பதவி விலகினார் பிடிஆர்..? புதிய ஐடி விங் செயலாளர் டிஆர் பி ராஜா ? பின்னணி என்ன..?

கட்சிப் பதவியை விட்டுக்கொடுக்குறதப் பத்தி தலைமைக்கு பி.டி.ஆர் தெரிவிச்சவுடனே தலைமையும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியுது.

ஆளும் தி.மு.க.விற்குள் ஏற்பட்ட உள்கட்சி பூசலால்  நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், கட்சியின் ஐடி பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிய வந்திருக்குது.

“நிதித்துறை அமைச்சரின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்கிறது. கூடுதலாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் அதோட ஃபாலோ அப் விஷயங்கள் இருக்குறதுனால கடந்த வாரம், கட்சிப் பதவியை விட்டுக்கொடுக்கிறதப்பத்தி தலைமைக்கு பி.டி.ஆர் தெரிவிச்சவுடனே , தலைமையும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியுது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக 2017-ம் ஆண்டு முதல் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வந்தார். பணிச்சுமையை காரணம் காட்டினாலும் உட்கட்சி பூசலே அவர் பதவியை ராஜினாம செய்ய காரணம்னு சொல்லப்படுது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வந்த கோவை மகேந்திரனை, பிடிஆரின் ஐடி டீமிலேயே நியமித்தது திமுக. மகேந்திரனுக்கு திமுக ஐடி விங்க் அணியின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. திமுகவின் ஐடி விங்க் செயலாளராக பிடிஆர் இருந்தபோதிலும், அவரது பணி சுமையை குறைக்கும் பொருட்டு மகேந்திரனை நியமித்தது. ஆனால் அவரை நியமித்தது பிடிஆருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுது.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டதையும் பிடிஆர் விரும்பலை. இதுபோன்ற காரணங்களுக்காகவே தன் பதவியை ராஜினாமா செய்ய பிடிஆர் தயாரானதாகவும், ஆனால், அந்த ராஜினாமா பற்றி திமுக மேலிடம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவிலைன்னும் சொல்லப்படுது.

அதனைத் தொடர்ந்து மேலும் கட்சி சார்பில் அந்த பதவிக்கு புதிய நபரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதன்படி திமுகவின் அடுத்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்படலாம்னு சொல்லப்படுது. மூன்று முறை மன்னார்குடியிலிருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ள அவர் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது. ஆனாலும், ஸ்டாலினின் மருமகன் திமுக ஐடி விங்கை கவனித்துக்கொள்ள 20 பேர் கொண்ட ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தக் குழுவே நாடாளுமன்றத் தேர்தலையும் கவனிக்கும். பிரஷாந்த் கிஷோரிடம் சில நுணுக்கங்களை கற்றுக்கொண்டுள்ள சபரீசன் அதன் மூலம் சில விஷயங்களை செய்து வருகிறார் எனக் சொல்லப்படுது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முதன்முதலாக அதிமுக கட்சி தொடங்கியது. 2014-ம் ஆண்டு அதிமுக இதை தொடங்கியது. அதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கட்சி சிறப்பான வெற்றியை பெற்றது. அதன்பின்னர் திமுகவும் 2017-ம் ஆண்டு தங்களுடைய தகவல் தொழில்நுட்ப அணியை தொடங்கியது. அப்போது முதல் அந்த அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வர இந்த தொழில்நுட்ப பிரிவும் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. எனினும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தொழில்நுட்ப பிரிவில் அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே இந்தப் பிரிவிற்கு புதியவரை செயலாளராக நியமித்து மீண்டும் அதன் முழு செயல்பாட்டை பெற அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் நீண்ட காலமாக ஒரு சலசலப்பு நிலவி வரும் நிலையில் தற்போது புதியதொரு மாற்றத்திற்கு தயாராகி வருவதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் ஐடி விங் யாருக்கு என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகிறதாம்.  அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் என்பது முக்கியம். அந்த வகையில் காலத்திற்கேற்ப யுத்திகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன. அந்த காலங்களில் போஸ்டர் அடிப்பது, துண்டு பிரச்சுரங்கள் வெளியிடுவது, பேனர் வைப்பது என இருந்தது. தற்போது கால மாற்றத்திற்கேற்ப சமூக வலைதளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிடுவதை அடுத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பாணியை மாற்றிக் கொண்டன. கட்சியின் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, முந்தைய ஆட்சியில் செய்த முக்கிய திட்டங்கள், மாற்று கட்சி ஆட்சியால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வீடு வீடாக கொண்டு சேர்க்கும் பணியை தகவல் தொழில்நுட்பத் துறை கையாண்டு வருகிறது.  இந்த முயற்சியில் அதிமுக 2016-ஆம் ஆண்டு வெற்றி கண்டதை அடுத்து திமுகவும் 2017ஆம் ஆண்டு தனக்கென ஒரு ஐடி விங்கை தொடங்கியது. இதன் மொத்த பொறுப்பையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைத்தது. அவர் பொருளாதார மேதை, சமூகவலைதளங்களை சிறப்பாக கையாள்வார் என்பதால் அவரிடம் மொத்த பொறுப்பும் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி திமுக ஐடி விங்கின் செயலாளராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும், 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் ஐடி விங்கில் செயல்பட்டு வரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதி அமைச்சர் என்ற முக்கிய பொறுப்பையும் வகிக்கிறார். ஐடிவிங் கட்சிக்கு எவ்வளவு முக்கியமோ நிதித் துறை ஆட்சிக்கும் முக்கியமானது. இதில் எங்கு சறுக்கினாலும் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்டப்பெயர் ஏற்பட்டு விடும். எனவே பணிச் சுமையால், ஐடி விங் பதவியை ராஜினாமா செய்ய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜினாமா செய்து விட்டதாகவும் கூட சொல்லப்படுது. ஆனால் இன்னும் உறுதியான தகவலை ஐடி விங் வட்டாரங்கள் வெளியிடவில்லை. இந்த நிலையில் திமுக ஐடி விங் செயலாளர் பதவிக்கு திமுகவில் போட்டா போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. இந்த முக்கிய பதவியை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவுக்கு கொடுக்க திமுக தலைமை விரும்புகிறதாம்.  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. , திமுக ஐடி விங்கை யார் நிர்வகிப்பது என்ற ரேஸ் ஒரு புறமிருக்க, அந்த பதவியை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவுக்கு வழங்கலாம் என தலைமை முடிவு செய்துள்ளதாம். தொகுதி விவகாரங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் டிஆர்பி ராஜா சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பது அவரது முக்கிய பிளஸ்ஸாக தலைமை கருதுகிறது. இதனால் ஐடி விங்கின் செயலாளர் பொறுப்பை ராஜாவிடம் ஒப்படைப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறார்கள்.  பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ராஜினாமா ஏற்கப்பட்டவுடன் திமுகவின் ஐடி விங் மொத்தமும் டிஆர்பி ராஜாவிடம் கொடுக்கப்படும். எனவே எல்லாமே ரெடியாகிவிட்டதாகவும் திமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்று வெளியாக வேண்டியதே பாக்கி என அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பிடிஆரின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் திமுக ஐடி விங் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.