பாமகவில் மீண்டும் தி.வேல்முருகன்.???

பாமகவில் மீண்டும் தி.வேல்முருகன்.??? டாக்டர் ராமதாஸூக்கு நெருக்கமானவர்கள் தூது.வருகிறார்களாம்..

கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் பாமகவில் இணைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், தன்னையும் பலர் அனுகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர் என்றும், ஆனால் இதுவரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசிடமிருந்து நேரடியாக அழைப்பு வரவில்லை என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல் முருகன் தெரிவிச்சிருக்காரு.

கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் பாமகவில் இணைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், தன்னையும் பலர் அணுகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய வேண்டும்னு அழைப்பு விடுத்தாங்க என்றும், ஆனால் இதுவரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசிடமிருந்து நேரடியாக அழைப்பு வரவில்லை என்றும் தவக தி.வேல் முருகன் தெரிவிச்சிருக்காரு.

1980களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக தான் நடத்திய வீரியமிக்க போராட்டத்தின் மூலம் தமிழகத்தின் சமூகநீதி காவலராக  அறியப்பட்டவர் தான் பாமக நிறுவனர் ராமதாஸ்.  கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் வன்னியர் சமுதாயம் பின்தங்கி கிடப்பதைக் கண்ட அவர் வன்னியர் சமுதாய அமைப்புகளை ஒன்று திரட்டி 1980 ஜூலை 20-ஆம் தேதி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தினார். அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வன்னிய சமுதாயத்திற்கு மாநிலத்தில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு, மத்தியில் 2 சதவீத தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீட்டை 18லிருந்து 22 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் நடத்திய போராட்டம் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை பெற்றுத் தந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஆனால் அரசியல் களத்தில் பாமக என்ற கட்சியை தொடங்கிய ராமதாஸ், காலப்போக்கில் சமூக நீதி மக்கள் நலன் என அனைத்தையும் கடந்து அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்ததால் கட்சியின் தலைமை மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக பாமக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. என்னதான் இட ஒதுக்கீடு போராட்டம், சமூக நீதி போராளி என ராமதாஸ் புகழப்பட்டாலும் ஒட்டுமொத்த வன்னியர்களின் ஆதரவும் அவருக்கு இல்லை என்றே சொல்லலாம். எந்த வன்னியர்களுக்காக கட்சியை ஆரம்பித்து தேர்தல் அரசியலுக்கு வந்தோமோ, அதே வன்னியர்களை முழுவதுமாக பாமக என்ற குடையின் கீழ் அணிதிரட்ட முடியவில்லையே என்ற ஏக்கம் நீண்ட காலமக ராமதாசிடம் இருந்து வருகிறது. ஆனால் தற்போது அந்த ஏக்கப் பலமடங்கு அதிகரிச்சிருக்குது.

அந்தக் கட்சி எடுத்த தவறான கொள்கை முடிவுகள், கூட்டணி நிலவரங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை, ராமதாஸ் சுயநல அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்,   வன்னிய மக்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்து சொத்து சேர்க்கிறார் என்று விமர்சனம் அவர்மீது இருந்து வருகிறது. திமுக அதிமுக என்ற கட்சிகளையும் தாண்டி  தமிழகத்தில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக பாமக ஒரு காலத்தில் இருந்த நிலையில், தற்போது  கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறியுள்ளது. பாமகவின் இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுது. சமூகநீதி பேசிய ராமதாஸ் சாதி அரசியலை தீவிரமாக கையில் எடுத்ததுதான் வீழ்ச்சிக்கு காரணம் என்றும், தலித் மக்கள் விரோத அரசியலில் தீவிரம் காட்டியதுதான் பாமகவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அரசியல் நோக்கர்கள் பல பல காரணங்களை சொல்லிகிட்டு வர்றாங்க. இன்னும் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த முன்னணி  தலைவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டதே பாமகவின் வீழ்ச்சிக்கு காரணம்னு அடுக்கடுக்கான புகார்களைச் சொல்றாங்க.

இந்நிலையில்தான் வன்னியர் சமுதாய மக்களின் ஆதரவை இழந்து மற்ற சமுதாயத்தின் ஆதரவை பெற முடியாமல் இருப்பதை காட்டிலும், மீண்டும் பழைய முறையை கையில் எடுப்பதே நல்லது என்ற முடிவுக்கு ராமதாஸ் வந்திருக்கிறார்னு சொல்லப்படுது. ஒருங்கிணைந்த பழைய பாமகவை மீண்டும் பார்க்க ராமதாஸ் ஆசைப்படுகிறார் என்றும், அதற்காகத்தான் பழைய பாமக தலைவர்களை எல்லாம் மீண்டும் தன்னோடு சேர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்றும் பேசப்படுது. அந்த வரிசையில் முதல் ஆளாக பேராசிரியர் தீரன் கட்சிகள் இணைந்து இருக்கிறார். தீரனை போலவே கட்சியிலிருந்து வெளியேறிய தீ வேல்முருகன் போன்றவர்களும் பாமகவுக்கு  திரும்ப வேண்டும் என்பதுதான் ராமதாசின் விருப்பம் என்றும் சொல்லப்படுது.

பாமகவில் கோலோச்சிய வேல் முருகன்.. 

ஒருகாலத்தில் பாமகவின் ஆற்றல்மிக்க தளபதிகளில் ஒருவராக இருந்தவர்தான் தி.வேல்முருகன். தனது சொல்வன்மை மிக்க பேச்சாற்றலால் வன்னிய இளைஞர்களின் விருப்பத்திற்குரிய தளபதியாக இருந்து வந்தார் அவர். திடீரென பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது அப்போது பாமகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, அந்த அதிர்வு இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்குது. ஆம்.. கடந்த 10 ஆண்டுகளாக தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற கட்சியை தொடங்கி  தமிழக மக்களின் வாழ்வுரிமை பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருவதுடன், வட மாவட்டங்களில் பாமகவுக்கு எதிராக வன்னிய மக்களின் வாக்குகளை அறுவடை செய்யும் தலைவராக இருந்துவருகிறார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது மீண்டும் பாமகவில் இணைவீர்களா என முன் வைக்கப்பட்ட கேள்விக்கு, அதற்காக ராமதாசுக்கு நெருக்கமான சிலர் தன்னிடம் பேசியதாகவும் சொன்னாரு. . அந்த பேட்டியில் அவர் என்ன சொல்லியிருந்தாருன்னா :- மருத்துவர் ராமதாசிடம் இருந்து நேரடியாக அழைப்பு வரலை, இந்த சமுதாயத்தில் இருக்கிற அவருக்கு நெருக்கமானவர்கள், அவரை கடுமையாக எதிர்த்து தனி கட்சியை தொடங்கி, மிக மோசமாக விமர்சனம் செய்த, ராமதாஸ் பற்றிய கட்டுரைகள் வெளியீட்டு, புத்தகம் வெளியிட்ட பேராசிரியர் தீரன் போன்றவர்களையே அவர்கள் அழைத்தார்கள், அவரும்  மீண்டும் சேர்ந்திருக்கிறார் நீங்கள் மட்டும் ஏன் விலகி இருக்கிறீர்கள். கட்சியிலிருந்து வெளியேறிய எல்லா தலைவர்களையும் அழைக்கிறார்கள், அந்த வகையில் நாங்கள் உங்களை அய்யாவிடம் அழைத்துச் செல்கிறோம் நீங்கள் வாருங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்று பேசினார்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நானாக வெளியேறவில்லை, அவர்கள்தான் என்னை வெளியேற்றினார்கள்.

வெளியேற்றிய பிறகு அந்த இடத்திற்கு நான் வருவது சரிவராது எனக் கூறி விட்டேன். ஆனாலும் மருத்துவர் ராமதாசுக்கு வேண்டப்பட்ட மிக நெருக்கமான ஒருவர் என்னிடம் பேசினார். அதேபோல் திரைத்துறையை சேர்ந்த பிரபல இயக்குனர் ஒருவர்  என்னை அணுகினார், ஒருத்தருக்குள் ஒருத்தர் ஒரே சாதிக்குள் ஏன் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் வாருங்கள் நான் அய்யாவிடம் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னாரு அவர்களிடமும்,  நானாக கட்சியிலிருந்து வெளியேறலை, கட்சிக்கோ கட்சி தலைமைக்கும் துரோகம் செய்து விட்டு வெளியேறலை, அவர்கள் என்னுடைய வளர்ச்சியை, இளைஞர்கள் எனக்கு பின்னால் அணி திரள்வதை, பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து என்னுடைய செய்திகள் வருவதை சகித்துக் கொள்ள முடியாமல் என்னை வெளியேற்றி விட்டார்கள். எனவே மீண்டும் இந்த முயற்சிகள் சரிவராது என்னை கட்சியில் இணைப்பது தொடர்பாக  அணுக வேண்டாம் என கூறிவிட்டேன்னு வேல்முருகன் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் ராமதாஸ் விடுவதாக இல்லை.அவரே வேல்முருகனிடம் நேரிடையாக அழைப்பு விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆனா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கிட்ட கருத்து கேக்கணும்.இதெல்லாம் நடக்கிற கதையா தெரியலை.தனிக்கட்சி ஆரம்பித்து திமுக கூட்டணியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகியிருக்கும் வேல்முருகன் மனசு மாறுவாரா என்பது சந்தேகமே?