கள் வந்திருந்தது. 2-ம் நாளான 4-ந் தேதி 98 மனுக்கள் வந்தது. இன்னும் சிலரையோ மனுப் போடவே அனுமதிக்கலை! வடிகட்டி வாங்கியதில் வந்திருந்த 252 மனுக்களையும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து பரிசீலனை செய்வதாக பாவனை காட்டினார்கள்! வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தொடர்ந்து 5 ஆண்டு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பித்தவராக இருக்க வேண்டும் என்பதால், அதை அடிப்படையாக வைத்து பரிசீலனை செய்யப்பட்டதாக சொன்னார்கள்! வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களை 15 பேர் முன்…
Read More
திமுகவில் ஓரங்கட்டப்படும் கனிமொழி ?அதிர்ச்சியில் அவரது ஆதரவாளர்கள்.?

திமுகவில் ஓரங்கட்டப்படும் கனிமொழி ?அதிர்ச்சியில் அவரது ஆதரவாளர்கள்.?

திமுகவில் ஓரங்கட்டப்படும் கனிமொழி.. அவர் ஆரம்பித்த சென்னை சங்கமத்தில் பெயர் இல்லை.?? அதிர்ச்சியில் அவரது ஆதரவாளர்கள். கலைஞரின் மறைவுக்குப் பின்னர் கனிமொழி அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் அங்கொன்றும், இங்கொன்றும் வெளியானது. ஏற்கனவே அழகிரி ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து கனிமொழியை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரியுது. தமிழக அரசியலில் அவர் கால்பதித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர்கள் அவரை அப்போதே டெல்லிக்கு அனுப்பி வைத்து விட்டனர். அழகிரியைப் போலவே கனிமொழியையும் அரசியலிலிருந்து ஓரம் கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் தமிழக அரசு அறிவிக்கப் போகும் சென்னை சங்கமம் குழுவில் இருந்தும் கனிமொழி ஒதுக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள திமுக பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும்கூட அது அனைத்தையும் சமாளித்து, மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை…
Read More
உதயநிதிக்கு மந்திரி பதவி !துர்கா ஸ்டாலின் அழுத்தம்? திணறும் ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க ஸ்டாலினின் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன கலைஞருக்கு பின் ஸ்டாலின்தான் என்ற நிலையை உருவாக்க ஸ்டாலினுக்கு நீண்ட வருடங்கள் பிடித்தது. திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போதே, அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாமல் இருந்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னதாக, வாரிசு அரசியலை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தபோது, உதயநிதி ஸ்டாலினுக்கு சீட் கொடுப்பதில் திமுக மேலிடம் தயக்கம் காட்டி வந்தது. இந்த தகவலை அவரது தாயாரும் ஸ்டாலினின் மனைவியுமான துர்கா ஸ்டாலினே தேர்தல் பிரசாரத்திற்கிடையே டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது…
Read More