தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறாருன்னு சொல்றாங்க. ஒவ்வொரு அமைச்சர்களின் ஃபெர்ஃமான்ஸ் குறித்த மாதாந்திர ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு உளவுத்துறை கொடுத்து வருது .தமிழ்நாடு அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் பெரிய மாற்றம் வரலாம், டெல்டாவில் பலரும் அமைச்சர் பதவி அளிக்கப்படலாம்ன்னு அறிவாலய வட்டாரங்கள் சொல்லுது.. இதுகுறித்து பல முக்கிய விவரங்கள் வெளியாகி இருக்குது. முக்கியமா டெல்டா மாவட்ட எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்ங்கிற தகவல்கள் வருது.

சுமார் 7 அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லைன்னு ரிப்போர்ட் சொல்லுது. முதலில் ஆட்சி பொறுப்பேற்றதும் 100 நாளில் அமைச்சர்களின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்கப்பட்டு அவர்களுக்கெல்லாம் மதிப்பெண் வழங்கி இருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதில் பாஸ் மார்க் எடுக்காதவர்கள் கேபினெட்டிலிருந்து கல்தா கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால், 100 நாட்கள் என்பது மிக குறுகிய காலம்ங்கிறதால், மேலும் 3 மாதங்கள் அவகாசம் தரலாம்னு ஸ்டாலினுக்கு யோசனை சொன்னதாக சொல்லப்படுது. அதனால், 100 நாளில் கல்தா கொடுக்கும் படலத்தை நிறுத்தி வைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்னு சொல்றாங்க. இந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் பண்றதப் பத்தி இப்போ ஆலோசனைகள் வரத் தொடங்கி இருக்குது. உதயநிதி ஸ்டாலினை அமைச்சரா ஆக்கியே தீரணும்னு துர்கா ஸ்டாலின் உறுதியா இருக்காங்க அதனால நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் இந்த மாற்றம் இருக்கும் என்கிறது அறிவாலய தரப்பு. துறை ரீதியான செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ளாதது, சின்ன சின்ன முறைகேடு குற்றச்சாட்டுகள், அமைச்சர்களை சுற்றியிருக்கும் உதவியாளர்களின் ராஜ்ஜியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கேபினெட்டை மாற்றுவது தவிர்க்க முடியாதது என்கிறார்கள் சீனியர் திமுகவினர்.

மேலும், மூத்த அமைச்சர்கள் சிலர் தங்களின் இலாகா மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதில் சீனியர் மந்திரி ஒருவர், தனக்கு பவர்ஃபுல் இலாகா கிடைக்கும் வரை அரசு பங்களாவில் குடியேற மாட்டேன்னு ஹோட்டலிலேயே இதுவரை தங்கியிருக்கிறார். இதெல்லாவற்றையும் அலசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சரவை மாற்றம் அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் அமைச்சரவையிலிருந்து சிலருக்கு கல்தாவும், சிலருக்கு இலாகா மாற்றமும் செய்ய ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் பரபரப்பா பேசப்பட்டு வருது. டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது. அதனால் அமைச்சரவை மாற்றத்தில் டெல்டா மாவட்டத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என்கிறார்கள். முக்கியமாக டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளார். இவர் அமைச்சரவை ரேஸில் டாப்பில் இருக்கிறாராம். இது போக கும்பகோனம் அன்பழகன், திருவையாறு துரை சந்திரசேகரன்,இவரு 1989ல நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தோற்கடிச்சவரு.5 வது முறையா எம்எல்ஏ வா இருக்காரு. திருவாரூர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற ரகசிய காய்களை நகர்த்தி வருகிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன. நகராட்சி தேர்தல் முடிஞ்சதும் அமைச்சரவை மாற்றம் இருக்குமாம் அதுவரை பொறுத்திருப்போம்.