அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்ட உத்தரவுகள் ரத்து. !

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்ட அத்தனை நியமன உத்தரவுகள் ரத்து. முதல்வர்.மு.க.ஸ்டாலின் அதிரடி.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமனம் செய்து இருந்த அத்தனை நியமன உத்தரவுகளையும் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார் . முதல்வர் ஸ்டாலின். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது . தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமன விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மற்ற அமைச்சர்களும் முதல்வரின் இந்த அதிரடி அதிர்ந்து போயிருக் கிறார்கள்.

ஒவ்வொரு ஆட்சியின் போதும் அந்தக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவது வழக்கம் அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு போக்குவரத்துக்கழக டிப்போவிற்கும் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம் . அப்படித்தான் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக டெப்போவிற்கு வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன் . இதற்காக 199 பேர் அடங்கிய வழக்கறிஞர்கள் பட்டியலை போக்குவரத்து கழக துறையின் முதன்மைச் செயலாளர் கோபால்
ஐ.ஏ.எஸ்க்கு அனுப்பி இருக்கிறார் . அவரும் கடந்த நவம்பர் 23 ஆம் தேதியன்று இதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறார் . இந்த உத்தரவு வெளியான 16 வது நாளில் அதாவது இம்மாதம்(டிசம்பர்) 9 ஆம் தேதியன்று போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் அந்த ஆணையை ரத்து செய்து மற்றொரு உத்தரவை பிறப்பித்துருக்கிறார் . போக்குவரத்து துறை வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறப்பித்த அனைத்து நியமனங்கள் மற்றும் உத்தரவுகள் அத்தனையும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு படியே போக்குவரத்து துறை செயலாளர் ரத்து செய்துள்ளார்.அதற்கு என்ன காரணம் ? என்ற சலசலப்பு போக்குவரத்து துறையிலும் திமுகவிலும் எழுந்து இருக்கிறது . அதே நேரம் ஏன் ரத்து ஆனது என்பதற்கான காரணங்கள் பேச்சும் எழுந்திருக்கிறது.

அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமனம் செய்த வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் , மாற்றுக் கட்சியினர்தான் அதிகம் இடம்பெற்றுள்ளார்கள் , குறிப்பாக பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்றும் முதல்வருக்கு புகார் பறந்திருக்கின்றன.

மேலும் வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் ராஜகண்ணப்பன் மகனுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைத் தளங்களில் பதிவுகள் போட்டு வந்துள்ளனர் . இந்த விஷயமும் முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது . இதன் பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமனம் செய்யப்பட்ட அனைவரின் விவரங்களை கேட்டறிந்திருக்கிறார் . முதல்வர் ஸ்டாலின் இதன் பின்னர் தான் இந்த ஆணையை ரத்துசெய்ய போக்குவரத்து துறை செயலர் கோபாலுக்கு உத்தரவிட்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .