குடியரசுத் தலைவராகிறார் Dr. தமிழிசை சௌந்தரராஜன் ?

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் பாஜக சார்பாக முன்னிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் உலவிக்கொண்டு இருக்கின்றன. டெல்லி வட்டாரத்திலும், பாஜக வட்டாரத்திலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இந்த தகவல்கள் உலவிக்கொண்டு இருக்குது

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்காக பல்வேறு மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் மிக தீவிரமாக தயாராகிக்கிட்டு இருக்கிறாங்க.

இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த சில மாதங்களில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017 இந்தியாவின் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்.

பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார். இவருக்கு ஆதரவாக 65.65 சதவிகித வாக்குகள் விழுந்தன. இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் களமிறக்கிய மீரா குமாருக்கு ஆதரவாக 34.35% வாக்குகள் விழுந்தன. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என்று மொத்தம் 2,930 வாக்குகள் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவாக விழுந்தது. மீரா குமாருக்கு 1,844 வாக்குகள் விழுந்தன.

இந்த தேர்தலில் 77 வாக்குகள் செல்லாத வாக்குகள் ஆயிடுச்சு.. இந்த நிலையில்தான் இந்த வருடம் நடக்க உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக பொதுவான ஒரு வேட்பாளரை களமிறக்கும் முயற்சியில் இருக்கிறது. ஏன்னா பாஜக இப்போது சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியில் இல்லை. பல மாநிலங்களில் பாஜகவின் எம்எல்ஏ பலம் சரிந்துவிட்டது.

அதேபோல் தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணியில் உள்ள அதிமுகவிடமும் எம்எல்ஏ பலம் குறைவாக உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்பாக பாஜகவின் எம்எல்ஏ மற்றும் ராஜ்யசபா எம்பி பலம் மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக ஒரு பொதுவான வேட்பாளரை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது எப்படி அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆனாரோ அதேபோல் எல்லா கட்சிகளும் ஏற்க கூடிய ஒருவரை.. எல்லோராலும் மதிக்கக்கூடிய .. பொதுவான ஒரு நபரை பாஜக முன்னிறுத்த உள்ளதாக கூறப்படுது. எல்லா கட்சிகளும் ஏற்கலைன்னாலும் எதிர் தரப்பில் இருக்கும் சில கட்சிகளாவது ஏற்கும் வகையில் ஒருவரை முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான தீவிர ஆலோசனையில் டெல்லி மேலிடம் ஈடுப்பட்டு வருகிறதாம்.

இந்த நிலையில்தான் அடுத்த குடியரசுத் தலைவராக பாஜக சார்பாக தமிழ்நாட்டை சேர்ந்த Dr தமிழிசை செளந்தர்ராஜனை முன்னிறுத்தப்படலாம்ங்கிற தகவல்கள் வந்துகிட்டு இருக்குது. தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்து தற்போது தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனை பாஜக குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவரின் தந்தை குமரி ஆனந்தன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

அதேபோல் தமிழிசை அரசியல் கடந்து பல கட்சிகளுடன் நட்பாக இருக்க கூடியவர். எதிர்க்கட்சிகள் தரப்பிலும் இணக்கத்தை காட்டக் கூடியவர். இதனால் அவரை பாஜக இந்த முறை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத பேச்சுக்கள் அடிபடுகின்றன. பெண் வேட்பாளர் என்பதால் இவருக்கான ஆதரவை எதிர் தரப்பிலும் பெற முடியும்.

பல்வேறு மாநில அரசியல் கட்சிகளுடன் இவர் நல்ல நட்பு கொண்டவர். இதனால் இவரை முன்னிறுத்தினால் நன்றாக இருக்கும்.. எதிர்க்கட்சிகளில் இருக்கும் சிலரும் கூட தங்களுக்கு ஆதரவாக இதில் வாக்களிப்பார்கள் என்று பாஜக கருதுவதாக செய்தி ஒன்று உலவி வருது. தென்னிந்திய பெண் என்பதால் தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருக்கும் மாநில கட்சிகளில் இருந்தும் இவருக்கான ஆதரவை பெற முடியும் என்று “மேலிடம்” கணக்கு போடுவதாக தகவல்கள் வருகின்றன.திமுக பாஜக கூட்டணியில இல்லைன்னாலும் Dr தமிழிசை சௌந்தரராஜனை நிறுத்துனா திமுக எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ஓட்டு மொத்தமும் தமிழிசைக்கு கிடைச்சிடும்னு பாஜக கணக்கு போடுது.ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளாவில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஓட்டும் தமிழிசைக்கு கிடைக்கும்.பாஜக முயற்சி வெற்றி பெறுமானால் தமிழிசை குடியரசு தலைவராவது உறுதி.